தொப்பை குறைய உடற்பயிற்சி1

பெண்களை பொறுத்தவரை 30 வயதுக்கு மேல் ஒவ்வொரு பிரச்சனையாக தலை காட்டும். சிலருக்கு உடல் எடை கூடும். குறிப்பாக வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேர்ந்து பெரிதாகி விடும். வயிற்றைக் குறைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் ஓயாத வேலைகளுக்கு நடுவே உடற்பயிற்சிகள் செய்ய நேரம் இருக்காது.

இப்படிப்பட்டவர்களுக்கு தினமும் 15 நிமிடங்கள் ஒதுக்கினால் போதும். இடை எடையையும் குறைக்க முடியும்.

சைக்கிளிங் (Cycling)....

தரையில் நேராகப் படுக்கவும். இரண்டு கால்களையும் உள்நோக்கி இழுத்துக் கொள்ளவும். இப்போது வலது காலை மட்டும் சைக்கிள் ஓட்டுவது போலப் பத்து முறை சுழற்றவும். பிறகு இதே போன்று கால்களை மாற்றிச் செய்யவும். இது மேல் வயிறு மற்றும் அடி வயிற்றுக்கு அழுத்தம் கொடுத்து வயிற்றுப்பகுதித் தசைகளுக்கு வலிமை சேர்க்கும்.

பலன்.... ஆறுமாதம் இப்படித் தொடர்ந்து செய்தால் உடல் எடை குறையும்.

ஆல்டர்நேட் டோ டச்(altermate toetouch).....

தரையில் படுக்கவும். இடது கால் தரையில் இருக்க வலது காலை எவ்வளவு முயுமோ அந்த அளவுக்கு உயர்த்த வேண்டும். அப்போது இடது கையால் வலது காலைத் தொட முயற்சி செய்யுங்கள். இந்த முயற்சி குறைந்து மூன்று நான்கு வினாடிகளுக்கு நீடிக்க வேண்டும். இப்போது கால் கைகளை மாற்றி இதே போல மீண்டும் செய்ய வேண்டும். இது போன்று மாற்றி மாற்றி பத்து முறை செய்ய வேண்டும்.

பலன்.... தொப்பை குறைவதுடன் முதுகு எலுப்பும் வலிமை பெறும்.