பெண்களுக்கு திருமணத்திற்கு பிறகு உடல் எடை அதிகரிப்பதற்கான காரணம்

எப்போதும் `ஸ்லிம்’ ஆக இருக்க வேண்டும் என்று உடல் அழகை கட்டுக்கோப்பாக வைக்கும் பெண்கள்கூட, திருமணத்திற்கு பிறகு எக்குதப்பாக சதை போட்டுவிடுகிறார்கள். அதுவும், ஒரு குழந்தை பிறந்துவிட்டால் இன்னமும் கூடுதலாக குண்டாகிவிடுகிறார்கள். ஏன்… ஒரு பெண் திருமணம் ஆனபிறகு மட்டும் குண்டாகிறாள்? என்கிற நோக்கில் ஆஸ்திரேலியாவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.

10 வருடங்களாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 18 முதல் 23 வயதுவரை உள்ள சுமார் 6,500 ஆஸ்திரேலிய பெண்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் திருமணத்திற்கு முன்பு என்ன உடல்நிலையில் இருந்தார்கள்? திருமணத்திற்கு பிறகும், குழந்தை பிறந்த பிறகும் அவர்களது உடல்நிலையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டன? என்று பல விஷயங்களை ஆய்வாளர்கள் ஆராய்ந்தனர்.

ஆய்வின் முடிவில், திருமணம் செய்து கொள்ளாத பெண்கள் 10 ஆண்டுகளில் 11 பவுண்டும் (ஒரு பவுண்ட் என்பது சுமார் 450 கிலோகிராம்), திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக்கொள்ளாத பெண்கள் 15 பவுண்டும், திருமணமாகி குழந்தையும் பெற்றுக்கொண்ட பெண்கள் 20 பவுண்டும் கூடுதல் உடல் எடை பெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஒரு பெண்ணின் அதிகப்படியான உடல் எடை அதிகரிப்பு, அவள் திருமணம் செய்து கொண்ட பின்னர்தான் ஆரம்பமாகிறது. முதல் குழந்தை பிறந்த பிறகு அவளது உடல் எடை இன்னும் அதிகமாகிறது. அதே பெண் இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ளும்போதும் அவளது உடல் எடை அதிகரிக்கிறது. ஆனால், இந்த உடல் எடை முதல் குழந்தை பெற்றபோது அதிகரித்த உடல் எடையைவிட சற்று குறைந்ததாகும்.

இந்த உடல் எடை அதிகரிப்பு, அந்த பெண்களுக்கு எதிர்கால வாழ்க்கையில் பல பிரச்சினைகளை கொண்டு வந்துவிடுகிறது. அதை தவிர்க்க வேண்டும் என்றால் அவர்களது உணவு பழக்கவழக்கத்தில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும். இப்போதெல்லாம், பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் பாஸ்ட் புட் வகைகளைத்தான் பெண்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள்.

இதனால் அவர்களது உடல் எடை அதிகப்படியாக கூடுதலாகிறது. மேலும், இன்றைய பெண்களுக்கு உடல் உழைப்பும் குறைந்துவிட்டது. அதிக நேரம் தூங்குகிறார்கள். இதுவும் அவர்களது உடல் எடை அதிகரிக்க மற்றொரு முக்கிய காரணம். அதனால், தினமும் முன்றுவேளை உட்கொள்ளும் உணவின் அளவை குறைப்பதோடு, தேவையான உடற்பயிற்சியையும் தினமும் செய்து வந்தால், அதிகப்படியான உடல் எடையை குறைக்கலாம்.  

கலோரிகள் அதிகம் கொண்ட உணவுகள்

உணவு என்பது நாம் வாழ்வதற்கு தேவைப்படும் ஒரு முக்கிய பொருளாகும். அது மருந்தை போலத்தான். அதிலும் ஆரோக்கியமான உணவை தேவையான அளவு உட்கொண்டால், உடல் ஆரோக்கியமாக விளங்கும். அதுவே ஆரோக்கியமில்லாத உணவுகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால், உடலில் பல வியாதிகள் வந்து சேரும்.

சில இந்திய உணவு வகைகளில் காய்கறிகள், முழு தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் அவரைகள் போன்ற சத்துள்ள பொருட்களை சேர்ப்பதால், அவைகள் ஆரோக்கியமான உணவுகளாக விளங்கும். இருப்பினும் நம் வட்டார வழக்கப்படி சமைக்கும் போது, அந்த உணவை எப்படி சமைக்கிறோமோ, அதனை பொறுத்து கலோரிகள் கூடி விடும்.

சில நேரங்களில் உணவுகளில் க்ரீம், நெய், வெண்ணெய் மற்றும் சர்க்கரை சேர்ப்பதாலும் கூட கலோரிகள் அளவுக்கு அதிகமாக கூடிவிடும். ஆரோக்கியமான இதயத்தை பெறுவதற்கும், உடல் எடை அதிகரிக்காமல் இருக்கவும் வேண்டுமானால், கூடுதல் கலோரிகளை கொண்ட சில இந்திய உணவுகளை தவிர்க்க வேண்டும். அப்படிப்பட்ட உணவுகள் என்ன என்று உங்களுக்கு தெரியுமா? இதோ அந்த உணவுகளின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!

கோழி குருமா :

மிதமான க்ரீமி வகை உணவான கோழி குருமா பல இந்திய வீடுகளில் தயார் செய்யப்படும் உணவாகும். கோழி, இஞ்சி பூண்டு பேஸ்ட், வெண்ணெய் மற்றும் நெய் ஊற்றி செய்யப்படுவது தான் இந்த உணவு. இந்த உணவில் தோராயமாக 800-870 கிலோ கலோரிகள் இருக்கும்.

சமோசா :

சமோசாவானது உருளைக் கிழங்கு, வெங்காயம் மற்றும் பட்டாணிகள் சேர்த்து செய்யப்படும். மிகவும் புகழ் பெற்ற நொறுக்குத் தீனியாக விளங்கும் சமோசா, மாலை நேரங்களில் உண்ணப்படும். இதனை தயாரிக்க உருளைக்கிழங்கு மசாலா, கோழி (அரிதாக), காய்கறி, எண்ணெய் மற்றும் உப்பு தேவைப்படும்.

இதனால் உட்கொள்ளும் கலோரிகளின் அளவு: 2 சைவ சமோசாவில் தோராயமாக 260 கிலோ கலோரிகள். அதுவே 2 அசைவ சமோசாவில் 320 கிலோ கலோரிகள் இருக்கும்.

தந்தூரி சிக்கன் :

தந்தூரி சிக்கன் என்பது மிகவும் புகழ் பெற்ற இந்திய உணவாகும். வறுத்த கோழி, தயிர் மற்றும் மசாலாக்களை கொண்டு தயார் செய்யப்படும் உணவு இது.

இதன் மூலம் உட்கொள்ளும் கலோரிகளின் அளவு: ஒரு கோழியின் காலில் தோராயமாக 264-300 கிலோ கலோரிகள் இருக்கும்.

மெட்ராஸ் சிக்கன் :

சிக்கன், பன்றிக்கறி, மாட்டிறைச்சி, ஆட்டுக்கறி மற்றும் கொத்துக்கறி போன்றவைகளை வைத்து இந்த காரமான குழம்பை தயாரிக்கலாம்.

உட்கொள்ளும் கலோரிகளின் அளவு: 100-200 கிராமில் தோராயமாக 450-500 கிலோ கலோரிகள் இருக்கும்.

புலாவ் :

சாதத்தில் சுவையை சேர்க்க மசாலாக்கள் சேர்த்து, அதில் கோழி, காய்கறி அல்லது மீனின் ஸ்டாக் போன்றவற்றை சேர்த்து சமைக்கும் உணவு தான் புலாவ்.

உட்கொள்ளும் கலோரிகளின் அளவு: ஒரு முறை உட்கொள்ளும் அளவில் தோராயமாக 449 கிலோ கலோரிகள் இருக்கும்.

வெங்காய பஜ்ஜி :

இந்த காரசாரமான இந்திய நொறுக்குத் தீனி உருளைக்கிழங்கு பஜ்ஜியை போன்றது தான். பல வடிவங்களில் செய்யப்படும் பஜ்ஜியை பல இந்திய உணவுகளை உண்ணும் போது அதனுடன் சேர்த்து உண்ணலாம். தனியாகவும் உண்ணக்கூடிய இந்த உணவு மிகவும் புகழ் பெற்ற உணவாக விளங்குகிறது.

சிக்கன் டிக்கா :

மசாலா வறுத்த கோழிகறி துண்டுகளை காரசாரமான கிரேவியில் போட்டு தயார் செய்வது தான் சிக்கன் டிக்கா மசாலா. காரசாரமான ஆரஞ்சு நிறமுடைய உணவு இது. இது நம் இந்திய பாரம்பரிய உணவே அல்ல. சிக்கன் டிக்காவை போல் உள்ளதால், முகலாய உணவு வகையான இது இப்பெயரை பெற்றது.

கோழி குழம்பு :

கோழி குழம்பு என்பது ஒரு பொதுவான சுவைமிக்க இந்திய உணவாகும். கோழி மற்றும் குழம்பு கலந்து செய்யப்படுவது தான் இந்த உணவு. இதில் சேர்க்கப்படும் மசாலா பொடிகளில் போக குங்குமப்பூ, இஞ்சி மற்றும் இதர பொருட்களையும் சேர்க்கலாம்.

மட்டன் ரோகன் ஜோஷ் :

ரோகன் ஜோஷ் என்ற வாசனையான மட்டன் உணவு புகழ் பெற்ற காஷ்மீரி உணவாகும். இதனை அதிக பட்ச வெப்பத்தில் சமைக்க வேண்டும்.

உட்கொள்ளும் கலோரிகளின் அளவு: ஒரு முறை பரிமாறும் அளவில் 589 கிலோ கலோரிகள் இருக்கும்.

மட்டன் கீமா :

குறும்பாட்டு கறியை கார சாரமான மசாலாக்கள் மற்றும் பச்சை பட்டாணியுடன் சேர்த்து சமைக்கப்படும் உணவு இது.

உட்கொள்ளும் கலோரிகளின் அளவு: ஒரு முறை பரிமாறும் அளவில் 502-562 கிலோ கலோரிகள் இருக்கும். 
 

சுறுசுறுப்புடன் செயல்பட காலை உணவுகள்


தொடங்கும் நாள் சிறந்ததாக இருக்க வேண்டுமெனில், அதற்கு காலையில் நல்ல ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும் என்று சொல்வார்கள். ஏனெனில் காலையில் நல்ல ஆரோக்கியமான மற்றும் உடலுக்கு தேவையான ஆற்றல் அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டால், உடலின் சக்தி சீராக இருந்து, உடல் நன்கு சுறுசுறுப்புடன் செயல்படும்.

அதிலும் காலையில் உண்ணும் உணவுகளில் கலோரி குறைவாகவும், எனர்ஜி அதிகமாகவும் இருக்கும் உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். இதனால், உணவுகள் சீக்கிரம் செரிமானமடையாமல், பொறுமையாகவும் ஆரோக்கியத்தை தரும் வகையிலும் செரிமானமாகும். குறிப்பாக நார்ச்சத்து அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது மிகவும் சிறந்தது.

முக்கியமாக காலையில் எழுந்ததும் உடலானது ஊட்டச்சத்துக்களை நாடும். ஆகவே புரோட்டீன் மற்றும் நார்ச்சத்துடன் கூடிய கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள் சிறந்ததாக இருக்கும். ஏனெனில் இத்தகைய உணவுகளை காலையில் சாப்பிட்டால், நாள் முழுவதும் சக்தியானது நிறைந்திருப்பதோடு, உடல் சோர்வடையாமலும் இருக்கும்.

மேலும் இத்தகைய உணவுகளை காலையில் செய்வது சாப்பிடுவது மிகவும் எளிது. இப்போது நாள் முழுவதும் ஆரோக்கியமாகவும், சோர்வில்லாமலும் செயல்பட எந்த உணவுகளை காலையில் சாப்பிட வேண்டும் என்று பார்ப்போம். உடல் ஆரோக்கியத்திற்கு காலையில் சாப்பிட வேண்டிய உணவுகள்!!!

தேன் காலையில் எழுந்ததும், வெதுவெதுப்பான நீரில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடித்தால், குடலியக்கம் சீராக இயங்குவதோடு, உடலும் ஒல்லியாகும் செரில் காலையில் சாப்பிட செரில் ஒரு சிறந்த உணவுப் பொருள். இதில் உள்ள கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து, வயிற்றை நிறைப்பதோடு.

அத்துடன் சேர்த்து சாப்பிடும் பொருட்களில் நிறைந்திருக்கும் இரும்புச்சத்து மற்றும் கால்சியம், நாள் முழுவதும் உடலில் ஊட்டச்சத்துக்களை நிறைத்திருக்கும். மூலிகை டீ டீயில் காபியை விட, குறைவான அளவில் காப்ஃபைன் இருப்பதோடு, அதிகப்படியான ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளது.

எனவே இது உடலை புத்துணர்ச்சியுடனும், அழகாகவும் வைத்துக் கொள்ள உதவும் முட்டை தினமும் காலையில் ஒரு முட்டை சாப்பிட்டால், அதில் உள்ள அதிகப்படியான புரோட்டீன் மற்றும் ஒமேகா3 ஃபேட்டி ஆசிட், நாள் முழுவதும் உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளும்.

பால் பாலில் நிறைய புரோட்டீன் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளதால், காலையில் ஒரு டம்ளர் பால் அல்லது செரிலுடன் பால் சேர்த்து சாப்பிடுவது நல்லது. தர்பூசணி காலையில் எழுந்ததும் தாகமாக இருக்கும்.

எனவே அப்போது நீர்ச்சத்து அதிகம் நிறைந்த தர்பூசணியை ஜுஸ் போட்டு சாப்பிட்டல், உடல் வறட்சி நீங்கி புத்துணர்வுடன் இருப்பதோடு, கலோரி குறைவாக இருப்பதால், உடல் எடையும் கட்டுப்பாட்டுடன் இருக்கும். ஓட்ஸ் தினமும் காலை உணவாக ஓட்ஸை சாப்பிட்டு வந்தால், வயிறு நிறைவதோடு, உடலில் உள்ள கொலஸ்ட்ரால் குறைந்து, இதயம் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

காபி காப்ஃபைன் அதிகம் நிறைந்துள்ள காபி ஆரோக்கியமானது என்று சொல்ல முடியாது. ஆனால், அதனைக் குடித்தால் ஒற்றைத் தலைவலியானது குணமாகும். மேலும் காபியின் மணமானது மனதை புத்துணர்ச்சியுடன் வைக்கும். சிட்ரஸ் பழங்கள் சிட்ரஸ் பழங்களை காலை உணவாக சாப்பிட்டால், அது எண்ணிலடங்கா ஆற்றலை உடலுக்கு கொடுக்கும்.

மேலும் இந்த பழங்கள் செரிமானத்திற்கு சிறந்ததோடு மட்டுமின்றி, இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் கோதுமை பிரட் நவதானியங்களால் ஆன பிரட்டை காலை உணவாக சாப்பிட்டால், அதில் உள்ள நார்ச்சத்து மற்றும் குறைவான கலோரி உள்ள கார்போஹைட்ரேட், சிறந்த காலை உணவாக இருப்பதோடு, உடல் ஆரோக்கியத்துடன் வயிறும் நிறையும், வாழைப்பழம் காலை எழும் போது உடல் ஆற்றலின்றி சோர்ந்து இருக்கும்.

அப்போது உடலுக்கு சிறந்த ஆற்றலை வாழைப்பழங்கள் கொடுக்கும். ஆளி விதை பொதுவாக காலை உணவில் ஆளி விதை சாப்பிடுவதை நினைக்கமாட்டோம். ஆனால் காலையில் ஒரு கையளவு ஆளி விதையை ஃபுரூட் சாலட் உடன் சாப்பிட்டால், உடலுக்கு வேண்டிய ஒமேகா3 ஃபேட்டி ஆசிட்டானது கிடைத்து, உடலானது நாள் முழுவதும் ஆரோக்கியமாக செயல்படும்.

தயிர் நிறைய மக்கள் காலையில் எழுந்ததும் பால் குடிக்கமாட்டார்கள். அத்தகையவர்களுக்காகத் தான் தயிர் உள்ளது. எனவே பாலுக்கு பதிலாக தயிரை சாப்பிட்டால், புரோட்டீன் மற்றும் கால்சியம் கிடைப்பதோடு, உடலுக்கு வேண்டிய நல்ல பாக்டீரியாக்களும் கிடைக்கும். கோதுமை முளை முளைக்கட்டிய கோதுமையில் வைட்டமின் ஈ மற்றும் ஃபோலேட் அதிக அளவில் நிறைந்துள்ளது.

எனவே இதனை சாப்பிட்டால், ஆரோக்கியமான முறையில் வயிறு நிறையும் பப்பாளி பப்பாளி ஒரு சிறந்த காலை உணவாகும். அதிலும் டயட் மேற்கொள்வோருக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இதில் உள்ள லைகோபைன் என்னும் ஆன்டிஆக்ஸிடன்ட், கொழுப்புக்களை கரைத்து விடும்.

ஆனால் இந்த பழத்தை கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது. பாதாம் டயட் மேற்கொள்வோர், காலையில் தினமும் ஒரு கையளவு பாதாம் சாப்பிட்டால், அதில் உள்ள ஒமேகா3 ஃபேட்டி ஆசிட், உடலுக்கு வேண்டிய ஆற்றலைக் கொடுக்கும். மேலும் இதில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளதால், முடியும் நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.

பெர்ரிப் பழங்கள் பெர்ரி சூப்பர் உணவுகளில் ஒன்றாகும். மேலும் இதில் நிறைந்துள்ள ஆன்டிஆக்ஸிடன்ட், புற்றுநோயை தடுப்பதோடு, உடல் முழுவதற்கும் ஆரோக்கியத்தை தருகிறது. எனவே காலை உணவாக பெர்ரிப்பழங்களைக் கொண்டு மில்க் ஷேக் போட்டு குடிக்கலாம்.

வேர்க்கடலை வெண்ணெய் வேர்க்கடலை வெண்ணெயானது மெதுவாக கார்போஹைட்ரேட்டை வெளிவிடுவதால், அது நீண்ட நேரம் பசிக்காமல் பார்த்துக் கொள்ளும். அதுமட்டுமின்றி, இது உடல் எடை குறையவும் உதவிபுரியும். ஆகவே வேர்க்கடலை வெண்ணெயை கோதுமை பிரட் உடன் சேர்த்து சாப்பிடலாம்.

தண்ணீர் காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிப்பது என்பது மிகவும் முக்கியமானது. ஏனெனில் அவை உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றிவிடும் என்பதாலேயே ஆகும். அதிலும் வெதுவெதுப்பான நீரை காலையில் பருகினால், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்கள் எளிதில் கரையும்.

ஆப்பிள் ஆப்பிளில் போதுமான அளவில் இரும்புச்சத்து மற்றும் உடலுக்கு ஆற்றலை அளிக்கும் இயற்கையான சர்க்கரையானது நிறைந்துள்ளது. எனவே இத்தகைய ஆப்பிளை காலையில் ஒன்றோ அல்லது செரிலுடன் சேர்த்தோ சாப்பிட்டால், மிகவும் நல்லது. 

நடப்பது நல்ல உடற்பயிற்சி


நடப்பது நல்ல உடற்பயிற்சியாகும். ஏனெனில் நடக்கும் போது இரத்த ஓட்டம் சீராக உடலில் எல்லா பாகங்களுக்கும் கிடைக்கிறது. இதனால் திசுக்களுக்குத் தேவையான சக்தி (கலோரிகள்) கிடைப்பதால் நமது உடல் நலம் நன்றாக இருக்கும்.

நாம் ஒரே இடத்தில் வெகுநேரம் உட்கார்ந்து கொண்டோ, நின்று கொண்டோ வேலை செய்பவராக இருந்தால், நமது கால்களில் உள்ள இரத்தக் குழாய்களுக்கு அங்குள்ள இரத்தத்தை திரும்பவும் இதயத்துக்கு அனுப்ப போதுமான அளவு அழுத்தம் கிடைப்பதில்லை.

இதனால் இரத்த ஓட்டம் உடலின் எல்லா பாகங்களுக்கும் சீராக இருப்பதில்லை. நடக்கும் போது நமது கால்களில் உள்ள தசைகள் இயங்கி, அருகிலுள்ள இரத்தக் குழாய்களை அழுத்தி இரத்தத்தை இதயத்துக்கு அனுப்பத் தேவையான சக்தியை அளிக்கின்றன.

ஆகவே தினமும் 2 அல்லது 3 கி.மீட்டர் தூரம் நடப்பது மிகவும் சிறந்த உடற்பயிற்சி ஆகும். ஒரு மைல் தூரம் ஒடும்போது நாம் அதே அளவு தூரம் நடப்பதைக் காட்டிலும் அதிகமான கலோ¡¢களை எ¡¢க்கிறோம். இதனால் நமது உடல் எடை விரைவாகக் குறைகிறது என்று பலர் கூறுகிறார்கள்.

ஆனால் இந்த கருத்து தவறானது.நாம் ஒடினாலும், நடந்தாலும், நாம் செல்லும் தூரம் ஒன்றாக இருக்கும் பட்சத்தில் நாம் ஒரே அளவு சக்தியைத் தான் செலவு செய்கிறோம். இங்கு வேகம் ஒரு பொருட்டல்ல. ஆனால் 30 நிமிடங்கள் நாம் ஓடும் போது, அதே 30 நிமிடங்கள் நடப்பவரைக் காட்டிலும் அதிக தூரம் கடக்கிறோம்.

தூரம் அதிகமாவதால் நாம் செலவு செய்யும் சக்தியும், எரிக்கும் கலோரிகளும் அதிகமாகின்றன. எனவே அவரவர் வயது மற்றும் உடல் திறனுக் கேற்றவாறு நமது உடற்பயிற்சியை அமைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். 

தொப்பை குறைய உடற்பயிற்சி1

பெண்களை பொறுத்தவரை 30 வயதுக்கு மேல் ஒவ்வொரு பிரச்சனையாக தலை காட்டும். சிலருக்கு உடல் எடை கூடும். குறிப்பாக வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேர்ந்து பெரிதாகி விடும். வயிற்றைக் குறைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் ஓயாத வேலைகளுக்கு நடுவே உடற்பயிற்சிகள் செய்ய நேரம் இருக்காது.

இப்படிப்பட்டவர்களுக்கு தினமும் 15 நிமிடங்கள் ஒதுக்கினால் போதும். இடை எடையையும் குறைக்க முடியும்.

சைக்கிளிங் (Cycling)....

தரையில் நேராகப் படுக்கவும். இரண்டு கால்களையும் உள்நோக்கி இழுத்துக் கொள்ளவும். இப்போது வலது காலை மட்டும் சைக்கிள் ஓட்டுவது போலப் பத்து முறை சுழற்றவும். பிறகு இதே போன்று கால்களை மாற்றிச் செய்யவும். இது மேல் வயிறு மற்றும் அடி வயிற்றுக்கு அழுத்தம் கொடுத்து வயிற்றுப்பகுதித் தசைகளுக்கு வலிமை சேர்க்கும்.

பலன்.... ஆறுமாதம் இப்படித் தொடர்ந்து செய்தால் உடல் எடை குறையும்.

ஆல்டர்நேட் டோ டச்(altermate toetouch).....

தரையில் படுக்கவும். இடது கால் தரையில் இருக்க வலது காலை எவ்வளவு முயுமோ அந்த அளவுக்கு உயர்த்த வேண்டும். அப்போது இடது கையால் வலது காலைத் தொட முயற்சி செய்யுங்கள். இந்த முயற்சி குறைந்து மூன்று நான்கு வினாடிகளுக்கு நீடிக்க வேண்டும். இப்போது கால் கைகளை மாற்றி இதே போல மீண்டும் செய்ய வேண்டும். இது போன்று மாற்றி மாற்றி பத்து முறை செய்ய வேண்டும்.

பலன்.... தொப்பை குறைவதுடன் முதுகு எலுப்பும் வலிமை பெறும். 

ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி பலன்கள்


இந்த அவசர உலகத்தில் வேலை பார்க்க மட்டும் தான் பலருக்கும் நேரம் உள்ளது. ஆனால் உடலை பராமரிக்க நேரம் கிடைப்பதில்லை. மேலும் பார்க்கும் வேலைகளிலும் உடல் உழைப்பு இருப்பதில்லை. இதனால் பாதிப்படைய போவது உடல் தான்.

ஆகவே உடற்பயிற்சி செய்ய நேரம் ஒதுக்குவது மிகவும் அவசியமான ஒன்று. ஒழுங்கான உணவு மற்றும் உடற்பயிற்சியின் கலவை தான் நல்ல கட்டமைப்போடு இருக்கும் உடல். நாம் என்ன உணவு சாப்பிடுகிறோம் என்பதில் கவனமாக இருக்கும் போது உடற்பயிற்சியை மறந்தே விடுவோம். உணவிற்கு தரும் முக்கியத்துவத்தை போல் உடற்பயிற்சிக்கும் தர வேண்டும்.

உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பல வகையான தேவைபாடுகளுக்கு பல வகையான உடற்பயிற்சி உள்ளன. சில உடற்பயிற்சி ஆரோக்கியமான உடல் நலத்துக்கும், சில உடற்பயிற்சி நோயை குணப்படுத்தவும் உதவும். யோகா போன்ற சில உடற்பயிற்சிகள் மன நலனுக்காகவும் பயன்படுகிறது. இப்போது அத்தகைய உடற் பயிற்சியினால் உடலுக்கு ஏற்படும் நன்மைகளை பார்க்கலாமா!

மன ஆரோக்கியம் : தினசரி 30-45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தால், உடல் மற்றும் மூளை புத்துணர்வுடனும், ஆரோக்கியமாகவும் இருக்கும். மேலும் மன நிலையையும் நன்றாக வைக்க உதவும்.

மேலும் புதிய நியூரான்களை உருவாக்கவும் உடற்பயிற்சி உதவுகிறது. இதனால் அல்சைமர் அல்லது பார்கின்சன் போன்ற மனநோய்களிலிருந்து விடுபடலாம். குறிப்பாக, வாழ்க்கையின் பின்னாட்களில் மனநோய் ஏற்பட்டாலும், அதை தடுக்கும் ஆற்றல் உடற்பயிற்சிக்கு உண்டு.

உடலுறவில் குதூகலம்  : தினசரி உடற்பயிற்சி செய்தால், உடலின் வலிமையையும் ஆற்றலும் அதிகரிக்கும். அதனால் துணைவியின் முன், ஆண்மையுடன் காட்சி அளிப்பீர்கள். மேலும் உடலுறவும் இன்பம் மிக்கதாக அமையும். சீரான முறையில் உடற்பயிற்சி செய்தால் பெண்களை கவர்வது மட்டுமல்லாமல், ஆண்மை குறைவு போன்றவற்றையும் தடுக்கலாம்.

பதற்றம்  : உடற்பயிற்சி செய்தால் பதற்றத்தின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். மனம் அமைதியாய் இருக்கும். இதனால் தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன் கவலைகளும் நீங்கும்.

இதயம் சீராக  : உடற்பயிற்சி செய்தால், பல விதமான நோய்களில் இருந்து இதயம் பாதுகாப்பாக இருக்கும். பரம்பரையாக இதய நோய் இருந்தால், உடற்பயிற்சி செய்வதால் நீண்ட காலத்திற்கு ஆரோக்கியமான வாழ்வை வாழலாம். அதனால் உடற்பயிற்சி செய்து, இதய நோய்களை விட்டு விலகி இருக்கவும்.

உடல் எடை  : ஆரோக்கியமான உடல் எடையோடு இருப்பது தான் அனைவரின் கனவு. இதை அடைவதற்கு உடற்பயிற்சி மிகவும் உறுதுணையாக இருக்கிறது. தேவையான உடற்பயிற்சியுடன் சரியான உணவை உட்கொண்டால், உடல் கட்டமைப்போடு அழகாக காட்சியளிக்கும்.

நீரிழிவு  : உடல் எடையை குறைக்க மட்டும் உடற்பயிற்சி உதவுவதில்லை, அதிக எடை உள்ள வர்களுக்கு ஏற்படும் சர்க்கரை நோயை தடுக்கவும் உதவியாக இருக்கும். அதிலும் தினசரி உடற்பயிற்சி செய்தால், ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.

ரத்த அழுத்தம்  : உயர் இரத்த அழுத்தத்தை `அமைதியான கொலைகாரன்' என்றும் அழைப்பர். உயர் ரத்த அழுத்தம் வராமால் தடுக்க சீரான முறையில் உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்சி செய்வதன் மூலம் ரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். மேலும் தசைகளுக்கு அதிக ஆக்சிஜன் கிடைக்கும். இதனால் ரத்தக் குழாய்கள் ஓய்வெடுக்க உதவுவதால் இரத்த அழுத்தம் வருவதையும் தடுக்கும்.

உடல் உறுதி  : அவ்வப்போது உடற்பயிற்சி செய்வதால் அதிகப்படியான வியர்வையானது, நம்மை சோர்வடைய செய்யும். ஆனால் தொடர்ச்சியாக செய்தோமானால் உடல் உறுதி அதிகரித்து, அயர்ச்சியை குறைக்கும். நோய் தடுப்பாற்றல் தொடச்சியாக உடற்பயிற்சி செய்தால், நோய் தடுப்பாற்றல் அமைப்பு அதிகரிக்கும். இதனால் சளி, காய்ச்சல் போன்ற பல வகையான நோய்களில் இருந்தும் விடுபடலாம்.

ஆரோக்கியம்  : உடற்பயிற்சி, உடலை ஆரோக்கியத்தோடு வைத்திருக்கும். அதிலும் உடல் தடித்தல், சர்க்கரை நோய், இதய நோய், ரத்தக் கொதிப்பு மற்றும் வாதம் போன்ற பிரச்சனையில் இருந்து நம்மை பாதுகாக்கும். 

உடல் எடை குறைய ஜுஸ்கள்

உலகில் ஒருவருக்கு ஏற்படும் பிரச்சினைகளிலேயே மிகவும் தொல்லை தரும் பிரச்சினை என்றால் அது உடல் பருமன் தான். உடல் எடை அதிகம் இருந்தால், எந்த ஒரு வேலை யையும் சரியாகவும், நிம்ம தியாகவும் செய்ய முடியாது. எதை செய்தாலும் சிறிது நேரத்திலேயே மூச்சு வாங்கி, உடல் சோர்ந்துவிடும்.

எனவே பலர் இந்த உடல் எடையை சீக்கிரம் குறைக்க வேண்டுமென்று, தினமும் ஜிம் செல்வது, டயட் மேற்கொள்வது என்று இருக்கின்றனர். அதுமட்டுமின்றி, தற்போது உடல் எடையை குறைக்க பல்வேறு வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் ஜுஸ்கள் மூலம் எடையைக் குறைப்பது.

அது எப்படி ஜுஸ் குடிப்பதன் மூலம் குறைக்க முடியும் என்று கேட்பீர்கள். உண்மையிலேயே ஜுஸ்களை குடித்தால், ஜுஸ்கள் அடிக்கடி பசி ஏற்படுவதைக் குறைத்து, நீண்ட நேரம் வயிற்றினை நிறைத்து வைத்திருக்கும். இதனால் கண்ட கண்ட உணவுப் பொருட்களை சாப்பிடமாட்டோம்.

குறிப்பாக உடல் எடை குறைய வேண்டு மானால், முதலில் அனைவரும் உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் செயலின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். இதனால் நிச்சயம் விரைவில் உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காண முடியும். அதிலும் ஒரு வாரத்தில் உடல் எடையில் ஒரு குறிப்பிட்ட அளவில் மாற்றத்தைக் காணலாம். சரி, இப்போது உடல் எடையை குறைக்க உதவும் ஜுஸ்கள் சிலவற்றைப் பார்ப்போமா!!!

தர்பூசணி ஜுஸ் :

உடல் எடை குறைப்பில் தர்பூசணி ஜுஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. அதிலும் இதனை தினமும் உணவு உண்பதற்கு முன் ஒரு டம்ளர் குடித்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

அன்னாசி ஜுஸ் :

அன்னாசியை மட்டும் அரைத்தால், அது கெட்டியான ஜுஸ் போன்று இருக்கும். ஆகவே அதில் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து, பசியாக இருக்கும் நேரத்தில் குடித்தால், பசியானது உடனே அடங்கும்.

அவகேடோ ஜுஸ் :

நிறைய பேர் உடல் எடையை குறைக்க நினைக்கும் போது அவகேடோ சாப்பிடக்கூடாது என்று தவறான கருத்தைக் கொண்டுள்ளார்கள். ஆனால் உண்மையில் இது மிகவும் நல்லது. அதிலும் அவகேடோவை அரைத்து ஜுஸ் போட்டு, தேன் சேர்த்து குடித்து வந்தால், தொப்பை குறைந்து விடும்.

மேலும் இதில் நல்ல கொழுப்புக்கள் இருப்பதால், இது உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் சீராக இயங்க செய்வதோடு ரத்த சுத்திகரிப்பையும் சிறப்பாக மேற்கொள்கிறது. உடலுக்கு கூடுதல் சக்தியையும் வழங்குகிறது.

தக்காளி ஜுஸ் :

ஏழே நாட்களில் எடையில் நல்ல மாற்றம் வேண்டுமெனில், 3 தக்காளியை வேக வைத்து, அதனை அரைத்து, அதில் வெல்லம் சேர்த்து, தினமும் மூன்று வேளை குடித்து வர வேண்டும்.

எலுமிச்சை ஜுஸ் :

பொதுவாக எலுமிச்சை உடல் எடைக் குறைப்பில் முக்கிய பங்கினை வகிக்கிறது. அதிலும் ஏழே நாட்களில் எடையில் மாற்றம் தெரிய, எலுமிச்சை ஜுஸில் 1 சிட்டிகை உப்பு மற்றும் தேன் சேர்த்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலில் தங்கியுள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்துவிடும்.

கிரேப் புரூட் ஜுஸ் :

கிரேப் புரூட்டில் வைட்டமின்கள் மற்றும் நல்ல கொழுப்புக்கள் இருப்பதால், இதனைக் கொண்டு ஜுஸ் போட்டு குடித்து வந்தால், உடல் எடை குறைவதோடு, சருமமும் நன்கு பொலிவோடு இருக்கும்.

ஆரஞ்சு ஜுஸ் :

ஆரஞ்சு பழ ஜுஸை குடித்தாலும், எடையில் மாற்றம் தெரியும். அதிலும் ஆரஞ்சுப் பழ ஜுஸில் சிறிது தேன் சேர்த்து குடிக்க வேண்டும். குறிப்பாக வெதுவெதுப்பான தண்ணீரில் ஜுஸ் போட்டு குடிக்க வேண்டும்.

திராட்சை ஜுஸ் :

தினமும் காலையில் உணவு உண்பதற்கு முன்னர், ஒரு டம்ளர் திராட்சை ஜுஸ் குடித்து வந்தால், திராட்சை உடலில் தங்கியுள்ள நச்சுக்களை வெளி யேற்றி, விரைவில் உடல் எடையைக் குறைக்கும்.

கொய்யாப்பழ ஜுஸ் :

கொய்யாவில் வைட்டமின் `சி' அதிகம் உள்ளதால், இதனை ஜுஸ் போட்டு வாரத்திற்கு இரண்டு நாட்கள் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அது உடலில் உள்ள கொழுப்புக்களை கரைத்து விடும்.

பெர்ரிப் பழ ஜுஸ் :

பெர்ரிப் பழங்களைக் கொண்டு ஜுஸ் போட்டு குடித்து வந்தாலும், உடல் எடை குறையும். அதிலும் உணவு உண்பதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன், இந்த ஜுஸை குடிக்க வேண்டும். இதனால் அதிகளவு உணவு உண்பதைத் தவிர்க்கலாம். 
 

உடல் எடையை குறைக்கும் பயிற்சிகள்

உடல் எடையை குறைப்பதற்கு எவ்வளவு தான் முயற்சித்தாலும் சிலருக்கு எடை மட்டும் குறையாது. அதிலும் சிலர் எடை குறைக்க வேண்டுமென்று ஜிம் செல்வார்கள். ஆனால் அதனை எடை குறைக்க வேண்டுமென்ற ஆர்வத்தில் ஒரு வாரம் மட்டும் தான் செல்வோம். அதன் பின் அதுவும் இல்லை.

சிலரோ தினமும் காலையில் எழுந்ததும் வாக்கிங், ஜாக்கிங் போன்றவற்றையாவது தொடர்ந்து செய்யலாம் என்று முடிவெடுப்பார்கள். அதுவும் தோல்வியிலேயே முடியும். உடற்பயிற்சி கூடங்களுக்கு சென்று தான் உடற்பயிற்சி செய்ய வேண்டுமென்பது இல்லை. கீழே கொடுக்கப்பட்டுள்ள சில எளிய வழிமுறைகளை பின்பற்றி உடற்பயிற்சி செய்து வந்தால் உங்கள் உடல் எடை படிப்படியாக குறைவதை காணலாம்.

- அனைத்து வீடுகளிலும், அலுவலகத்திலும் மாடிகள் இருக்கும். அப்போது மேலே செல்வதற்கு, லிப்ட்டுகளை பயன்படுத்தாமல், மாடிப்படிக்கட்டுகளின் மூலம் செல்லலாம். இதுவும் உடல் எடையைக் குறைப்பதற்கான ஒரு வழியான உடற்பயிற்சி தான்.

- தொப்பையைக் குறைப்பதற்கு ஒரு சிறந்த உடற்பயிற்சி என்றால், முதலில் தரையில் படுத்துக் கொண்டு, கைகளை தலைக்கு பின்னால் பிடித்துக் கொண்டு, மெதுவாக முன்னால் எழ வேண்டும். அப்போது கால்களையும் முன்னோக்கி தூக்க வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து செய்தால், வயிற்றில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரையும், உடல் எடையும் படிப்படியாக குறையும்.

- தரையில் குப்புற படுத்துக் கொண்டு, கைகள் இரண்டையும் தரையில் பதித்து, கால் கட்டை விரல்கள் இரண்டையும் தரையில் ஊன்றி போலன்ஸ் செய்து உடலை மேலே தூக்கிக் கொண்டு, பின் மெதுவாக முன்புறமாக மூக்கு தரையில் தொட்டு படி குனிந்து, பின் மீண்டும் உடலே மேலே தூக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், கைகள் மற்றும் மார்புகள் நன்கு வலிமை பெறும்..

- ஜாக்கிங் என்று சொன்னதும் வெளியே தான் செல்ல வேண்டும் அல்லது உடற்பயிற்சி இயந்திரங்கள் மூலம் தான் செய்ய வேண்டும் என்பதில்லை. வீட்டில் டிவி பார்த்துக் கொண்டே, ஒரே இடத்தில் நின்று கொண்டே ஜாக்கிங் செய்யலாம்.

- இதுவும் ஒரு சிறுவயது விளையாட்டு தான். இதற்கு வெறும் கயிறு மட்டும் போதுமானது. ஆகவே வீட்டில் ஸ்கிப்பிங் கயிறு இருந்தால், அதனை நேரம் கிடைக்கும் போது, தோட்டம் அல்லது மாடியில் விளையாடலாம்.

- டேபிள் அல்லது கட்டிலில் கைகளை ஊற்றி, முன்னும் பின்னும் எழ வேண்டும். மற்றொன்று, கால்களை டேபிளின் மேல் வைத்துக் கொண்டு, கைகளை தரையில் வைத்துக் கொண்டு, மேலும் கீழம் எழ வேண்டும். இவ்வாறு சிறு பயிற்சிகளை செய்து வந்தால் உடல் எடை படிப்படியாக குறைவதை காணலாம். 

தொப்பையை குறைக்க வழிகள்

வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவது தான். இத்தகைய வாழ்க்கை முறையை யாரும் கட்டாயப்படுத்தி வாழ வேண்டும் என்று சொல்வதில்லை. நாமே தான் அத்தகைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை வெளியுலகத்திற்காக தேர்ந்தெடுத்து வாழ்ந்து வருகிறோம்.

மேலும் பலர் ஆரோக்கியமற்றது என்று தெரிந்தும் இன்றும் அதனைப் பின்பற்றுகின்றனர். இவ்வாறு தேர்ந்தெடுத்து பின்பற்றிவிட்டு, பின்னர் குத்துதே குடையுதே என்று பெரிதும் அவஸ்தைப்படுவோர் அதிகம். ஆனால் இத்தகைய தொப்பையை குறைப்பது என்பது மிகவும் எளிது தான்.

அதற்கு முதலில் செய்ய வேண்டியது எல்லாம் ஜங்க் உணவுகளை தவிர்த்து, தினமும் போதிய அளவில் உடற்பயிற்சி செய்வது தான். இதனால் அதிகப்படியான உடல் எடை குறைவதோடு, வயிற்றைச் சுற்றியிருக்கும் தொப்பையை எளிதில் குறைக்கலாம்.

ஏனெனில் உடற்பயிற்சியானது ஒரு குறிப்பிட்ட பாகத்திற்கு மட்டும் என்பதில்லை. பொதுவாக உடற்பயிற்சி செய்தால், உடல் முழுவதுமே அப்பயிற்சியில் ஈடுபடுவதால், நிச்சயம் உடல் எடையுடன், தொப்பை என்று சொல்லப்படும் பெல்லி குறையும். அதற்கு தினமும் உடற்பயிற்சியுடன், ஒருசில தொப்பையையும் மேற்கொள்ள வேண்டும்.

அத்தகைய டயட்டை கீழேக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து, உடற்பயிற்சியுடன் சேர்த்து, இதையும் பின்பற்றினால், நிச்சயம் உடல் எடையுடன், வயிற்றினைச் சுற்றியுள்ள தொப்பையையும் குறைக்க முடியும். சரி, அதைப் பார்ப்போமா!!!

1. தண்ணீர்: தினமும் குறைந்தது 78 டம்ளர் தண்ணீர் குடித்தால், உடல் வறட்சியில்லாமல் இருப்பதோடு, உடலில் தங்கியிருக்கும் நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும். மேலும் அவ்வப்போது சீரான இடைவெளியில் தண்ணீர் குடித்தால், உடலின் மெட்டபாலிசமானது அதிகரிக்கும். இதனால் வயிற்றைச் சுற்றி காணப்படும் பெல்லியும் குறைந்துவிடும்.

2. உப்பை:தவிர்க்கவும் உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் உப்பை அதிகம் சேர்த்தால், உடலில் தண்ணீரானது வெளியேறாமல், அதிகமாக தங்கிவிடும். எனவே உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பதை அறவே தவிர்க்க வேண்டும். வேண்டுமெனில் அதற்கு பதிலாக உணவில் சுவையைக் கூட்டுவதற்கு மூலிகைகள் மற்றும் மசாலாக்கள் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

தேன்: வயிற்றைச் சுற்றி தொப்பையை ஏற்படுவதற்கு, சர்க்கரையும் ஒரு காரணம். எனவே உண்ணும் உணவுப் பொருளில் சர்க்கரைக்கு பதிலாக தேனை சேர்த்துக் கொண்டால், தொப்பையை குறைவதோடு, உடல் எடையும் குறையும்.

3. பட்டை: தினமும் காலையில் காபி அல்லது டீ குடிக்கும் போது, அதில் சிறிது பட்டை தூளை சேர்த்து கலந்து குடித்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்கலாம். மேலும் உடல் எடையையும் ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம்.

4. நட்ஸ்: உடல் எடையை குறைக்க வேண்டுமெனில் உடனே கொழுப்புள்ள உணவுப் பொருட்கள் அனைத்தையும் நிறுத்திவிடுவோம். உண்மையில் அது தவறான கருத்து. ஏனெனில் உடலுக்கு ஆரோக்கியமான கொழுப்புக்கள் கிடைக்க வேண்டியது மிகவும் இன்றியமையாதது. அத்தகைய கொழுப்புக்கள் நட்ஸில் அதிகம் உள்ளது. எனவே ஸ்நாக்ஸ் நேரத்தில் வால்நட், பாதாம், வேர்க்கடலை போன்றவற்றை சாப்பிடுவது மிகவும் நல்லது.

5. அவகேடோ: அவகேடோவிலும் உடலுக்கு வேண்டிய கொழுப்பானது அதிகம் நிறைந்துள்ளது. மேலும் இதனை சாப்பிட்டால், அதில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள், வயிற்றை நிறைத்து, அடிக்கடி பசி ஏற்படுவதை தடுக்கும்.

6. சிட்ரஸ்: பழங்கள் பழங்களில் சிட்ரஸ் பழங்களை அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள வைட்டமின் சி, உடலில் தங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புக்களை கரைத்து வெளியேற்றிவிடும். இதனால் அழகான உடலை பெற முடியும்.

7. தயிர்: தினமும் உணவில் தயிரை சேர்த்து வந்தால், அதில் உள்ள குறைவான கலோரி மற்றும் ஊட்டசசத்துக்களால், எடை குறைவதோடு, தொப்பையும் குறைய ஆரம்பிக்கும்.

8. க்ரீன் டீ: அனைவருக்குமே க்ரீன் டீ குடித்தால், உடல் எடை குறையும் என்பது தெரியும். மேலும் பலரும் இந்த க்ரீன் டீயின் பலனைப் பெற்றுள்ளனர். எனவே தினமும் ஒரு டம்ளர் க்ரீன் டீ குடித்து வாருங்கள்.

9. சால்மன் மீன்: சால்மன் மீனில் ஒமேகா3 ஃபேட்டி ஆசிட் அதிகம் நிறைந்துள்ளது. இது உடலின் செயல்பாட்டிற்கு மிகவும் இன்றியமையாத ஒரு கொழுப்பாகும். ஆகவே இந்த மீனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், நாள் முழுவதும் வயிறு நிறைந்திருப்பதோடு, தொப்பை வராமலும் தடுக்கும்.

10. பெர்ரிப் பழங்கள்: பெர்ரிப் பழங்கள் கொழுப்பைக் குறைக்கும் ஒரு சிறந்த உணவுப் பொருள். ஏனெனில் அதில் வைட்டமின் சி என்னும் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளதால், பெல்லியால் அவஸ்தைப்படுபவர்கள், பெர்ரிப் பழங்களை அதிகம் சாப்பிட்டால், நல்ல பலனை விரைவில் பெறலாம்.

11. ப்ராக்கோலி: ப்ராக்கோலியிலும், மன அழுத்தத்தை அதிகரிக்கும் கார்டிசோலின் அளவைக் கட்டுப்படுத்தும் வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், இதனை சாப்பிட்டால், உடலில் உள்ள கொழுப்புக்களை ஆற்றலாக மாற்றும் பொருளானது உள்ளதால், பெல்லி பிரச்சனை உள்ளவர்கள் ப்ராக்கோலியை அதிகம் சாப்பிடுவது நல்லது.

12. எலுமிச்சை சாறு: வயிற்றைச் சுற்றியிருக்கும் தொப்பையை குறைக்க ஒரே சிறந்த வழியென்றால், தினமும் காலையில் எலுமிச்சை ஜுஸ் போட்டு குடிப்பது தான். அதிலும் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி, அதில் சிறிது உப்பு மற்றும் தேன் சேர்த்து குடித்தால், நிச்சயம் தொப்பை குறையும். அதிலும் இந்த செயலை தொடர்ந்து 1 மாதம் செய்து வந்தால், இதற்கான பலன் உடனே தெரியும்.

13. பூண்டு: எலுமிச்சை சாற்றினை விட இரண்டு மடங்கு அதிகமான சக்தியானது பூண்டில் உள்ளது. எனவே காலையில் 1 பல் பூண்டு சாப்பிட்டால், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்கள் கரைவதோடு, உடலில் இரத்த ஓட்டமும் சீராக இருக்கும்.

14. இஞ்சி: உணவுகளில் இஞ்சியை அதிகம் சேர்த்தால், அது தொப்பையை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் இதில் அதிகப்படியான ஆன்டிஆக்ஸிடன்ட்டுகளானது நிறைந்திருப்பதால், இன்சுலின் சுரப்பை சீராக வைத்து, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்.

மேற்கூறிய அனைத்தையும் நம்பிக்கையுடன் மேற்கொண்டால், நிச்சயம் தொப்பையை மற்றும் உடல் எடை விரைவில் குறையும். ஆனால் நம்பிக்கையின்றி மேற்கொண்டால், அதற்கான பலன் நிச்சயம் கிடைக்காது. 
 

டயட்டில் இல்லாமல் உடல் பருமனை குறைக்க வழிகள்

இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் என்பது பல பேர் சந்திக்கும் பிரச்சினை. அதனை கட்டுப்படுத்த பல கடுமையான டயட்டுக்களில் பலர் ஈடுபடுகின்றனர். ஏனெனில் கடுமையான டயட்டுக்களை பின்பற்றினால், உடல் எடையானது வேகமாக குறையும் என்ற எண்ணம் தான் காரணம்.

அதற்கு செய்ய வேண்டியதெல்லாம் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்வது தான். சரி, இப்போது உடல் எடையை குறைக்க கடுமையான டயட்டை பின்பற்றுவதை விட, கீழ் கூறிய எளிய வலியில்லா வழி முறைகளை பின்பற்றுங்கள். காலை உணவை தவிர்த்தால் கலோரிகளை எரிக்கலாம் என்று பலர் தவறாக நினைக்கின்றனர்.

ஆனால் அவ்வாறு தவிர்க்கும் போது ஏற்படும் பசியானது, மற்ற வேளைகளில் அதிகமாக உண்ணத் தூண்டும். காலை உணவை தவிர்ப்பவர்களை விட அதனை உண்ணுபவர்களுக்கே பி.எம்.ஐ குறைவாக இருக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது.

மேலும் பள்ளியிலோ அல்லது அலுவலகத்திலோ அவர்களால் தான் நன்றாக வேலை செய்ய முடியும். ஆகவே ஒரு கிண்ணம் நிறைய ஓட்ஸை நிறைத்து, அதில் பழங்கள் மற்றும் குறைவான கொழுப்பினை கொண்ட பால் பொருட்களை சேர்த்து காலையில் உண்டால் ஆரோக்கியமான நாள் தொடங்கும். சாப்பிடுவதற்கு 20 நிமிடம் என்று ஒரு நேரத்தை ஒதுக்கி மெதுவாக உண்ணுங்கள்.

இது டயட் மூலம் இல்லாமல் உடல் எடையை குறைக்க முதன்மையான வழியாகும். ஒவ்வொரு வாய் உணவையும் நிதானமாக மென்று உண்ணுங்கள். தினமும் இரவு ஒரு மணிநேரம் கூடுதலாக தூங்கினால், ஒரு வருடத்தில் 7 கிலோ வரை உடல் எடை குறையும் என்று மிஷிகன் பல்கலைகழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறியுள்ளார்.

இவரின் ஆராய்ச்சி படி, தூங்கும் போது உடல் எந்த வேளையில் ஈடுபடாமல் இருப்பதால், சுலபமாக 6 சதவீதம் வரை கலோரிகளை எரிக்கலாம். ஒவ்வொரு நாள் இரவும் ஒரே ஒரு காய்கறியை மட்டும் உண்ணுவதற்கு பதில் மூன்று காய்கறிகளை கலந்து உண்ணுங்கள். அதிக வகை இருந்தால் அதிகமாக உண்ணத் தூண்டும்.

அதனால் அதிகமான பழங்களையும், காய்கறிகளையும் உண்டு உடல் எடையை குறைக்கலாம். ஒவ்வொரு உணவிற்கு முன்பும் சூப் குடியுங்கள். இது பசியை ஆற்றி குறைவாக உண்ண வைக்கும். கெட்டியான சூப்பை தவிர்க்கவும். ஏனெனில் அதில் அதிக கொழுப்பும், கலோரிகளும் அடங்கியிருக்கும்.

உங்களுக்கு பிடித்த சிறிய அளவை கொண்ட பழைய ஆடைகளை கண் பார்வையில் படும்படி மாட்டி வைத்து, அதனை தினமும் பாருங்கள். இவ்வாறு சிறிய அளவுள்ள ஆடையை மனதில் வைத்து பாடுபட்டால், அதை அணியும் அளவிற்கு எடையை குறைக்கலாம். பிட்சா சாப்பிடும் போது மாமிசத்திற்கு பதில் காய்கறிகளை தேர்வு செய்யுங்கள்.

இதனாலும் கூட 100 கலோரிகளை எரிக்க முடியும். சோடா போன்ற சர்க்கரை கலந்த பானங்களை பருகுவதற்கு பதிலாக, தண்ணீர் அல்லது கலோரிகளற்ற பழச்சாறுகளை பருகுங்கள். இதனால் ஒரு 10 டீஸ்பூன் அளவிலான சர்க்கரையை தவிர்க்கலாம். குட்டையான அகலமான டம்ளரை பயன்படுத்துவதற்கு பதிலாக, நீளமான மெல்லிய டம்ளரை பயன்படுத்துங்கள்.

இது டயட் இருக்காமல், உங்கள் கலோரிகளை குறைக்க துணை புரியும். இதனை பின்பற்றினால் ஜுஸ், சோடா, ஒயின் அல்லது மற்ற பானங்கள் பருகும் அளவை 25%-30% வரை குறைக்கலாம். மதுபானத்தில் கார்போஹைட்ரேட் மற்றும் புரதத்தை விட, கலோரிகள் தான் அதிகமாக உள்ளது.

அது ஒருவரது சுய கட்டுப்பாட்டை இழக்க வைப்பதால் சிப்ஸ், நட்ஸ் மற்றும் இதர நொறுக்குத் தீனியை அதிக அளவில் உட்கொள்ள வைக்கும். தினமும் 1-2 டம்ளர் க்ரீன் டீ பருகுவதால் கூட உடல் எடை குறையும். யோகா செய்யும் பெண்கள், மற்றவர்களை விட குறைந்த எடையுடன் இருப்பார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது.

உடல் எடை குறைவிற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று புரியவில்லையா? சீரான முறையில் யோகா செய்பவர்களுக்கு சாப்பிடுவதில் ஒரு மன கட்டுப்பாடு ஏற்படும். உதாரணத்திற்கு, அதிக உணவு இருக்கும் ஒரு உணவகத்திற்கு சென்றாலும் கூட, அளவாக தான் உண்ணுவார்கள்.

ஏனெனில் யோகாவால் கிடைக்கும் அமைதி, உணவு உண்ணுவதில் கட்டுப்பாட்டை ஏற்படுத்தும். வாரம் ஐந்து முறையாவது வீட்டில் சமைத்து உண்ணுங்கள். நல்லபடியாக உடல் எடை குறைப்பவர்களின் இரகசியத்தில் இதுவும் ஒன்று என்று ஒரு ஆய்வு கூறுகிறது. இதை பற்றி யோசிப்பதை விட சமைப்பதே சுலபம்.

சிலர் இயற்கையாகவே ஒரு வாய் உணவிற்கும் அடுத்த வாய் உணவிற்கும் சிறிய இடைவேளை விடாமல் சாப்பிடுவார்கள். இந்த இடைவேளையில் பொறுமையாக இருங்கள், வேகமாக அடுத்த வாய் உணவை திணிக்காதீர்கள். பேசி கொண்டே பொறுமையாக தட்டை காலி செய்யுங்கள்.

இது வயிற்றை அடைக்காமல் பசியை போக்கும். பலர் இதை தவறவிடுவார்கள். நொறுக்குத் தீனி உண்ண தூண்டும் போது, சர்க்கரை இல்லாத வீரியம் அதிகமுள்ள சூயிங் கம்மை மெல்லுங்கள். வேலை முடிந்த நேரம், பார்ட்டிக்கு செல்லும் நேரம், தொலைகாட்சி பார்க்கும் நேரம் அல்லது இணையதளத்தில் உலாவும் நேரம் போன்றவைகள் எல்லாம் கணக்கில்லாமல் நொறுக்குத் தீனியை உண்ணத் தூண்டும் நேரமாகும்.

அதிலும் பிடித்த சுவையுள்ள சூயிங் கம்மை உண்ணுவதால் மற்ற நொறுக்குத் தீனிகளை மறப்பீர்கள். உணவு தட்டை 1-2 இன்ச்க்கு பதிலாக 10 இன்ச்சாக மாற்றுங்கள். தானாகவே குறைத்து உண்ண ஆரம்பித்து விடுவீர்கள். தட்டின் அளவு கூட கூட உண்ணும் உணவின் அளவும் அதிகரிக்கும் என்று கார்னெல் ப்ரையன் வான்சிக் கூறியுள்ளார்.

வேறு ஒன்றுமே செய்ய தோன்றவில்லையா? பேசாமல் நீங்கள் உண்ணும் அளவை 10%-20% வரை குறையுங்கள், உடல் எடையும் குறையும். வீட்டிலும் சரி, உணவகத்திலும் சரி நம் தேவைக்கு அதிகமாகவே பரிமாறப்படுகிறது. ஆகவே உண்ணும் உணவின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க அளந்து உண்ணுங்கள்.

உணவை நீண்ட நேரம் சமைத்தால், அதிலுள்ள ஊட்டச்சத்து அனைத்தும் வெளியேறிவிடும். போதுமான ஊட்டச்சத்து இல்லாத போது, உண்ட திருப்தி உங்களுக்கு ஏற்படாது. அதனால் மீண்டும் உண்ணத் தூண்டும். ஆகவே முடிந்த வரை பச்சை காய்கறிகள் மற்றும் சாலட்களை உண்ணுங்கள்.

அவித்த வேக வைத்த காய்கறிகள் மற்றும் மாமிசங்களை உட்கொள்ளுங்கள். குறிப்பாக மைக்ரோ ஓவனில் சமைப்பதை தவிர்க்கவும். உணவை உண்ணுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு பழங்களை உண்ணுங்கள். இதனால் பழங்கள் வேகமாக செரிமானம் ஆகும்.

வெறும் வயிற்றில் பழங்களை உண்டால், உடலின் நச்சுத்தன்மை நீங்கி, அதிக ஆற்றல் கிடைத்து உடல் எடை குறையும். கொழுப்புச்சத்து உள்ள மற்ற சாஸ்களை விட, தக்காளி சாஸில் கலோரிகளின் அளவு குறைவாக உள்ளது. இருப்பினும் அதனை அளவாக பயன்படுத்துங்கள்.

அதிக அளவில் சைவ உணவை உட்கொண்டால், அது உடல் எடை குறைய உதவி புரியும். அசைவ உணவை உண்ணுபவர்களை விட, சைவ உணவை உண்ணுபவர்கள் தான் வேகமாக ஒல்லியாவார்கள். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், பயறு வகைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. அதற்கு காரணம் அதில் அடங்கியுள்ள நார்ச்சத்து.

தினமும் 100 கலோரிகளை எரித்தால், எந்தவித டயட் முறையை பின்பற்றாமல் ஒரு வருடத்தில் 5 கிலோ வரை குறைக்கலாம். இந்த நடவடிக்கைகளில் ஏதாவது ஒன்றை பின்பற்றுங்கள்:

20 நிமிடங்களுக்கு 1 மைல் தூர நடை, 20 நிமிடங்களுக்கு தோட்டத்தில் களை எடுத்தல் அல்லது செடிகள் நடுதல், 20 நிமிடங்களுக்கு புல் தரையை ஒழுங்குபடுத்துதல், 20 நிமிடங்களுக்கு வீட்டை சுத்தப்படுத்துதல் அல்லது 10 நிமிடங்களுக்கு ஓடுதல். இரவு உணவை 8 மணிக்கு முன்பே உண்ணுங்கள்.

அதனால் உணவு நேரத்திற்கு முன்பு நொறுக்குத் தீனியை நொறுக்கமாட்டீர்கள். இதனை பின்பற்ற கஷ்டமாக இருந்தால், இரவு உணவை முடித்ததும் மூலிகை தேநீர் பருகுங்கள் அல்லது பற்களை துலக்குங்கள். இது கண்டதை உண்ண தூண்டாது.

தினமும் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதை நேர்மையாக எழுத ஆரம்பியுங்கள். இது தினமும் எவ்வளவு உண்ணுகிறீர்கள் என்பதை தெளிவாக எடுத்துரைக்கும். நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான காரியங்களில் இதுவும் ஒன்று. இதை பலர் செய்வதற்கு அலுத்து கொள்வதும் உண்டு.

அதற்கு காரணம் இதனை அவர்கள் ஒரு கடினமான வேலையாக பார்ப்பதால் தான். ஆனால் இதற்கு சில நிமிடங்களே ஆகும். சோடா குடிக்கும் பழக்கத்தை விட்டு விட்டீர்களா? அதிகமாக உண்ணும் பழக்கத்தை கைவிட்டு விட்டீர்களா? உங்களை நீங்களே பாராட்டி கொள்ளுங்கள். இதனால் உடல் எடையை குறைக்கும் பணியில் வெற்றிப் பெற போவது உறுதி.
 

பெண்களுக்கு ஜிம் பயிற்சி

ஜிம்களுக்கு சென்று உடற்பயிற்சி செய்வது ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருக்கும் நற்பயன்கள் தருவதாகும். ஆனால், இருபாலருக்கும் ஏற்ற சில உடற்பயிற்சிகள் உள்ளன. பெண்கள் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்வதால் அவர்களுடைய உடல் எடை வெகுவாக குறைந்து விடும்.

ஏரோபிக்ஸ், பளு தூக்குதல், கார்டியோ மற்றும் உடலை நீட்டி வளைத்து செய்யும் ஸ்ட்ரெச்சிங் போன்றவை பெண்களுக்கு மிகவும் ஏற்ற உடற்பயிற்சிகளாகும். இந்த உடற்பயிற்சிகள் பெண்களுக்கு வலிமையையும், வளைந்து கொடுக்கும் தன்மையையும் கொடுக்கின்றன.

மேலும், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் இவை உதவுகின்றன. இந்நாட்களில் மிகவும் முக்கியமாக செய்ய வேண்டிய விஷயங்களாக ஜிம் உடற்பயிற்சிகள் உள்ளன. எளிதாக செய்யக்கூடிய பயிற்சிகள் பலவும் இருப்பதால் பெண்கள் அதிக அளவில் உடலை வருத்தவும் தேவையில்லை.

முந்தைய தலைமுறைகளில் பெண்கள் அனுபவித்த பல உடல் ரீதியான வலிகளை போக்க இந்த உடற்பயிற்சிகள் உதவுகின்றன. உடல் வலிகள் போனாலும், மன அழுத்தத்திலிருந்து பெண்கள் இன்னும் மீளவில்லை. உடல் மற்றும் மனதனளவிலான ஆரோக்கியத்தைப் பராமரிக்க விரும்புபவர்கள் ஜிம்களில் உடற்பயிற்சி செய்ய வேண்டும். 
 

இடையின் அளவை குறைக்க உடற்பயிற்சி

முதலில் விரிப்பில் குப்புற படுக்கவும். பின்னர் காலின் முன் பாதத்தை தரையில் ஊன்றவும், கைகளை முட்டி வரை மடக்கி(படத்தில் உள்ளபடி)  தரையில் வைக்கவும். இப்போது உங்கள் உடல் எடை முழுவதுதையும் கை முட்டி, கால் முன்பாதம் தாங்கியிருக்க வேண்டும்.

தலையை தரையை பார்த்தபடி வைத்திருக்கவும். பின்னர் மெதுவாக உங்கள் உடலை மேலே தூக்கி பின் கீழே வரவும். இவ்வாறு இடைவிடாமல் 10 விநாடிகள் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது உடலை வளைக்க கூடாது. உடல் நேராக (படத்தில் உள்ளபடி) இருக்க வேண்டும். பின் சிறிது ஓய்வு எடுத்த பின்னர் மறுபடியும் செய்ய வேண்டும்.

இவ்வாறு தினமும் 5 நிமிடம் செய்தால் போதுமானது. ஒரு வாரத்தில் உங்கள் இடையின் அளவு 2 அங்குலம் குறைந்திருப்பதை காணலாம். இந்த உடற்பயிற்சி வயிறு மற்றும் பின் தசையை, உறுதிப்படுத்துகிறது. இந்த பயிற்சியை செய்யும் போது பின் தசைகள், கால்களின் தசைகளை கஷ்டப்படுத்தி செய்ய வேண்டும்.
 

தொப்பையை குறைக்க இயற்கை மருத்துவம்


தொப்பையை குறைக்க இயற்கையாக கிடைக்கும் பழங்கள், காய்கரிகள் மற்றும் கீரைகள் கொண்டு சுலபமாக செய்யலாம்.


நெல்லிக்காயை கொட்டை நீக்கி சுத்தம் செய்து, சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில்
குடித்து வந்தால் கொழுப்பு குறையும்.



அருகம்புல் சாரெடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர தொப்பை குறையும்.



கேரட்டுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் எடை குறையும்.



கரிசலாங்கண்ணி இலையை, பாசி பருப்புடன் சேர்த்து சமைத்து தினமும் சாப்பிட உடல் எடை குறையும்.



சோம்பை சுத்தம் செய்து தண்ணீர் விட்டு காய்ச்சி அடிக்கடி குடித்து வந்தால் உடல் எடை குறையும்.



மேலும் வெள்ளரி, நெல்லி, கோஸ், கொத்தமல்லி, முருங்கை, திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, பப்பாளி, அன்னாசி, எலுமிச்சை, கொய்யா,
புதினா, வெங்காயம், தர்பூசினி, பேரிக்காய், கறிவேப்பிலை, வாழைத்தண்டு இவைகளை சாறு எடுத்து குடிக்க உடல் எடை
குறையும்.


இவைகளை பின்பற்றி உங்களது தொப்பையை குறைத்திடுங்கள்.
 

உடல் எடையை குறைக்க ப்ளாக் டீ


பொதுவாக டயட்டில் இருப்போர் ப்ளாக் டீ தான் அதிகம் பருகுவார்கள், உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது ப்ளாக்
டீ.



* ப்ளாக் டீயில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து குடித்து வந்தால் உடலின் எனர்ஜி அதிகரிப்பதுடன், ஸ்டாமினா அதிகரிக்கும். மேலும்
அது உடலில் தங்கியுள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, உடல் எடை குறைய உதவியாக இருக்கும்.



* இதயத்திற்குள் இரத்த ஓட்டம் சீராக இருத்தல், கொழுப்புப் பொருட்களை இதயத்தில் அண்ட விடாமல் தடுத்தல், பல இதய
நோய்களைத் தவிர்த்தல், இதயத்தில் உள்ள தசைகளை ஆரோக்கியமாக வைத்திருத்தல் உள்ளிட்ட பல நன்மைகளுக்கு ப்ளாக் டீ
உதவுகிறது.



* ப்ளாக் டீயிலுள்ள பாலிஃபீனால்கள் புற்றுநோய் செல்களுக்கு எதிராக போராடுகிறது. ப்ளாக் டீயில் உள்ள TF-2 என்ற பொருள்
புற்றுநோய் செல்களை அழிப்பதுடன், பிற சாதாரண செல்கள் தாக்கப்படாமல் இருக்கவும் உதவுகிறது.



* ப்ளாக் டீயில் உள்ள டானின் என்ற வேதிப்பொருட்கள் நோய்கள் உருவாக காரணமான பலவிதமான வைரஸ் மற்றும்
பாக்டீரியாக்களை நம் உடலில் அண்டவிடாமல் தடுப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிரிக்கிறது.



* மூளையில் இரத்த ஓட்டத்தை அதிகமாக்குவதில் ப்ளாக் டீயில் உள்ள குறைந்த அளவிலான காப்ஃபைன் உதவுகிறது. தினமும் ப்ளாக்
டீயை தொடர்ந்து பருகுவதன் மூலம், நரம்பு மண்டலங்கள் வலுவாகும், ஞாபக சக்தி அதிகரிக்கும்.


* ப்ளாக் டீயைக் குடிப்பதால், நம் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புச் சத்துக்கள் குறைந்து விடுகிறது, உடல் எடையை
குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
 

எடை அதிகமுள்ள பெண்கள் கர்ப்ப காலத்தில் கவனிக்க வேண்டியவை


பெரும்பாலும் அதிக எடையுடைய பெண்கள் கருத்தரிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. ஒருவேளை அப்படி
கருத்தரித்துவிட்டால், சிலருக்கு கருச்சிதைவு, குறைப்பிரசவம் மற்றும் பிறப்புக் குறைபாடு போன்றவை ஏற்படும்.


ஆகவே தான்
மருத்துவர்கள் கர்ப்பமாவதற்கு முன்பு எடை அதிகம் இருந்தால், முதலில் உடல் எடையை குறைத்துவிட்டு, பின் கருத்தரிக்க
முயற்சிக்க சொல்கிறார்கள்.


• எடை அதிகமுள்ள கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் சுறுசுறுப்புடன் இருப்பதன் மூலம்
ஆரோக்கியமான பிரசவத்தைக் காணலாம். அதற்கு ஒருசில செயல்கள் மற்றும் உடற்பயிற்சிகளை தினமும் பின்பற்ற
வேண்டும்.



• கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான உணவுப் பொருட்களை தேர்ந்தெடுத்து சாப்பிட
வேண்டும். குறிப்பாக கால்சியம், புரோட்டீன் மற்றும் நல்ல கொழுப்புக்களை தினசரி உணவில் சேர்த்து வர வேண்டும்.



• கர்ப்ப காலத்தில் நிறைய உணவுப் பொருட்களின் மீது ஆசை அதிகரிக்கும்.
மேலும் அவை அனைத்தையும் சாப்பிட வேண்டுமென்று தோன்றும். இருப்பினும் உடல் எடை அதிகரிக்காமல் இருக்க
வேண்டுமானால், மனதில் அத்தகைய பொருட்களை சாப்பிடக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்துக் கொள்ளுங்கள்



• அதிக எடையுடைய கர்ப்பிணிகள் புரோட்டீன் உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள
வேண்டும். இதனால் உடலில் எனர்ஜியானது அதிகரித்து, நல்ல மனநிலையைக் கொடுக்கும்.


• முக்கியமாக கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளை மறந்துவிட வேண்டும். இதனால்
உடலில் கொழுப்புக்கள் சேர்வதை குறைப்பதுடன், உடலை ஆரோக்கியமாக வைத்துக்
கொள்ளலாம்.



• பசியை கட்டுப்படுத்த தண்ணீர் மிகவும் சிறந்தது. அதிலும் அதிக எடையுடைய
பெண்கள் எடை அதிகரிக்கக் கூடாது என்று நினைத்தால், ஒரு பௌல் ஸ்நாக்ஸ் உடன்
தண்ணீரை அதிகம் குடிப்பதன் மூலம் தடுக்கலாம்.



• கர்ப்பிணிகள் தங்கள் எடை அதிகரிக்காமல் இருக்க, தினமும் உடற்பயிற்சியை
மேற்கொள்ள வேண்டும். இதனால் உடல் சுறுசுறுப்புடன் இருப்பதோடு, உடலில்
தங்கியுள்ள கொழுப்புக்களும் கரையும். முக்கியமாக யோகாவை கர்ப்பிணிகள்
மேற்கொள்வது நல்லது.



• அதிக எடையுள்ள பெண்கள் கர்ப்ப காலத்தில் உடல் எடை அதிகரிக்காமல் இருக்க
டயட்டை மேற்கொள்ளக் கூடாது. இதனால் உடலுக்கு வேண்டிய சத்துக்கள்
கிடைக்காமல், வயிற்றில் உள்ள குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.


உடல் பருமனை குறைக்கும் ஆசனங்கள்


உடல் எடையை குறைக்க நவீன மருந்துகள் மார்க்கெட்டில் உலா வருகின்றன. நாங்கள்
கொடுக்கும் மருந்துகளை சாப்பிட்டால் 6 மாதத்தில் பாதி அளவுக்கு உடல் எடை
குறையும் என்று கூறுவார்கள். சாப்பாட்டை குறைத்தால் எடை குறைந்துவிடும்
என்று சிலர் ஆலோசனை வழங்குவார்கள். அப்படி செய்தால் உடல் எடை மட்டும்
குறையாது, பலமும் குறைந்துவிடும். ஆனால், மருந்து மாத்திரைகளுக்கு அதிகமாக
செலவிடுவதைவிட... சாப்பாட்டை குறைப்பதைவிட... யோகாசனப் பயிற்சியால் உடல்
எடையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்று யோகா வல்லுநர்கள்
குறிப்பிடுகிறார்கள்.


யோகா உடலில் உள்ளுறுப்புகளை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும். இதன் மூலம் உடல்
உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்கி ஆரோக்கியம் மேம்படும். யோகாசனம்
செய்யும்போது உடல் உறுப்புகளின் அசைவுகளினால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
இதனால் ரத்தம் அனைத்து உறுப்புகளுக்கும் பாய்ந்து அவற்றின் இயக்கம்
சீராகும்.


குறிப்பாக உடம்பை சீராக, கட்டுக்கோப்பாக மாற்றுவதில் யோகா முக்கியப் பங்கு
வகிக்கிறது. உடல் பருமனாக இருப்பவர்களில் அனைவருக்குமே உடல் முழுவதும்
கொழுப்பு சேர்ந்திருக்க வாய்ப்பில்லை. உடல் அமைப்பை பொறுத்தவரை
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பகுதியில் கொழுப்பு சேர்ந்து பருமன் ஏற்படும்.


இந்த கொழுப்பைக் குறைத்து உடலை கட்டுக்கோப்பில் வைப்பதற்கு அடிப்படை
யோகாசனங்களுடன், பிரணாயாமம், உத்தன்பாத சக்ராசனம், சர்வாங்காசனம், ஹலாசனம்,
ஆகர்ன தனுராசனம், அஸ்த்ராசனம், திரிகோணாசனம், வீராசனம் உள்ளிட்ட சில
யோகாசனங்கள் உள்ளன. இதனை முறைப்படி பயின்று, சீரான முறையில் செய்தால் உடல்
முழுவதும் ஒரே சீராகும். உணவைக் கட்டுப்படுத்தி அதன்மூலம் உடல் எடை
குறையும் போது ஏற்படும் சோர்வு, யோகாசனத்தில் இருக்காது.
 

உடல் எடை குறைய எளிய பயிற்சி


உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் இந்த பயிற்சியை செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.
இந்த பயிற்சி உடலில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் செய்யும் பயிற்சியாகும்.


பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் கால்களை
நீட்டி மல்லாந்து படுத்து கால்களுக்கு இடையே ஸ்விஸ் பந்தை வைத்து கால்கள் அதன் மேல் இருக்கும் படி வைத்துக்
கொள்ளவும். கைகள் தரையில் இருக்க வேண்டும்.
இது தான் முதல் நிலை.


பின்னர் தலை மட்டும் தரையில் இருக்கும்படி கால்களை ஸ்விஸ் பந்தின் மேல் ஊன்றிய நிலையில்
உடலை மேல் நோக்கி படத்தில் உள்ளபடி தூக்க வேண்டும். இந்த நிலையில் கைகள் தரையில் இருக்க வேண்டும். மேலும்
உடலை வளைக்க கூடாது. உடல் நேர் கோட்டில் இருப்பதை போல் நேராக இருக்க வேண்டும். இது இரண்டாம் நிலை.



பின்னர் மூன்றாவது நிலையில் கால்களை பந்தின் மேல் ஊன்றியபடி உடலை மேல் நோக்கி 90 டிகிரி இருக்கும்படி உயர்த்த
வேண்டும். இந்த மூன்று நிலைகளிலும் சில நிமிடங்கள் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வர வேண்டும்.


மூன்று நிலைகளும்
சேர்ந்தது தான் ஒரு செட். இவ்வாறு 10 முதல் 15 செட் செய்ய வேண்டும்.
ஆரம்பத்தில் செய்வது சற்று கடினமாக இருக்கும். நன்கு பழகிய பின்னர் செய்வது எளிமையானது.