அன்றாட பழக்கவழக்கத்தால் உடல் பருமனாகும் அபாயம்

பொதுவாக ஒருவரின் அழகை நாம் தீர்மானிப்பது அவரின் உடல் கட்டமைப்பை வைத்து தான். ஒருவர் மிகவும் மெலிந்து இருந்தாலும் சரி அல்லது மிகவும் குண்டாக இருந்தாலும் சரி அவரின் தோற்றம் எடுப்பாக இருப்பது கடினமே. சரியான கட்டமைப்புடன் இருந்தால் வலிமையாகவும், அழகாகவும் தோன்றும்.

முக்கியமாக உடல் பருமன் என்பது பலரும் சந்திக்கும் பிரச்சினை. அது அழகை மட்டும் அல்லாது ஆரோக்கியத்தையும் கெடுக்கும். இதனால் அவர்கள் தினசரி பல சிக்கல்களுக்கு உள்ளாகின்றனர். திடீரென்று எடை அதிகமாக கூடி விட்டதாப உடல் எடை அதிகரிக்க பல காரணங்கள் உள்ளன.

அதற்கு நம் உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையே முக்கிய காரணம். இதற்கு குடும்ப பாரம்பரியம் அல்லது உடலில் உள்ள பாதிப்பும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையே பிரதான காரணமாக பார்க்கப்படுகிறது.

நாம் அன்றாடம் செய்யும் காரியங்களில் நம் உடல் மெட்டபாலிசத்தில் (பரிணாம வளர்ச்சி) தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்மில் பல பேருக்குதெரிவதில்லை. கீழ் கூறிய டிப்சை படித்து எடை அதிகரிக்காமல் கவனமாக இருப்பது எப்படிஎன்பதை நன்கு அறிந்துக் கொள்ளலாம்.

தூக்கம்............ போதிய தூக்கம் கிடைக்க வில்லையா? அப்படியானால் எடை அதிகரிக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதற்கு காரணம் போதிய தூக்கம் இல்லாதவர்களுக்கு அதிகமாக பசிக்கும். அதனால் அவர்கள் உட்கொள்ளும் உணவின் அளவும் கூடும்.

மதுபானம்.......... பல ஆண்கள் கடின உழைப்பிற்கு பின் அலுப்பு தெரியாமல் இருக்க மது அருந்துவர். இது மன அழுத்தத்தை குறைத்து மனதை லேசாக வைத்திருந்தாலும், காலப்போக்கில் எடையை அதிகரிக்க செய்யும்.

காலை உணவு........ மற்ற வேளைகளில் நாம் உண்ணும் உணவை விட காலை உணவு தான் மிகவும் முக்கியமானது. இரவு நன்றாக தூங்கிய பின் காலை நம் உடம்பிற்கு போதிய அளவு எரிபொருள் வேண்டாமா? காலை சாப்பிடவில்லையென்றால் நம் மெட்டபாலிசம் பாதிக்கப்படும்.

அளவில்லாமல் சாப்பிடுவது.......... அதிகமாக சாப்பாடு பரிமாறிவிட்டார்கள் என்ற ஒரே காரணத்திற்காக அனைத்தையும் சாப்பிட வேண்டும் என்ற அவசியம் கிடையாது. சரியான அளவு உணவே ஆரோக்கியத்தை தரும்.

உடற்பயிற்சி...... கண்டிப்பாக உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். விளையாட்டு, உடற்பயிற்சி, நடை பயிற்சி போன்றவற்றில் ஈடுபட்டால் தேவைக்கு அதிகமான கலோரிகளை எரிக்கும். அது உங்கள் உடல்கட்டமைப்பு மற்றும் தன் னம்பிக்கையை அதிகரிக்க உதவும்.

இரவு விருந்து......... இரவு விருந்து முடிந்த பின் இனிப்பு பலகாரங்களை பொதுவாக உண்ணும் பழக்கம் உள்ளோர், அதற்கு பதில் சூடான தேநீர், சோடா அல்லது கலோரி இல்லாத உணவை உண்ணலாம்.

ஓட்டல் கடை........ கடும் பசியில் இருக்கும் போது கடைக்கு போனால், பசியை போக்க ஆரோக்கியமற்ற உணவை தான் முதலில் தேர்ந்தெடுப்போம். அதற்கு பதில் வீட்டிலேயே சாப்பிட்டு விட்டு சென்றால் பசி சிறிதளவாவது அடங்கும்.

கடையிலும் ஆரோக்கியமான பொருளை வாங்கலாம் அல்லது போகும் வழியில் ஒரு சாண்ட்விச் அல்லது க்ரில் செய்த கோழிக்கறி போன்றவற்றை சாப்பிடவும். நீங்கள் விமான நிலையத்தில் இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.

சென்ற இடத்தில் பசி எடுத்தால் அருகில் என்ன கிடைக்கிறதோ அதை வாங்கி உண்ணுவோம் அல்லவா? பெரும்பாலும் நமக்கு கிடைக்கும் உணவு அனைத்தும் ஜங்க் உணவுகளே. அதனால் முன் கூட்டியே திட்டம் தீட்டி வீட்டிலிருந்தே சாண்ட்விச், பச்சை கேரட், நற்பதமான பழங்கள், பழச்சாறு என்று எதாவது எடுத்துக் கொள்ளவும்.

தேவையான அளவு........ உணவு வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ, அளவில்லாமல் சாப்பிடுவது பலரது வழக்கம். இதனால் கணக்கில்லாமல் அதிக அளவு உணவை உட்கொள்கிறோம். எந்த அளவு உணவு சரியானது என்பதைதெரிந்து கொண்டு, அந்த அளவு மட்டுமே சாப்பிட வேண்டும்.

கலோரி உணவுகளுக்கு குட்பை சொல்லிவிடலாம். ஆரோக்கியமான பிஸ்கட் மற்றும் இதர உணவுகள் என்று கூறப்படும் அனைத்தும் அப்படி இருப்பதில்லை. எந்த அளவு கலோரி இருந்தாலும் அது நம் உடலுக்கு தீமையே. இதை போன்ற உணவுகளை தவிர்க்கவும்.

சாண்ட்விச்...... கடுகு அல்லது கொழுப்பு சத்து இல்லாத மயோனிஸை சாண்ட்விச்சில் தடவி உட்கொண்டால் கலோரி கட்டுப்பாட்டில் இருக்கும். இதனுடன் சேர்ந்து வெட்டிய காய்கறிகளையும் வைத்தால் ருசியுடன் ஆரோக்கியமும் கூடும்.

வார இறுதியில் அதிகமாக உண்ணுவது....... வார நாட்களில் உணவை கட்டுப்பாட்டில் வைத்து விட்டு, வார இறுதியில் உங்கள் கட்டுப்பாட்டை தளர்த்தி விடுகிறீர்களா? அப்படிச் செய்தால் வாரம் முழுவதும் கடைபிடித்த கட்டுப்பாடு வீணாகப் போய் விடும். இதனை தவிர்க்க தினமும் சிறிதளவு கட்டுப்பாட்டில் இருந்து தளர்த்திகொள்ளலாம்.

செயற்கை இனிப்பு...... செயற்கை இனிப்பு என்பது இயற்கை சர்க்கரையை விட 7000 மடங்கு அதிக சுவை நிறைந்தது. இது உங்கள் சுவை உணர்ச்சியை மங்கச் செய்யும் திறன் உள்ளது. செயற்கை இனிப்பு நமக்கு தெரியாமல் நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவு தானியங்கள், புரதச்சத்து உள்ள பொருட்கள், சுவைச்சாறு, ஏன் குழந்தையின் உணவு பொருட்களில் கூட இருக்கிறது.

கீழ்கண்ட திறவுச்சொல் நீங்கள் வாங்கும் உணவு பொருளின் லேபிலில் இருக்கிறதா என்பதை சரி பாருங்கள்: சக்கரின், அஸ்பர் டேம் , சுக்ரலோஸ், நியோ டேம், ஏஸ்சுல்பேம்.

உணவு பாக்கெட்.......... உணவு பாக்கெட்டில் இருந்து அப்படியே உண்ணுவது என்பது பெரிய ஆபத்து. ஏனென்றால் நாம்எவ்வளவு சாப்பிடுகிறோம் என்ற கணக்கு தெரியாமல் அதிகமாக சாப்பிட்டு விடுவோம். பாக்கெட்டுடன் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

மற்றவர்களிடம் சேர்ந்து உண்ணுதல்......... உதாரணத்திற்கு ஒருவரோடு சேர்ந்து சாப்பிட்டால், எப்போதும் சாப்பிடுவதை விட 35% அதிகமாக சாப்பிடுவோம். நான்கு பேருடன் சாப்பிட்டால் 75% அதிகமாக சாப்பிடுவோம்.

இதுவே ஏழுஅல்லது அதற்கு மேல் உள்ளவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டால், தனியாக சாப்பிடுவதை விட 96% அதிகமாக சாப்பிடுவோம். இதில் இருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால், கவனமாக இல்லையென்றால் ஒரு வருடத்திற்கு 72,000 கலோரிகளை அதிகமாக உட்கொள்கிறோம். இது கிட்டத்தட்ட 9 கிலோ எடையை கூட்டும். எனவே அளவாக உண்போம், ஆரோக்கியமாக வாழ்வோம்!

பிரசவத்திற்கு பின் உடல் எடையை குறைக்க

பிரசவத்திற்கு முன்பை விட, பிரசவத்திற்கு பின் தான் பெண்களின் உடல் எடை அதிகரிக்கும். அதிகமாக உடல் எடை மேலும் அதிகரிக்காமல் இருக்க வேண்டுமெனில், ஒரு சிலவற்றை மட்டும் மனதில் கொண்டு நடந்தால் போதும்.

உடல் எடை அதிகரிக்காமல் இருக்க, பிரசவத்திற்கு பின்னர் கடுமையான டயட்டை மேற்கொள்ளக்கூடாது. ஏனெனில் இந்த நேரத்தில் பெண்களின் உடலில் போதிய சத்துக்கள் இருக்காது. குறிப்பாக சிசேரியன் பிரசவம் நடந்தவர்கள், குறைந்தது 2-3 வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டும். ஏனெனில் தையல் ஆறுவதற்கு சிறிது நாட்கள் ஆகும்.

ஆகவே பிரசவத்திற்கு பின், உடல் எடையை குறைப்பதற்கு முன், மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். பிரசவத்திற்கு பின் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க இந்த வழிகளை பின்பற்ற நிச்சயம் உடல் எடை குறைந்து, பிரசவத்திற்கு பின்னும் சிக்கென்று அழகாக இருக்கலாம்.

கடுமையான உடற்பயிற்சிகளை செய்தால் மட்டும் தான் உடல் எடை குறையும் என்று நினைக்க வேண்டாம். யோகா செய்வதால், மனம் புத்துணர்ச்சி அடையவதோடு, ரிலாக்ஸ் ஆகவும் மாறும். மேலும் யோகா செய்வதால், மன அழுத்தம் மற்றும் சோர்வு நீங்குவதோடு, உடலின் செயல்பாடுகள் முறையாக நடந்து, உடல் எடை குறையவும் உதவியாக இருக்கும்.

பிரசவத்திற்கு பின்னர் வேகமாக உடல் எடை குறைய வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டாம். ஏனெனில் ஏற்கனவே பிரசவத்தின் போது நிறைய சத்துக்கள் உடலில் இருந்து வெளியேறி இருப்பதால், போதிய சத்துக்களை உட்கொண்டு, பொறுமையாக எடையை குறைக்க வேண்டும். அதற்கு பின்வரும் டயட்டுகளை மேற்கொள்ளுங்கள்.

உடல் எடையை குறைக்க நினைக்கும் போது செய்ய வேண்டிய செயல்களில் முக்கியமானவை தண்ணீரை அதிகம் குடிப்பது தான். இதனால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, உடல் வறட்சி தடுக்கப்பட்டு, நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கப்படும்.

நல்ல கொழுப்புக்களான மோனோ மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். அதிலும் அவகேடோ, ஆலிவ் ஆயில், சால்மன் மீன் மற்றும் ஆளி விதைகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

பச்சை இலைக் காய்கறிகளில் ஒன்றான பசலைக் கீரையை பிரசவத்திற்கு பின் பெண்கள் சாப்பிட்டால், உடலுக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் கிடைப்பதோடு, உடல் எடை அதிகரிக்காமலும் தடுக்கும்.

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் நிச்சயம் இரும்புச்சத்து மற்றும் கால்சியம் நிறைந்த உணவுகளான பால் பொருட்களை அதிகம் சாப்பிட வேண்டும். அதிலும் பிரசவத்திற்கு பின்னர் பெண்கள் பாலை அதிகம் பருக வேண்டும். குறிப்பாக ஸ்கிம்ட் மில்க் குடித்தால், எடை குறைவதோடு, உடலுக்கு கால்சியம் சத்தும் கிடைக்கும்.

எலுமிச்சை உடல் எடையை குறைக்க மட்டுமின்றி, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் உதவியாக இருக்கும். அதற்கு வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை கலந்து, தேன் சேர்த்து வெறும் வயிற்றில் காலையில் குடித்தால், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்கள் அனைத்தும் கரைத்துவிடும்.

பெர்ரிப் பழங்களில், உடல் எடையை குறைக்க உதவும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது. ஆகவே பிரசவத்திற்கு பின்னர், உடல் எடையை குறைக்க நினைப்போர் பெர்ரிப் பழங்களை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

உடல் எடையை குறைக்க நினைக்கும் போது, கடுமையான டயட்டை மேற்கொள்ளாமல், பின்வரும் செயல்களை பின்பற்றினால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைப்பதோடு, உடல் எடையும் கட்டுப்பாட்டுடன் இருக்கும்.

உடல் எடை குறைய எளிய வழிகள்



உடல் பருமம் இன்று அனைவரையும் பாடாய்படுத்துகிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கீழே உள்ள இந்த வழிமுறைகளை கடைப்பிடித்தால் விரைவில் உடல் எடையை குறைத்து விடலாம்.

• அதிகாலையில் மூச்சு பயிற்சி

• திட்டமிட்ட சரிவிகித உணவு

• நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

• சர்க்கரையை தவிர்க்க வேண்டும்

• ஒரு நாளைக்கு குறைந்த அளவிலான சாப்பாடு 6 அல்லது 7  முறை  சாப்பிட வேண்டும்

• கூட்டு கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த உணவு சாப்பிட வேண்டும்

• புரோட்டீன் நிறைந்த காய்கறிகள் மற்றும் இறைச்சி சாப்பிட வேண்டும்

•  சரியாக எட்டு மணி நேரம் தூங்க வேண்டும்

• நார்சத்து அதிகம் உள்ள பழங்களை சாப்பிட வேண்டும்

• வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க வேண்டும்

• உடல்பயிற்சி செய்ய வேண்டும்

• வருத்த மற்றும் நொறுக்கு தீனிகளை சாப்பிட கூடாது

•  நாளைக்கு ஒரு முறையாவது கோதுமையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும.

• உப்பை குறைந்த அளவே உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்

• தேங்காய், கடலை,பாமாயில் போன்ற எண்ணையில் செய்த உணவை சாப்பிட கூடாது

பால் கலக்காத டீ

 

“பால் கலக்காத “டீ” சாப்பிட்டால் உடல் எடை குறையும்” என ஆய்வில் தெரியவந்துள்ளது. உடல் பருமன் மற்றும் எடையை குறைக்க படாத பாடுபடுகின்றனர். மருந்து, மாத்திரைகள் சாப்பிடுவது மற்றும் உடற் பயிற்சி போன்றவற்றை மேற்கொள்கின்றனர். அத்துடன் பால் கலக்காத வெறும் டீயை மட்டும் குடித்தால் போதும்.
உடல் எடை அதிகரிக்காமல் கணிசமாக குறையும் என ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஏனெனில், தேயிலையில் உடல் எடையை குறைக்கக்கூடிய பல மூலப்பொருட்கள் உள்ளன. ஆனால், அதில் கலக்கப் படும் பசும் பாலில் கொழுப்பு சத்து அதிகம் உள்ளது. அது உடல் எடையை குறைப்பதற்கு பதிலாக அதிகரிக்க செய்து விடுகிறது.
எனவே தான் பால் கலக்காத கடும் டீயை குடிக்க வேண்டும் என விஞ்ஞானிகள் அறிவுறுத்தியுள்ளனர். அதே நேரத்தில் பால் கலக்காமல் குடிக்கும் வெறும் டீ ரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது. தினமும் 3 கப் வெறும் டீயை குடித்தாலே போதும். ரத்த அழுத்தம் குறையும் என ஆஸ்திரேலியா விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர் 

புத்துணர்ச்சி தரும் யோகா பயிற்சி


* யோகா பயிற்சி உடலில் உள்ளுறுப்புகளை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும். இதன் மூலம் உடல் உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்கி ஆரோக்கியம் மேம்படும்.

* யோகா பயிற்சியின் போது சரியான வழியில் மூச்சுப் பயிற்சியை மேற்கொண்டால், சுவாசம் ஒழுங்காக இயங்க ஆரம்பிக்கும். இதனால் உங்களது இளமையின் காலம் நீடிக்கும்!

* நாம் தன்னம்பிக்கையுடன் முன்னோக்கி செல்லும் ஆற்றலை நமக்கு கொடுக்கிறது யோகா பயிற்சி. தினமும் தவறாமல் பயிற்சி செய்தால் கோபம், எதிர் மறை எண்ணங்கள் கட்டுப்படும்.

* யோகாசனப் பயிற்சியால் உடல் எடை குறையாது என்று பலர் கூறுவார்கள். ஆனால் அது மிகவும் தவறு. உடல் எடை குறைவு மற்றும் உடல் கட்டுக்கோப்புக்கு யோகா மிகவும் அத்தியாவசியமானது. மேலும் செயற்கையை தவிர்த்து, எவ்வித பிரச்சினையும் இல்லாமல், இயற்கையாக உடல் எடை குறைய யோகா மட்டுமே சிறந்த வழி.

* நீங்கள் எந்த அளவுக்கு, எத்தனை நிமிடத்திற்கு யோகாசனம் செய்கிறீர்களோ அதைப் பொறுத்து உங்களுடைய உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பு கரைந்து, உடல் பருமன் குறையும். அதே நேரத்தில் உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சியால் உடல் எடை குறையும் போது ஏற்படும் சோர்வு, யோகாவில் இருக்காது என்பது உறுதி.

* யோகாசனம் செய்யும்போது உடல் உறுப்புகளின் அசைவுகளினால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் ரத்தம் அனைத்து உறுப்புகளுக்கும் பாய்ந்து அவற்றின் இயக்கம் சீராகும். மற்ற பயிற்சிகளைவிட யோகாவில் மட்டுமே, ரத்த ஓட்டம் முகம் மற்றும் சருமத்தின் மீதும் பாய்ந்து உடல் அழகை பாதுகாக்கிறது. இதனால் ஆஸ்துமா, சைனஸ் போன்ற பிரச்சினைகள் குணமடையும்.

* யோகா உடம்பை சீராக, கட்டுக்கோப்பாக மாற்றுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. உடல் பருமனாக இருப்பவர்களில் அனைவருக்குமே உடல் முழுவதும் கொழுப்பு சேர்ந்திருக்க வாய்ப்பில்லை. சிலருக்கு இடுப்பில், சிலருக்கு தொடையில், சிலருக்கு முதுகில், சிலருக்கு அடிவயிற்றில், சிலருக்கு மேல் வயிற்றில், சிலருக்கு மார்பில் பருமன் வெவ்வேறு வடிவில் இருக்கும்.

குறிப்பிட்ட யோகாசனத்தை மட்டும் செய்தால் போதும். உடல் முழுவதும் ஒரே மாதிரியாக சீராகும்

தொப்பை குறைய

 
 

இன்றைய காலத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் மற்றும் தொப்பை பிரச்சனை அதிகமாக சதைப்பிடிப்பு இருந்தால் உடல் அழகே கெட்டுவிடும். அதைத் சரிசெய்யவும் வலுவானதாக்கவும், கொஞ்சம் பயிற்சிகளை மேற்கொள்வது தான் சிறந்த வழி.

வயிற்றுப் பகுதியை வலுவாக்க பிசியோதெரபிஸ்ட்டுகள், பிட்னஸ் பயிற்சியாளர்களிடம் கேட்டு அவர்கள் ஆலோசனைப்படி, பயிற்சி மேற்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும் உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு ஆகியவற்றை நிச்சயம் கடைபிடிக்க வேண்டும்.

அளவான உடற்பயிற்சி உடல் பருமனைக் கட்டுப்படுத்துவதோடு, ஆயுள்காலத்தையும் அதிகரிக்கிறது. தினமும் ஐந்து கப் காய்கறி அல்லது பழம் சாப்பிட வேண்டும். கீரை வகைகள், பீன்ஸ் அவரை போன்ற காய்கறிகளையும் புடலங்காய், பூசணி போன்ற கோடிவகைக் காய்கறிகளையும் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.

சீசனல் பழங்கள் எல்லாம் சாப்பிடலாம். ஆனால், மாம்பழம் பலாப்பழம், கிழங்கு வகைகள் போன்றவற்றை குறைத்து அளவு எடுத்துக் கொள்வது நல்லது. பப்பாளிக் காயை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்ல பலன் தரும். முள்ளங்கியை உணவில் அதிகமாக எடுத்துக் கொள்வது சிறந்தது.

வாழைத்தண்டு, பூசணி அரகம்புல் போன்றவற்றில் ஏதேனும ஒரு சாற்றியை குடித்து வர உடல் எடை குறையும். இஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிட, 40 நாட்களில் தொப்பை குறையும் இந்த உணவு முறைகளுடன், பிசியோதெரபிஸ்ட் மற்றும் பிட்னஸ் பயிற்சியாளர்களிம் தகுந்த ஆலோசனை பெற்று, பின்பற்றினால் தொப்பை தொல்லையின்றி வாழலாம்.

தினமும் முட்டை சாப்பிட

 

நமது உடலுக்கு கொழுப்பு சத்து அவசியம். உடல் உற்பத்தி செய்யும் கொழுப்பையும் சேர்த்து, ஒரு நாள் நம் உடலுக்கு 130 மி.கிராம் கொழுப்பு தேவை. ஆனால் ஒரு முட்டையின் மஞ்சள் கருவில் மட்டும் கிட்டத்தட்ட 210 மி.கிராம் கொழுப்பு கிடைக்கிறது. அதனால் முட்டை நிறைய சாப்பிட்டால் உடலில் கொழுப்பு அதிகம் சேர்ந்துவிடும்.
ஒரு வாரத்தில் எத்தனை முட்டை சாப்பிடலாம்?
உடலில் அதிக அளவு கொழுப்பு இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பவர்கள், வாரத்திற்கு இரண்டு முட்டைகள் சாப்பிடலாம். அதற்கு மேல் சாப்பிடக்கூடாது. ஆம்லெட் செய்தோ, குழம்பில் பயன்படுத்தியோ, பொரித்தோ அதனை சாப்பிடலாம். முட்டையின் மஞ்சள் கருவில்தான் கொலஸ்ட்ரால் குவிந்திருக்கிறது.
கொலஸ்ட்ரால் உடலில் அதிக அளவில் சேர்ந்தால் அது இதயத்தின் செயல்பாட்டிற்கே பிரச்சினையாகி விடும். முட்டை வெள்ளைக்கருவை நினைத்து டென்ஷன் ஆக வேண்டியதில்லை. தேவைப்படும் அளவிற்கு தின்னலாம். அதில் புரோட்டின் நிறைய இருக்கிறது. கொழுப்பு இல்லை. ஒரு முட்டையின் வெள்ளைக்கருவில் இருந்து கிட்டத்தட்ட 3 கிராம் புரோட்டீன் கிடைக்கிறது.
அதனால் ஒருவர் நான்கு முட்டையின் வெள்ளைக்கருவை தினமும் சாப்பிடலாம். அதில் சிறிதளவு மிளகு தூள் கலந்து சாப்பிட்டால் உடலுக்கு ஆரோக்கியம். குழந்தைகளுக்கு தினமும் ஒரு முட்டை கொடுக்கலாம். அதில் குழந்தைகளுக்கு தேவையான சத்துக்கள் நிறைய இருப்பதால், அவர்கள் விரும்பும் விதத்தில் அந்த ஒரு முட்டையை சமைத்து கொடுக்கலாம்.
வளரும் குழந்தைகளுக்கு புரோட்டீன் சத்து தேவை. மேலும் மஞ்சள் கருவில் இருக்கும் வைட்டமின் ஏ, டி, இ போன்றவைகளும் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு மிக அவசியம். இரும்புச்சத்தும் அதில் இருக்கிறது. 17 வயது வரை மஞ்சள் கருவால் எந்த பாதிப்பும் ஏற்படாது. 70 வயதைக் கடந்தவர்களும் கொலஸ்ட்ராலைப் பற்றி கவலைப்படாமல் முழு முட்டை சாப்பிடலாம்.
வயதானவர்களின் உடலுக்கு தேவையான ஒமேகா 3 பேற்றி ஆசிட் முட்டை மூலம் கிடைக்கும். உடலில் ஏற்கனவே கொலஸ்ட்ரால் தொந்தரவு இருப்பவர்கள் வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடவேண்டும். அவர்கள் சுவையாக சாப்பிட விரும்பினால், வெள்ளைக்கருவிலே குழம்பு தயார் செய்யலாம். கிரேவியாக தயாரித்தால் எண்ணையின் அளவில் மிகுந்த கவனம் அவசியம்.
வெள்ளைக்கருவை மட்டும் பயன்படுத்தி ஆம்லெட் தயாரித்து சுவைக்கலாம். சிறிதளவு எண்ணையில் வறுத்தும் சாப்பிடலாம். சர்க்கரை நோய் இருப்பவர்கள் தினமும் இரண்டு முட்டைகளின் வெள்ளைக்கருவை உட்கொள்ளலாம். அதிக உடல் எடை கொண்டவர்கள் வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முட்டைகளின் வெள்ளைக்கருவை சாப்பிடலாம்.
கொலஸ்ட்ரால் பிரச்சினை இருப்பவர்கள் வீட்டிலே `ஆரோக்கிய ஆம்லெட்' தயாரிக்கலாம். முட்டை வெள்ளைக்கருவில் காரட், வெங்காயம், தக்காளி, முட்டைக்கோஸ் போன்றவைகளை நறுக்கி சேர்த்து ஆம்லெட் தயாரித்து சுவைத்தால், உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும். இதில் பிட்டாகரோட்டின், வைட்டமின், பைபர் போன்ற சத்துக்கள் இருக்கின்றன.

உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி தேவை

 

_வெறும் செருப்பு போட்டுக்கொண்டு நடைப்பயிற்சி செய்யக் கூடாது. டிராக் ஸூட் , ஷூ அணிந்துதான் நடைப்பயிற்சி, ஜாகிங் செல்ல வேண்டும். எந்த _நேரத்திலும் உடற்பயிற்சி செய்யலாம். எனினும் காலை வேளையில் உடற்பயிற்சி செய்வது உற்சாகம் தரும்.

உடற்பயிற்சி செய்யும்போது எண்டார்பின் என்னும் அமிலம் சுரக்கும். இது _மகிழ்வான உணர்வைத் தரும். எனவே, அன்றைய தினம் வேலைகளைச் சுறுசுறுப்பாக செய்ய முடியும். ஒரு நாளைக்கு 40 நிமிடங்கள் முதல் அதிகபட்சம் 90 நிமிடங்கள் வரை உடற்பயிற்சி மேற்கொண்டால் _போதுமானது. குடும்பத்தினருடன் ஒன்றாக நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்வது ஊக்கம் அளிக்கும். ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொள்ளத் திட்டமிடுபவர்கள், ஆர்வக்கோளாறாக எல்லா கருவிகளையும் பயன்படுத்தக் கூடாது.

_முதல் 10 நாட்கள் வெறும் நடைப்பயிற்சி மட்டுமே செய்ய வேண்டும். உடற்பயிற்சியாளர் அனுமதியுடன் மட்டுமே, பளு தூக்கும் பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். நடைப்பயிற்சி முடிந்த உடனே காபி, டீ குடிக்கக் கூடாது. 20 நிமிடங்கள் கழித்து தேவையான அளவு தண்ணீர் அருந்தலாம். நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்த பின்னர், நன்றாகக் குளித்த பின்னர், உணவு அருந்தலாம். _சாப்பிட்ட உடன் உடற்பயிற்சி செய்யக் கூடாது. இரண்டு மணி நேரம் கழித்துத்தான் உடற்பயிற்சி செய்யவேண்டும்.

_உடற்பயிற்சி செய்யும்போது, திடீர் தாகம் எடுத்தால் 20-30 மி.லி அளவுக்கு மட்டும் தண்ணீர் குடித்தால் போதுமானது. உடற்பயிற்சி செய்யும்போது, அதிக அளவு தண்ணீர் குடிக்கக் கூடாது. விளம்பரங்களை நம்பி வயிற்றில் _அதிர்வுகளை ஏற்படுத்தும் கருவிகள், இடுப்புத் தசைகளைக் குறைக்கும் கருவிகள் போன்றவற்றை வீட்டில் வாங்கி வைத்து பயிற்சிகளை மேற்கொள்ளக் கூடாது.

_செயற்கை முறையில் குறுக்கு வழியில் எடை குறைப்பது பக்கவிளைவுகளையே ஏற்படுத்தும். இயற்கையான முறையில், திட்டமிடல்களோடு தீர்மானமாக செயல்பட்டால் உடல் எடை குறைவதோடு, நீண்ட ஆரோக்கியமான வாழ்வும் வசமாகும்.

தினமும் நடைபயிற்சி

 

_நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்பது முன்னோர் வாக்கு. கோடி கோடியாய் பணம் வைத்திருந்தாலும் அவற்றை அனுபவிக்க நோயில்லாத _உடல் வேண்டும். நோய்கள் வராமல் உடலை காத்துக்கொள்வது மிகவும் அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள். மேலும் நடைபயிற்சி _மேற்கொள்பவர்களை நோய்கள் எளிதில் தாக்குவதில்லை என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
_• தினமும் தவறாமல் நடை பயிற்சி மேற்கொண்டால் எடை குறையும், தசைகள் வலுவடையும், இதயநோய்கள் எட்டிப்பார்க்காது, நீரிழிவு நோய் கட்டுப்படும். ரத்த அழுத்தம் சீராகும், முதுகுவலி ஏற்படாது.  
_• தினமும் காலை 6 மணிக்கு முன் நடப்பது உடலுக்கு மிகவும் நல்லது. முடியாதவர்கள் மாலையில் நடக்கலாம். நடக்கும் போது கைகளை நன்கு வீசி நடக்கவேண்டும். குறைந்த பட்சம் இரண்டு கிலோமீட்டராவது நடந்த பின்னர் 5 நிமிடம் ஓய்வெடுக்க வேண்டும். பின்னர் இரண்டு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
• உடல் எடை அதிகரிப்பு என்பது இன்றைய கால கட்டத்தில் சாதரணமான  ஒன்றாகிவிட்டது. சரியான உடல் உழைப்பு இல்லாதது தான் இதற்கு காரணம். _இன்றைய இளைய தலைமுறையினர் அமர்ந்த இடத்திலேயே வேலை பார்ப்பதால் உண்ணும் உணவு ஆங்காங்கே தங்கிவிடுகிறது. இதனால் உடல் _எடை கூடுகிறது. இவர்கள் தினமும் அரைமணி நேரம் நடை பயிற்சி மேற்கொண்டால் உடல் எடை கட்டுக்குள் வரும். உடல் எடைதான் எண்ணற்ற நோய்களின் பிறப்பிடமாக உள்ளது.  
• எடை அதிகரிப்பினால் ஆங்காங்கே தசைகள் லூசாகி உடல் அமைப்பு சரியான வடிவமின்றி காணப்படும். இவர்கள் நடை பயிற்சி மேற்கொள்வதன் மூலம் உடலில் உள்ள லூசான தசைகள் வலுவடையும்.
_• காலையில் மேற்கொள்ளும் நடை பயிற்சியினால் உடலும், உள்ளமும் புத்துணர்ச்சி அடைகிறது. 
_• தினசரி காலை, மாலை இருவேளை 45 நிமிடம் நடை பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு நீரிழிவு நோய் கட்டுப்பாட்டிற்குள் வரும் என்பது  ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
• நடைபயிற்சியின் மூலம் உடலில் தேவையற்ற இடங்களில் சேர்ந்துள்ள கொழுப்பு கரைகிறது. ரத்த நாளங்களில் கொழுப்பு குறைவதால் ரத்த ஓட்டம் சீராகிறது. இதனால் இதயநோய் பாதிப்பு குறைகிறது. ரத்த அழுத்த நோய் கட்டுப்படும். 
• ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டே வேலை பார்ப்பதால் ஒரு சிலர் முதுகு வலி கழுத்துவலியினால் பாதிக்கப்படுவர். அவர்களுக்கு நடைபயிற்சி சிறந்த தீர்வாகும். காலை நேரத்தில் மேற்கொள்ளும் நடைபயிற்சி முதுகுவலியை தூர விரட்டும்.

தக்காளி

 

_ பொதுவாக தக்காளியைப் சமைக்காமல் பச்சையாகச் சாப்பிடுவதால் இதன் முழுப்பலனையும் பெற முடிகிறது. அப்படிச் சாப்பிடுவது உடலுக்குப் நல்ல பலனை தரும்.
_உடல் பலவீனமாக இருக்கிறவர்களுக்கு இது மிக சிறந்த டானிக் போன்றது.    
_இதில் வைட்டமின் ஏ,வைட்டமின் பி-1, பி-2, வைட்டமின் சி, மற்றும் சுண்ணாம்புச்சத்தும் அடங்கி உள்ளன. தக்காளியை எந்த விதத்தில் சாப்பிட்டாலும் அதன் சத்துக்கள் அனைத்தும் குறையாமல் நமக்குக் கிடைக்கும்.  
_இதை காலையிலும், மாலையிலும் சூப் செய்து சாப்பிட்டு வந்தால் தோல் நோய்கள் வராது என்பதை விட, தோலைப் பளபளப்பாக வைத்திருக்கும் குணம் இதற்கு அதிகம் உண்டு.  
_தக்காளியை சாப்பிடும் முன்பு கண்டிப்பாக சத்தம் செய்ய மறக்காதீர்கள்.     நமது உடலில் ரத்த உற்பத்திக்குப் இது பயன்படுவதோடு மட்டுமின்றி, ரத்தத்தைச் சுத்திகாரிப்பதற்கும், சீரான ரத்த ஓட்டத்திற்கும் இது  மிகவும் பயன்படுகிறது.  
_அன்றாடம் நமது உணவில் தக்காளியை தொடர்ந்து சேர்த்து வந்தால் அதன் நன்மைகள் அனைத்தையும் பெற்று ஆரோக்கியமாக வாழலாம்.    அதனை தொடர்ந்து சாப்பிடுவது இதயத்துக்கு மிகவும் நல்லது.  
_பசியைத் துண்டும் ஹார்மோன்களின் செயல்பாடுகளை தக்காளி கட்டுப்படுத்துகிறது. இதனால் அதிக அளவு சாப்பிடுவது தடுக்கப்பட்டு உடல் எடை அதிகரிக்காமல் கட்டுக்குள் இருக்கிறது.

பெண்களின் உடல் எடை குறைக்க



* போலிக்_ ஆசிட் பெண்களின் உடலுக்கு அவசியம். கர்ப்பிணிகளுக்கு மிக அவசியம். இதற்காக ஆரஞ்சும், தவிடு நீக்காத தானிய உணவுகளும் சாப்பிட வேண்டும். கேரட்_ ஜூசில் போலிக் ஆசிட் உள்ளது. டாக்டரின் ஆலோசனைப்படி அதற்கான மாத்திரைகள் சாப்பிடலாம்.

_* உப்பு, இனிப்பு இந்த இரண்டையும் முடிந்த அளவு பெண்கள் உணவில் இருந்து அப்புறப்படுத்திவிட வேண்டும்.

_* ரத்த சோகை பெரும்பாலான பெண்களை தாக்குகிறது. சோர்வு, தலைசுற்றுதல், தலைவலி, தளர்ச்சி போன்றவை அதன் அறிகுறிகள். ரத்த சோகையால் முடியும் உதிரும். அவர்களுக்கு இரும்பு சத்து அவசியம். ஈரல், _கீரை வகைகள், நெல்லிக்காய், திராட்சை போன்றவைகளை அதிகம் சாப்பிடவேண்டும். டாக்டர் ஆலோசனைப்படி இரும்பு சத்து மாத்திரைகளும் சாப்பிடலாம். ரத்த சோகை இருப்பவர்கள் உணவுகளை இரும்பு பாத்திரங்களில் சமைத்து சாப்பிடுவது நல்லது.

_* உடலில் அசிடிட்டி சீராக இருக்கவேண்டும். மது, காபியில் இருக்கும் கபீன், நிகோடின் போன்றவைகள் மூலம் அஸிடிட்டி நிலை அதிகரிக்கும். அதனால் அவைகளை தவிர்த்திடுங்கள். மாமிச_ உணவுகளும் அஸிடிட்டியை அதிகரிக்கும். அதனால் மாமிச_ உணவுகளைவிட அதிகமாக, காய்கறிகளை சாப்பிடவேண்டும்.

_* உடலின் ஆரோக்கியத்திற்கு பற்களின் சுத்தம் அவசியம். தினமும் இருமுறை பல் துலக்கவேண்டும். பிரஷ் பழையதாகிவிட்டால் மாற்றிவிடவேண்டும். பற்களின் ஆரோக்கியத்திற்கு கேரட், ஆப்பிள், ஆரஞ்சு _போன்ற பழங்கள் நல்லது. 13. பழங்கள், காய்கறிகளை தினமும் 250 கிராம் அளவுக்கு சாப்பிட்டால்தான் உடலுக்கு தேவையான நார்சத்து கிடைக்கும்.

_* கொழுப்பு என்றாலே பெண்கள் தவிர்க்க நினைக்கிறார்கள். ஆனால் உடலுக்கு நல்ல கொழுப்பு அவசியமாகிறது. நமது மூளையின் 60 சதவீதத்தை கொழுப்பு திசுக்கள்தான் நிர்மாணிக்கிறது. அதனால் வனஸ்பதி போன்ற கெட்ட கொழுப்பு கொண்ட பொருட்களை மட்டும் தவிர்த்திடுங்கள்.

_எண்ணெய்யை மீண்டும் சூடாக்கியும் பயன்படுத்தக் கூடாது. பாதாம், தேங்காய், ஆலிவ் எண்ணெய் போன்றவை எல்லாம் உடலுக்கு நல்லது. _வாரத்தில் 2-3 மேஜை கரண்டி ஆலிவ் எண்ணெய் சமையலில் பயன்படுத்தினால், சருமத்திற்கு நல்லது. கொழுப்பு அதிகரித்து விடக்கூடாது. ஆனால் குறைந்துவிட்டால், உடல் நலம் பாதிக்கும்.

_* உடல் மெலிய வேண்டும் என்பதற்காக உணவு சாப்பிடாமல் இருக்கக்கூடாது. திடீரென்று உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக குறுக்கு வழி எதையும் கடைபிடிக்கக்கூடாது. அது உடல் _மெட்டோபாலிக் சிஸ்டத்தை பாதிக்கும். ஜீரணத்தில் கடுமையான சிக்கலை தோற்றுவிக்கும். அதனால் உடல் எடையை குறைக்க முறையான வழிகளை கையாள வேண்டும்.

தவிர்க்கப்பட வேண்டிய உணவுகள்

 

ஆனால் உடல்_ எடை கூடுவதற்கு காரணமாக இருக்கும் வேறு சில உணவுகளை பற்றி நாம் யோசிப்பதே இல்லை. ஜங்க் வகை உணவுகளை _முழுவதுமாக தவிர்த்து புரதச்சத்துள்ள பானத்தை மட்டும் குடித்து வந்தாலும் கூட, நாம் நம் அன்றாட உணவு பழக்கங்களில் சில தவறுகளை செய்யத் தான் செய்வோம்.

_• உணவின் ருசியை கூட்டவோ அல்லது அளவை கூட்டவோ நாம் உருளைக்கிழங்கை பயன்படுத்துகிறோம். இதனை அன்றாட உணவில் சேர்த்துத் கொள்ளவதால் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். அதனால் _அடுத்த முறை உருளைக்கிழங்கிற்கு பதில் நற்பதமான காய்கறிகளை பயன்படுத்துங்கள்.

_• பல பிரச்சனைகளுக்கும் பால் தீர்வாக இருப்பது உண்மை தான். ஆனால் அதனை அன்றாடம் பருகி வந்தால் அது உங்கள் வளர்ச்சியில் தடையாகவும் இருக்கும். தூங்கும் முன்பு, காலை உணவின் போது அல்லது மாலை _வேளைகளில் நொறுக்குத் தீனி உண்ணும் போது பால் குடித்தால் கொஞ்சம் இடைவேளை எடுத்துக் கொள்ளுங்கள். பால் குடிக்கவில்லை என்றால் உங்கள் _சோம்பல் நீங்கி, உடல் எடை குறைந்து, சருமம் பொலிவடைகிறதா என்பதை கவனியுங்கள்.

• உணவருந்திய பிறகு இனிப்பு பண்டங்கள் ஏதாவது உண்ணுவது நம்மில் பல பேருக்கு உள்ள பழக்கமாகும். இது தேவையற்றது என்பதும் நமக்கும் தெரியும். _நீங்கள் உண்ணும் இனிப்பு பண்டங்களில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதால் உங்கள் உடல் எடையை குறைக்க நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வீணாய் போகும். வார இறுதி நாட்கள் அல்லது ஏதாவது விசேஷ நாட்களில் மட்டும் அவைகள் உண்ணுங்கள்.

• மாலை வேளைகளில் உண்ணும் நொறுக்குத் தீனிகளில் தான் அதிக கவனம் தேவை. மாலை வேளையில் பசி எடுக்கும் போது சாண்ட்விச் அல்லது _சமோசா போன்ற நொறுக்குத் தீனிகளை உண்ண நம்மை தூண்டும். பசி நம்மை வாட்டும் போது நாம் எதனை உண்ணுகிறோம் என்பதை பற்றி அதிகம் கவலை கொள்வதில்லை. இது அன்றாடம் நடக்கக் கூடியது என்றால் அது நம் உடல் நலத்தை நாம் நினைப்பதை விட வெகுவாக பாதித்து விடும். அதனால் _நட்ஸ், வெண்ணெய் அல்லது தயிர் போன்றவற்றை உங்கள் மாலை வேளை நொறுக்குத் தீனியாக பயன்படுத்துங்கள் 

40 வயதுக்கு மேல்

 

_சிலருக்கு முழங்கால் மூட்டு வலி இருந்து கொண்டே இருக்கும்; இதைக் கால் வலி என்று தவறாக நினைத்துக்கொண்டிருப்பர்; அதற்காக, ஆங்கில மருந்து முதல் ஆயுர்வேத ஆயில் வரை பயன்படுத்துவர். எனினும், வலி தொடர்ந்து _கொண்டிருக்கும்.

_இதற்கு உண்மையான காரணம், மருத்துவ ஆலோசனை இல்லாமல், நானும் உடற்பயிற்சி செய்கிறேன் என்று ஜாகிங் கிளம்பிவிடுவது தான். மற்ற _உடற்பயிற்சி போலத்தான் ஜாகிங்கும். ஆனால், எல்லா வயதினரும் இதை செய்யக் கூடாது; வாக்கிங் போகலாம்; ஜாகிங் என்றால் ,ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பது டாக்டர்கள் கருத்து.

_நாற்பது வயதுக்கு மேல் என்றால், ஜாகிங் செய்ய டாக்டரிடம் அனுமதி பெற வேண்டும். ரத்த அழுத்தம், ரத்த அளவு போன்றவையும் கூட இதனால் பாதிக்க வாய்ப்புண்டு. ஜாகிங்கை பல ஆண்டாக செய்து வருவோருக்கு பெரிய _அளவில் பிரச்னை வராது. திடீரென ஆரம்பிப்போருக்கு தான் எல்லா கோளாறும் வரும். கால் மட்டுமல்ல, மூட்டு உட்பட உடலின் பல பகுதிகளை ஜாகிங் பாதிக்கும்.

_ஜாகிங்கால், புத்துணர்ச்சியை ஊக்குவிக்கும் மூளையில் உள்ள என்டோர்பின் ரசாயனம் குறைந்து விடும். இதனால், பொதுவான சுறுசுறுப்பு குறைந்து விடும். _ஜாகிங் போவதை விட, விறு விறுப்பாக "வாக்கிங்' போவதே நல்லது. அதனால், உடலில் கலோரி எரிக்கப்பட்டு, உடல் எடை குறைகிறது; பல வகையில் ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது.

உணவு சாப்பிடும் முன்பு தண்ணீர் குடித்தால்

_‘உணவு சாப்பிடும் முன்பு தண்ணீர் குடித்தால் உடல் எடை குறையும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
உடல்_ எடையை குறைக்க பல்வேறு பலவிதமான சிகிச்சை முறைகளும் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் பிர்மிங்காம் பல்கலைக் கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் ஹெலன் பரேட்டி தலைமையில் ஒரு நூதன ஆய்வு மேற்கொண்டனர்.
உடல்_ பருமன் ஆனவர்களை உணவு சாப்பிடும் முன்பு ஒரு பாட்டில் தண்ணீர் குடிக்க வைத்து ஆராய்ச்சி நடத்தினர். அதுபோன்று 41 பேரிடம், வயிறு நிரம்ப உணவு சாப்பிட்டு விட்டு தண்ணீர் குடிக்க வைத்து 43 பேரிடமும் ஆய்வு நடத்தப்பட்டது.
_உணவு சாப்பிடுவதற்கு முன்னும், பின்னும் இது போன்று 12 வாரங்கள் நடை முறைப்படுத்தப்பட்டது.
அவர்களில் சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் குடித்தவர்களின் உடல் எடை 4.3 _கிலோ வரை குறைந்து இருந்தது. அதே வேளையில் சாப்பிட்டு விட்டு தண்ணீர் குடித்தவர்களுக்கு வெறும் 1.3 கிலோ எடை மட்டுமே குறைந்து இருந்தது.
இதன் மூலம் சாப்பிடு வதற்கு முன்பு தண்ணீர் குடித்தால் உடல் எடை _கணிசமாக குறையும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து நிபுணர் ஹெலன் பரேட்டி கூறும்போது, ‘‘உடல் எடையை குறைக்க பலகடுமையான சிகிச்சை முறைகள், உடற்பயிற்சி போன்றவை செய்வதை விட சாப்பிடும் _முன்பு தினமும் 3 வேளை தண்ணீர் குடித்தாலே போதும், உடல் எடை தானாக குறைந்து விடும்’’ என்றார். 

க்ரீன் டீ


உடல்_ ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக, தினமும் கிரீன் டீ குடிக்கும் பழக்கம் பொதுமக்களிடையே தற்போது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் _இங்கிலாந்தை சேர்ந்த ஆங்ளியா ரஸ்கின் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் க்ரீன் டீ பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளது.

14 பேர் கலந்து கொண்ட இந்த ஆய்வில் பங்கேற்பாளர்கள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டனர். அவர்களில் 7 பேர் கொண்ட ஒரு குழுவிற்கு கிரீன்_ டீயில் உள்ள ஈ.ஜி.சி.ஜி. அடங்கிய கேப்சூலும் மற்றொரு குழுவிற்கு மருந்து இல்லாத கேப்சூலும் கொடுக்கப்பட்டது.

இதில் மாத்திரை எடுக்காதவர்களோடு ஒப்பிடும் போது மாத்திரை எடுத்தவர்களுக்கு 1.63 சதவீதம் உடல் எடை குறைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே க்ரீன்_ டீ குடிப்பதால் உடல் எடை குறையும் என்பது அறிவியல் பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

_மேலும், தினசரி சோதனையில் கொடுக்கப்பட்ட கேப்சூலில் இருந்த ஈ.ஜி.சி.ஜி.யின் அளவு 400 மில்லி கிராம். இதே அளவை தினசரி பூர்த்தி செய்ய ஒரு நாளைக்கு ஏழு முறை காஃபின் நீக்கப்பட்ட க்ரீன்_ டீ அருந்த வேண்டும் என்றும் இவ்வாறு எடுத்து வந்தால் உடல் எடை குறைவது மட்டுமின்றி உடலில் செயலாற்றலும் அதிகரிக்கும் என  ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

உடல் எடையை குறைக்க நடைப்பயிற்சி

உடல்_ எடை குறைக்க உடற்பயிற்சி மிகவும் முக்கியம். ஒவ்வொருவரின் பி.எம்.ஐ அளவைப் பொறுத்தும் அவர்களது உடல்நிலையைப் பொருத்தும் உடற்பயிற்சிகள் மாறும். அனைவருக்கும் நடைப்பயிற்சி ஏற்றது. உடல் _எடையைக் குறைக்க விரும்புபவர்கள், முதலில் வாக்கிங் செல்ல ஆரம்பிக்கவேண்டும்.

ஆரம்பத்திலேயே அதிக தூரம் நடக்கக் கூடாது. இரண்டாவது வாரம்,  _நடைப்பயிற்சி செய்யும் தூரத்தை அதிகரிக்க வேண்டும். ஒவ்வொரு வாரமும் படிப்படியாக அதிகரித்து, ஆறு மாதத்திற்குள், ஒரு மணி நேரத்தில் ஐந்து _கிலோ மீட்டர் நடக்கப் பழகிக்கொள்ள வேண்டும். நடைப்பயிற்சி செய்தால் ஆரம்பத்தில் எடை குறையும்.

ஆனால், குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, எடை குறையாது. ஆனால், எடை _கட்டுக்குள் இருக்க, நடைப்பயிற்சி செய்யும் வேகத்தை அதிகரிக்க வேண்டும். டிரெட்மில்லில் நடப்பவர்கள், அந்தக் கருவியில்  உள்ள ஒவ்வோர் _இலக்கையும் படிப்படியாக முடிக்க முயற்சிக்க வேண்டும். உடல் எடையைக் குறைக்க நடைப்பயிற்சி தூண்டுகோல் மட்டுமே.

நடைப்பயிற்சியுடன் தசைகளை வலுவாக்கும் பயிற்சிகளையும் சேர்த்துச் செய்தால் மட்டுமே, உடல் எடை நன்றாகக் குறையும். கார்டியோ பயிற்சிகள் _(நடைப்பயிற்சி, ஜாகிங், சைக்கிளிங் ) 60 சதவிகிதமும் தசைகளை வலுவாக்கும் பயிற்சிகள் (புஷ் அப், ஸ்குவாட், பளு தூக்கும் பயிற்சிகள்) 40 சதவிகிதமும் செய்தால் உடல்_ எடை குறையும்.

அதிக அளவு உடற்பயிற்சி செய்தால், சீக்கிரமே உடல் எடை குறையும். _ஆனால், சீக்கிரமாக உடல்_ எடையைக் குறைக்கும் முறை உடலுக்கு ஏற்றது அல்ல. வாழ்நாள் முழுவதும் அதிக அளவு உடற்பயிற்சி செய்ய முடியாது. எனவே, தினமும் 300 -500 கலோரிகளை எரிக்கும் அளவு உடற்பயிற்சி _செய்தால் போதுமானது. வெறும் செருப்பு போட்டுக்கொண்டு நடைப்பயிற்சி செய்யக் கூடாது.

டிராக் ஸூட் , ஷூ அணிந்துதான் நடைப்பயிற்சி, ஜாகிங் செல்ல வேண்டும். எந்த நேரத்திலும் உடற்பயிற்சி செய்யலாம். எனினும் காலை வேளையில் _உடற்பயிற்சி செய்வது உற்சாகம் தரும். உடற்பயிற்சி செய்யும்போது எண்டார்பின் என்னும் அமிலம் சுரக்கும். இது மகிழ்வான உணர்வைத் தரும். _எனவே, அன்றைய தினம் வேலைகளைச் சுறுசுறுப்பாக செய்ய முடியும். ஒரு நாளைக்கு 40 நிமிடங்கள் முதல் அதிகபட்சம் 90 நிமிடங்கள் வரை உடற்பயிற்சி மேற்கொண்டால் போதுமானது.

_குடும்பத்தினருடன் ஒன்றாக நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்வது ஊக்கம் அளிக்கும். ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொள்ளத் திட்டமிடுபவர்கள், ஆர்வக்கோளாறாக எல்லா கருவிகளையும் பயன்படுத்தக் கூடாது. முதல் 10 _நாட்கள் வெறும் நடைப்பயிற்சி மட்டுமே செய்ய வேண்டும். உடற்பயிற்சியாளர் அனுமதியுடன் மட்டுமே, பளு தூக்கும் பயிற்சிகளில் ஈடுபட வேண்டும்.

வீட்டில் எடை பார்க்கும் இயந்திரம் ஒன்று வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். தினமும் காலை வெறும் வயிற்றில் எடை பார்த்துக் குறித்துக்கொள்ளுங்கள். ஒரு கிலோ அல்லது அதற்கு மேல் ஒரே நாளில் அதிகரித்து இருந்தால், அன்றைய தினம் உணவில் சிக்கனத்தையும் உடற்பயிற்சியில் கூடுதல் அக்கறையும் எடுத்துக்கொள்ள வேண்டும். நடைப்பயிற்சி முடிந்த உடனே காபி, டீ குடிக்கக் கூடாது.

_20 நிமிடங்கள் கழித்து தேவையான அளவு தண்ணீர் அருந்தலாம். நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்த பின்னர், நன்றாகக் குளித்த பின்னர், உணவு அருந்தலாம். சாப்பிட்ட உடன் உடற்பயிற்சி செய்யக் கூடாது. இரண்டு _மணி நேரம் கழித்துத்தான் உடற்பயிற்சி செய்யவேண்டும். உடற்பயிற்சி செய்யும்போது, திடீர் தாகம் எடுத்தால் 20-30 மி.லி அளவுக்கு மட்டும் தண்ணீர் குடித்தால் போதுமானது.

_உடற்பயிற்சி செய்யும்போது, அதிக அளவு தண்ணீர் குடிக்கக் கூடாது.  இயற்கையான முறையில், திட்டமிடல்களோடு தீர்மானமாக செயல்பட்டால் உடல்_ எடை குறைவதோடு, நீண்ட ஆரோக்கியமான வாழ்வும் வசமாகும். 

பெண்களின் தொப்பையை குறைக்க பயிற்சி

குழந்தைப்பேறுக்குப் பிறகு பெண்களுக்கு உடல்_ எடை அதிகரித்துவிடுகிறது. பெரும்பாலானோர் சிசேரியன் அறுவைசிகிச்சை செய்திருப்பதால், _கடினமான  உடற்பயிற்சிகளைச் செய்யத் தயங்குவர். சின்னச்சின்னப் பயிற்சிகள் மூலமே, எடையைக் குறைக்க முடியும்.

கால் முட்டி தரையில் படாதபடி, பாதம் மற்றும் கை விரல்களைத் தரையில் _ஊன்றியபடி இருக்கவும். இப்போது ஒரு கையால் உடலைத் தாங்கியடி, மற்றொரு கையை முன்னோக்கிக் கொண்டுசென்று தரையில் பதிக்கவும். _பிறகு, மற்றொரு கையையும் முன்னே கொண்டுசென்று தரையில் ஊன்றவும். பிறகு, கால்களைப் பின்னே நீட்டவும்.

உடல் தரையில் படக் கூடாது. ஓரிரு விநாடிகளுக்குப் பிறகு, பழைய _நிலைக்குச் சென்று, மெதுவாக கால்விரல்கள் மற்றும் முன்னம் பாதங்களில் எழுந்து நின்று, கைகளை உயர்த்தி இறக்கவும். ஒவ்வொரு பயிற்சியையும் _மூன்று செட்களாகப் பிரித்து, ஒவ்வொரு செட்டுக்கும் 10 முறை செய்ய வேண்டும்.

_பலன்கள்: உடல் எடையைக் குறைக்க உதவும். இதயத் துடிப்பு சீராக இருக்க உதவும். நுரையீரல் செயல்பாடு அதிகரிக்கும். 

காபியை விட டீ சிறந்ததா

காபி குடிப்பதை விட, டீ குடித்தால் தான் நிறைய ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.

காபி குடித்தால் உடலின் ஆற்றல் அதிகரிக்கும் தான். ஆனால் அதை அளவுக்கு அதிகமாக குடித்தால், உடலுக்கு பலவிதமான கேடுகளை ஏற்படுத்தும். அதுவே மூலிகை_ டீக்களான சீமைச்சாமந்தி அல்லது லாவெண்டர் போன்றவற்றை எடுத்துக் கொண்டால், அது மனதை அமைதிப்படுத்தி, உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும். எனவே நாள் முழுவதும் சுறுசுறுப்புடனும், நல்ல மனநிலையுடனும் இருக்க நினைத்தால், தினத்தை தொடங்கும் முன் ஒரு கப் டீ குடியுங்கள்.

காபி குடிப்பதால் உடல்_ எடையோ, தொப்பையோ குறையாது. ஆனால் க்ரீன் டீயைக் குடித்து வந்தால், உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, கொழுப்புச் செல்களின் அளவு குறைந்து, உடல் எடை குறையும். க்ரீன்_ டீயில் உள்ள EGCG எனும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், உடலைத் தாக்கி இருமல் மற்றும் காய்ச்சலை உண்டாக்கும் கிருமிகளிடமிருந்து பாதுகாப்பு அளித்து, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்க உதவும்.

காப்ஃபைன் அதிகம் நிறைந்த காபியைக் குடித்தால், அது உடலினுள் _அசிடிட்டியின் அளவை அதிகரித்து, செரிமான பிரச்சனை, நெஞ்செரிச்சல் மற்றும் இதர இரைப்பை கோளாறுகளை ஏற்படுத்தும். ஆனால் இஞ்சி டீ, புதினா_ டீ போன்றவற்றை குடித்தால், அது உடலில் அல்கலைன் அளவை அதிகரித்து, செரிமானம் சீராக நடைபெற உதவும்.

க்ரீன்_ டீ, ப்ளாக் டீ போன்றவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமான அளவில் உள்ளது. இதனால் அது புற்றுநோயைத் தடுக்கும். அதிலும் க்ரீன் டீயில் பாலிஃபீனாலும், ப்ளாக்_ டீயில் தியாப்ளாவின்கள் மற்றும் தியாரூபின்களும் உள்ளன. அதற்காக டீயை அதிக அளவில் குடிக்க வேண்டாம். இதனால் கடுமையான பக்க விளைவுகளைத் தான் சந்திக்க நேரிடும். 

உடல் எடை குறையவிடாமல் தடுக்கும் உணவு

சில நேரங்களில், உடல்_ எடையைக் குறைக்க நாம் என்ன தான் டயட்டில் இருந்து, தினமும் உடற்பயிற்சியை தவறாமல் செய்து வந்தாலும், எடையைக் குறைக்க முடியாமல் இருப்போம். சில உணவுகள் உங்கள் உடல் எடையை குறைய_ விடாமல் தடுக்கும் தன்மை கொண்டவை. உடல் எடை குறையவிடாமல் தடுக்கும் அந்த உணவுப் பொருட்களை பற்றி பார்க்கலாம்.

சமையல் எண்ணெயில் ஒமேகா-6 ஃபேட்டி அமிலம் அதிக அளவிலும், ஒமேகா-3 ஃபேட்டி அமிலம் குறைவான அளவிலும் உள்ளது.  எனவே சரிசம அளவில் அத்தியாவசிய ஃபேட்டி அமிலங்கள் நிறைந்த விர்ஜின் ஆலிவ் _ஆயிலையோ அல்லது சமையல் எண்ணெயையோ தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துங்கள். பால் பொருட்களுக்கு அழற்சி ஏற்படுவதற்கு அதில் உள்ள ஒவ்வாமை ஊக்கிகள் தான் காரணம். இதன் காரணமாக மலச்சிக்கல், _வயிற்றுப்போக்கு, சரும அரிப்பு, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மற்றம் சுவாசிப்பதில் பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

எனவே பால் பொருட்களை எடையைக் குறைக்கும் போது எடுத்து வந்தால், அதுவே உங்களுக்கு தடையை ஏற்படுத்தும். ஹைட்ரஜனேற்ற கொழுப்புக்களானது எண்ணெயில் பொரித்த உணவுகள், பேக்கிங் _செய்யப்பட்ட உணவுகள், பாக்கெட் உணவுகள், ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளில் தான் அதிகம் இருக்கும். இந்த கொழுப்புக்கள் கெட்ட கொழுப்புக்கள். இவை உடலினுள் சென்றால் நல்ல கொழுப்புக்களின் அளவு குறைந்து, உடலினுள் _அழற்சி ஏற்பட்டு, எடை அதிகரிப்பு, நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றை சந்திக்க நேரிடும். 

பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் மாட்டிறைச்சி உணவு
_குறிப்பாக இந்த வகை உணவுகள் உடல் பருமனை உண்டாக்கும். உணவில் சிறிது சர்க்கரையை சேர்த்தாலும் அதனால் உடல் பருமன் போன்றவை ஏற்படும்.

என்ன தான் நீங்கள் டயட்டில் இருந்து சர்க்கரை சேர்க்காமல் இருந்து, கடைகளில் விற்கப்படும் டயட் சோடாக்கள், ஜூஸ், மில்க் ஷேக் போன்றவற்றைக் குடித்து வந்தாலும், அதில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட _சர்க்கரையினால் உடல் எடையை அதிகரிக்கும். சுத்திகரிக்கப்பட்ட மாவுகளில்(மைதா)  எந்த ஒரு சத்துக்களும் இருக்காது. அதுமட்டுமின்றி, இவை உடலின் இரத்த சர்க்கரை அளவை அதிகரித்து, நீரிழிவு மற்றும் புற்றுநோய்க்கு வழிவகுக்கும். எனவே பிரட், நூடுல்ஸ், சாதம், பாஸ்தா, _பிஸ்கட் போன்றவற்றை டயட்டில் இருக்கும் போது தவிர்த்திடுங்கள்.
 

தவிர்க்க வேண்டிய நொறுக்குத்தீனிகள்

உடல்_ எடை அதிகரிக்க காரணமாக இருப்பது நீங்கள் உண்ணும் இடைவேளை உணவுகள் தான். நண்பகல், மாலை வேளையில் நீங்கள் உண்ணும், பஜ்ஜி, போண்டா, சமோசா, முட்டை_ பப்ஸ் போன்றவை அதிக கலோரிகள் கொண்டவை.

அதிக நேரம் உட்கார்ந்தே_ வேலை செய்பவர்கள் இந்த உணவுகளை சாப்பிட்டு விட்டு உட்கார்ந்தே வேலை செய்வதால் அந்த கலோரிகள் கரைக்கப்படாமல் கொழுப்பாக மாறி உடல் எடை அதிகரிக்கிறது. மைதா, எண்ணெய், வறுத்த உணவு இவை_ மூன்றுமே உடலில் கொழுப்பும், சர்க்கரையும் அதிகரிக்க கூடியவை. இவை மூன்றையும் கண்ணை மூடிக் கொண்டு தவிர்த்து விடுவது உடலுக்கு நல்லது. டீ, காபியுடன் நாம் மிகவும்_ விரும்பும் உணவு இந்த சமோசா. சராசரியாக நீங்கள் சாப்பிடும் ஒரு சமோசாவில் 200-250 கலோரிகள் இருக்கின்றன.

ஓரிரு சமோசாவில் அரைநாளுக்கு தேவையான கலோரிகள் சேர்ந்துவிடுகிறது. இதன் விளைவாக தொப்பை ஏற ஆரம்பித்துவிடுகிறது. அதிக நேரம் உட்கார்ந்தே வேலை செய்பவர்கள் எப்போதும் எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்த்து விடுவது மிகவும் நல்லது. இனிமேல் இடைவேளைகளில் நீங்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய நொறுக்குத்தீனிகள் சில உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்.

* டீ, காபியுடன் நாம் மிகவும் விரும்பும் உணவு இந்த சமோசா. ஒரு சமோசாவில் 200-250 கலோரிகள் இருக்கின்றன. ஓரிரு சமோசாவில் அரைநாளுக்கு தேவையான கலோரிகள் சேர்ந்துவிடுகிறது. இதன் விளைவாக தொப்பை ஏற ஆரம்பித்துவிடுகிறது.

* எண்ணெய் அதிகமாக சேர்த்து சமைக்கப்படும் கச்சோரியை நீங்கள் முற்றிலுமாக தவிர்த்து_விடுவது நல்லது. மேலும், எண்ணெயில் வறுத்த எந்த உணவாக இருந்தாலும் கண்ணை மூடிக் கொண்டு மாலை வேளையில் தவிர்த்துவிடுங்கள்.

* டீ, காப்பியுடன் பஜ்ஜி, போண்டா, வடையில் ஏதாவது ஒன்றை சாப்பிட்டால் மிகவும் _சுவையாக இருக்கும். பெரும்பாலும் வேலைக்கு செல்லும் ஆண்கள் தான் இதை அதிகமாக உட்கொள்கிறார்கள். பஜ்ஜி, போண்டா, வடையை எண்ணெயில் போட்டால் எப்படி ஊதி பெரியதாக வருவதை போல் அதன் சுவைக்கு அடிமையாகும் ஆண்கள், தங்களின் தொப்பையும் பெரியதாகும் என்பதை உணர்வதில்லை.

* சிலர் ஜிலேபி,_ ஜாங்கரி போன்ற இனிப்பு உணவுகளை விரும்பி உண்ணுவார்கள். இது உடலில் கொழுப்பு மட்டுமின்றி, சர்க்கரையும் அதிகமாக சேர காரணியாக இருக்கிறது.

* சேவா- பூந்தியும் உடலுக்கு கேடு தான். அளவாக இருக்கும் வரை அனைத்தும் அமிர்தம் தான் அளவை மீறும் போது தான் பிரச்சனை உடலில் அதிகரிக்க ஆரம்பிக்கிறது.

* பானிப்பூரியில் இருக்கும் பிரச்சனையே விற்கப்படும் இடம் தான். சுகாதாரமற்ற இடைவேளை உணவு இது தான். வீட்டில் சமைத்து சாப்பிடுவது பெரிதாய் உடலுக்கு எந்த பிரச்சனையும் தராது. சாலை ஓர கடைகளில் தொடர்ந்து இதை சாப்பிடுவது உடலுக்கு கேடு தான்.

- இந்த உணவுகளை காபி, டீ சாப்பிடும் போதும், இடைவேளையில் போதும் தவிர்த்து விடுவது மிகவும் நல்லது. அப்படி தவிர்க்க முடியாதவர்கள் அளவாக சாப்பிடுவது உடலுக்கு நல்லது. எதுவும் சாப்பிடும் போது அமிர்தமாக _இருந்தாலும் அதனால் உடலுக்கு உபாதைகள் மிகவும் மோசமானதாக இருக்கும்.

கொழுப்பை கரைக்க கொத்தவரை

*கொத்தவரையில் அதிக அளவில் நார்ச்சத்து இருப்பதால் ரத்தத்தில் உள்ள கொழுப்புச் சத்தினைக் குறைக்க உதவுகிறது. *மேலும் சீரண உறுப்புகள் சீராக இயங்கவும் சீரணப் பாதையை சுத்தம் செய்யவும் இந்த நார்ச்சத்து மிகவும் உபயோகமாக உள்ளது. *கொத்தவரையில் பொதிந்து விளங்கும் மாவுச்சத்தும், புரதச்சத்தும் உடலுக்கு நல்ல எரிசக்தியைத் தந்து உடல் இயக்கத்துக்குத் துணை செய்கிறது. *அதிக உடல் எடை உள்ளவர்கள் மற்றும் உடல் பருமனைக் குறைக்க விரும்புவோருக்கு சில பவுண்டுகளாகிலும் உடல் எடையைக் குறைக்கும் வகையில் உதவி புரிவதாக விளங்குகிறது.

சைக்கிள் பயிற்சி

  • *இதயத்துக்கு உகந்த, உயிர்வளியைப் பெருக்கும் உடற்பயிற்சிகளில் சிறந்தது சைக்கிள் பயிற்சி. _இது, குழந்தைகள் முதல் முதியவர்கள்வரை எல்லா வயதினருக்கும் ஏற்ற சிறந்த எளிமையான உடற்பயிற்சியாகும். _பிரான்ஸ் நாட்டு மருத்துவர்கள் சைக்கிள்_ பயிற்சியைப் பல வகையான நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுத்துகிறார்கள்.

  • உடல் பருமன், ரத்தமிகு அழுத்த நோய், குடல் இறக்கம், மூட்டுச்சிதைவு நோய், வாதக் காய்ச்சல் நோய், _முதுகுத் தண்டுவடம் நழுவுதல், கால் பெரு நரம்பு அழற்சி போன்ற நோய்களைக் குணப்படுத்துவதற்கான சிகிச்சையில், சைக்கிள் பயிற்சியையும் ஒரு முக்கியமான அம்சமாக வைத்திருக்கிறார்கள்.

  • மேலை நாடுகளில் பெரும்பான்மையான மருத்துவமனைகளில் சைக்கிள் பயிற்சியை ஒருவகையான மருத்துவமுறையாகக் கையாள்கிறார்கள். சிலவகையான நோயாளிகளுக்கு அவர்கள் தங்கள் உடல் நலத்தை மீண்டும் பெற சைக்கிள் பயிற்சியைப் பரிந்துரைக்கிறார்கள். மேலும் நீண்டநாள்களாகப் படுக்கையில் இருக்கும் நோயாளிகளின் வலுவிழந்த தசைகள் மீண்டும் உயிர்பெற, சைக்கிள் _பயிற்சியை அளிக்கின்றனர். ஹாலந்து நாட்டில் உள்ள பள்ளிகளில் சைக்கிள் பயிற்சியை விளையாட்டுக் கல்வியில் ஒரு பாடமாக வைத்துள்ளனர்.

தினமும் பள்ளி நேரத்தில் மாணவர்கள் சைக்கிள்_ பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்தியுள்ளனர். இத்தகைய முயற்சியின் காரணமாக உடல் நலக்குறைவால் பள்ளிக்கு வராமல் இருக்கும் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகச்_ சொல்கின்றனர். அன்றாடம் சிலமணி நேரம் மேற்கொள்ளும் சைக்கிள்_ பயிற்சியானது, இதயத் தசைகளை நன்கு வலுவாக்குவதோடு அல்லாமல், இதயத் தசைக்குச் செல்லும் ரத்தத்தின் அளவைப் பன்மடங்கு அதிகமாக்குகிறது என்கிறார் மருத்துவ வல்லுநர்கள்.

பெண்களுக்கு திருமணத்திற்கு பிறகு உடல் எடை அதிகரிப்பதற்கான காரணம்

எப்போதும் `ஸ்லிம்’ ஆக இருக்க வேண்டும் என்று உடல் அழகை கட்டுக்கோப்பாக வைக்கும் பெண்கள்கூட, திருமணத்திற்கு பிறகு எக்குதப்பாக சதை போட்டுவிடுகிறார்கள். அதுவும், ஒரு குழந்தை பிறந்துவிட்டால் இன்னமும் கூடுதலாக குண்டாகிவிடுகிறார்கள். ஏன்… ஒரு பெண் திருமணம் ஆனபிறகு மட்டும் குண்டாகிறாள்? என்கிற நோக்கில் ஆஸ்திரேலியாவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.

10 வருடங்களாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 18 முதல் 23 வயதுவரை உள்ள சுமார் 6,500 ஆஸ்திரேலிய பெண்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் திருமணத்திற்கு முன்பு என்ன உடல்நிலையில் இருந்தார்கள்? திருமணத்திற்கு பிறகும், குழந்தை பிறந்த பிறகும் அவர்களது உடல்நிலையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டன? என்று பல விஷயங்களை ஆய்வாளர்கள் ஆராய்ந்தனர்.

ஆய்வின் முடிவில், திருமணம் செய்து கொள்ளாத பெண்கள் 10 ஆண்டுகளில் 11 பவுண்டும் (ஒரு பவுண்ட் என்பது சுமார் 450 கிலோகிராம்), திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக்கொள்ளாத பெண்கள் 15 பவுண்டும், திருமணமாகி குழந்தையும் பெற்றுக்கொண்ட பெண்கள் 20 பவுண்டும் கூடுதல் உடல் எடை பெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஒரு பெண்ணின் அதிகப்படியான உடல் எடை அதிகரிப்பு, அவள் திருமணம் செய்து கொண்ட பின்னர்தான் ஆரம்பமாகிறது. முதல் குழந்தை பிறந்த பிறகு அவளது உடல் எடை இன்னும் அதிகமாகிறது. அதே பெண் இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ளும்போதும் அவளது உடல் எடை அதிகரிக்கிறது. ஆனால், இந்த உடல் எடை முதல் குழந்தை பெற்றபோது அதிகரித்த உடல் எடையைவிட சற்று குறைந்ததாகும்.

இந்த உடல் எடை அதிகரிப்பு, அந்த பெண்களுக்கு எதிர்கால வாழ்க்கையில் பல பிரச்சினைகளை கொண்டு வந்துவிடுகிறது. அதை தவிர்க்க வேண்டும் என்றால் அவர்களது உணவு பழக்கவழக்கத்தில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும். இப்போதெல்லாம், பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் பாஸ்ட் புட் வகைகளைத்தான் பெண்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள்.

இதனால் அவர்களது உடல் எடை அதிகப்படியாக கூடுதலாகிறது. மேலும், இன்றைய பெண்களுக்கு உடல் உழைப்பும் குறைந்துவிட்டது. அதிக நேரம் தூங்குகிறார்கள். இதுவும் அவர்களது உடல் எடை அதிகரிக்க மற்றொரு முக்கிய காரணம். அதனால், தினமும் முன்றுவேளை உட்கொள்ளும் உணவின் அளவை குறைப்பதோடு, தேவையான உடற்பயிற்சியையும் தினமும் செய்து வந்தால், அதிகப்படியான உடல் எடையை குறைக்கலாம்.  

கலோரிகள் அதிகம் கொண்ட உணவுகள்

உணவு என்பது நாம் வாழ்வதற்கு தேவைப்படும் ஒரு முக்கிய பொருளாகும். அது மருந்தை போலத்தான். அதிலும் ஆரோக்கியமான உணவை தேவையான அளவு உட்கொண்டால், உடல் ஆரோக்கியமாக விளங்கும். அதுவே ஆரோக்கியமில்லாத உணவுகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால், உடலில் பல வியாதிகள் வந்து சேரும்.

சில இந்திய உணவு வகைகளில் காய்கறிகள், முழு தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் அவரைகள் போன்ற சத்துள்ள பொருட்களை சேர்ப்பதால், அவைகள் ஆரோக்கியமான உணவுகளாக விளங்கும். இருப்பினும் நம் வட்டார வழக்கப்படி சமைக்கும் போது, அந்த உணவை எப்படி சமைக்கிறோமோ, அதனை பொறுத்து கலோரிகள் கூடி விடும்.

சில நேரங்களில் உணவுகளில் க்ரீம், நெய், வெண்ணெய் மற்றும் சர்க்கரை சேர்ப்பதாலும் கூட கலோரிகள் அளவுக்கு அதிகமாக கூடிவிடும். ஆரோக்கியமான இதயத்தை பெறுவதற்கும், உடல் எடை அதிகரிக்காமல் இருக்கவும் வேண்டுமானால், கூடுதல் கலோரிகளை கொண்ட சில இந்திய உணவுகளை தவிர்க்க வேண்டும். அப்படிப்பட்ட உணவுகள் என்ன என்று உங்களுக்கு தெரியுமா? இதோ அந்த உணவுகளின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!

கோழி குருமா :

மிதமான க்ரீமி வகை உணவான கோழி குருமா பல இந்திய வீடுகளில் தயார் செய்யப்படும் உணவாகும். கோழி, இஞ்சி பூண்டு பேஸ்ட், வெண்ணெய் மற்றும் நெய் ஊற்றி செய்யப்படுவது தான் இந்த உணவு. இந்த உணவில் தோராயமாக 800-870 கிலோ கலோரிகள் இருக்கும்.

சமோசா :

சமோசாவானது உருளைக் கிழங்கு, வெங்காயம் மற்றும் பட்டாணிகள் சேர்த்து செய்யப்படும். மிகவும் புகழ் பெற்ற நொறுக்குத் தீனியாக விளங்கும் சமோசா, மாலை நேரங்களில் உண்ணப்படும். இதனை தயாரிக்க உருளைக்கிழங்கு மசாலா, கோழி (அரிதாக), காய்கறி, எண்ணெய் மற்றும் உப்பு தேவைப்படும்.

இதனால் உட்கொள்ளும் கலோரிகளின் அளவு: 2 சைவ சமோசாவில் தோராயமாக 260 கிலோ கலோரிகள். அதுவே 2 அசைவ சமோசாவில் 320 கிலோ கலோரிகள் இருக்கும்.

தந்தூரி சிக்கன் :

தந்தூரி சிக்கன் என்பது மிகவும் புகழ் பெற்ற இந்திய உணவாகும். வறுத்த கோழி, தயிர் மற்றும் மசாலாக்களை கொண்டு தயார் செய்யப்படும் உணவு இது.

இதன் மூலம் உட்கொள்ளும் கலோரிகளின் அளவு: ஒரு கோழியின் காலில் தோராயமாக 264-300 கிலோ கலோரிகள் இருக்கும்.

மெட்ராஸ் சிக்கன் :

சிக்கன், பன்றிக்கறி, மாட்டிறைச்சி, ஆட்டுக்கறி மற்றும் கொத்துக்கறி போன்றவைகளை வைத்து இந்த காரமான குழம்பை தயாரிக்கலாம்.

உட்கொள்ளும் கலோரிகளின் அளவு: 100-200 கிராமில் தோராயமாக 450-500 கிலோ கலோரிகள் இருக்கும்.

புலாவ் :

சாதத்தில் சுவையை சேர்க்க மசாலாக்கள் சேர்த்து, அதில் கோழி, காய்கறி அல்லது மீனின் ஸ்டாக் போன்றவற்றை சேர்த்து சமைக்கும் உணவு தான் புலாவ்.

உட்கொள்ளும் கலோரிகளின் அளவு: ஒரு முறை உட்கொள்ளும் அளவில் தோராயமாக 449 கிலோ கலோரிகள் இருக்கும்.

வெங்காய பஜ்ஜி :

இந்த காரசாரமான இந்திய நொறுக்குத் தீனி உருளைக்கிழங்கு பஜ்ஜியை போன்றது தான். பல வடிவங்களில் செய்யப்படும் பஜ்ஜியை பல இந்திய உணவுகளை உண்ணும் போது அதனுடன் சேர்த்து உண்ணலாம். தனியாகவும் உண்ணக்கூடிய இந்த உணவு மிகவும் புகழ் பெற்ற உணவாக விளங்குகிறது.

சிக்கன் டிக்கா :

மசாலா வறுத்த கோழிகறி துண்டுகளை காரசாரமான கிரேவியில் போட்டு தயார் செய்வது தான் சிக்கன் டிக்கா மசாலா. காரசாரமான ஆரஞ்சு நிறமுடைய உணவு இது. இது நம் இந்திய பாரம்பரிய உணவே அல்ல. சிக்கன் டிக்காவை போல் உள்ளதால், முகலாய உணவு வகையான இது இப்பெயரை பெற்றது.

கோழி குழம்பு :

கோழி குழம்பு என்பது ஒரு பொதுவான சுவைமிக்க இந்திய உணவாகும். கோழி மற்றும் குழம்பு கலந்து செய்யப்படுவது தான் இந்த உணவு. இதில் சேர்க்கப்படும் மசாலா பொடிகளில் போக குங்குமப்பூ, இஞ்சி மற்றும் இதர பொருட்களையும் சேர்க்கலாம்.

மட்டன் ரோகன் ஜோஷ் :

ரோகன் ஜோஷ் என்ற வாசனையான மட்டன் உணவு புகழ் பெற்ற காஷ்மீரி உணவாகும். இதனை அதிக பட்ச வெப்பத்தில் சமைக்க வேண்டும்.

உட்கொள்ளும் கலோரிகளின் அளவு: ஒரு முறை பரிமாறும் அளவில் 589 கிலோ கலோரிகள் இருக்கும்.

மட்டன் கீமா :

குறும்பாட்டு கறியை கார சாரமான மசாலாக்கள் மற்றும் பச்சை பட்டாணியுடன் சேர்த்து சமைக்கப்படும் உணவு இது.

உட்கொள்ளும் கலோரிகளின் அளவு: ஒரு முறை பரிமாறும் அளவில் 502-562 கிலோ கலோரிகள் இருக்கும். 
 

சுறுசுறுப்புடன் செயல்பட காலை உணவுகள்


தொடங்கும் நாள் சிறந்ததாக இருக்க வேண்டுமெனில், அதற்கு காலையில் நல்ல ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும் என்று சொல்வார்கள். ஏனெனில் காலையில் நல்ல ஆரோக்கியமான மற்றும் உடலுக்கு தேவையான ஆற்றல் அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டால், உடலின் சக்தி சீராக இருந்து, உடல் நன்கு சுறுசுறுப்புடன் செயல்படும்.

அதிலும் காலையில் உண்ணும் உணவுகளில் கலோரி குறைவாகவும், எனர்ஜி அதிகமாகவும் இருக்கும் உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். இதனால், உணவுகள் சீக்கிரம் செரிமானமடையாமல், பொறுமையாகவும் ஆரோக்கியத்தை தரும் வகையிலும் செரிமானமாகும். குறிப்பாக நார்ச்சத்து அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது மிகவும் சிறந்தது.

முக்கியமாக காலையில் எழுந்ததும் உடலானது ஊட்டச்சத்துக்களை நாடும். ஆகவே புரோட்டீன் மற்றும் நார்ச்சத்துடன் கூடிய கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள் சிறந்ததாக இருக்கும். ஏனெனில் இத்தகைய உணவுகளை காலையில் சாப்பிட்டால், நாள் முழுவதும் சக்தியானது நிறைந்திருப்பதோடு, உடல் சோர்வடையாமலும் இருக்கும்.

மேலும் இத்தகைய உணவுகளை காலையில் செய்வது சாப்பிடுவது மிகவும் எளிது. இப்போது நாள் முழுவதும் ஆரோக்கியமாகவும், சோர்வில்லாமலும் செயல்பட எந்த உணவுகளை காலையில் சாப்பிட வேண்டும் என்று பார்ப்போம். உடல் ஆரோக்கியத்திற்கு காலையில் சாப்பிட வேண்டிய உணவுகள்!!!

தேன் காலையில் எழுந்ததும், வெதுவெதுப்பான நீரில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடித்தால், குடலியக்கம் சீராக இயங்குவதோடு, உடலும் ஒல்லியாகும் செரில் காலையில் சாப்பிட செரில் ஒரு சிறந்த உணவுப் பொருள். இதில் உள்ள கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து, வயிற்றை நிறைப்பதோடு.

அத்துடன் சேர்த்து சாப்பிடும் பொருட்களில் நிறைந்திருக்கும் இரும்புச்சத்து மற்றும் கால்சியம், நாள் முழுவதும் உடலில் ஊட்டச்சத்துக்களை நிறைத்திருக்கும். மூலிகை டீ டீயில் காபியை விட, குறைவான அளவில் காப்ஃபைன் இருப்பதோடு, அதிகப்படியான ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளது.

எனவே இது உடலை புத்துணர்ச்சியுடனும், அழகாகவும் வைத்துக் கொள்ள உதவும் முட்டை தினமும் காலையில் ஒரு முட்டை சாப்பிட்டால், அதில் உள்ள அதிகப்படியான புரோட்டீன் மற்றும் ஒமேகா3 ஃபேட்டி ஆசிட், நாள் முழுவதும் உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளும்.

பால் பாலில் நிறைய புரோட்டீன் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளதால், காலையில் ஒரு டம்ளர் பால் அல்லது செரிலுடன் பால் சேர்த்து சாப்பிடுவது நல்லது. தர்பூசணி காலையில் எழுந்ததும் தாகமாக இருக்கும்.

எனவே அப்போது நீர்ச்சத்து அதிகம் நிறைந்த தர்பூசணியை ஜுஸ் போட்டு சாப்பிட்டல், உடல் வறட்சி நீங்கி புத்துணர்வுடன் இருப்பதோடு, கலோரி குறைவாக இருப்பதால், உடல் எடையும் கட்டுப்பாட்டுடன் இருக்கும். ஓட்ஸ் தினமும் காலை உணவாக ஓட்ஸை சாப்பிட்டு வந்தால், வயிறு நிறைவதோடு, உடலில் உள்ள கொலஸ்ட்ரால் குறைந்து, இதயம் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

காபி காப்ஃபைன் அதிகம் நிறைந்துள்ள காபி ஆரோக்கியமானது என்று சொல்ல முடியாது. ஆனால், அதனைக் குடித்தால் ஒற்றைத் தலைவலியானது குணமாகும். மேலும் காபியின் மணமானது மனதை புத்துணர்ச்சியுடன் வைக்கும். சிட்ரஸ் பழங்கள் சிட்ரஸ் பழங்களை காலை உணவாக சாப்பிட்டால், அது எண்ணிலடங்கா ஆற்றலை உடலுக்கு கொடுக்கும்.

மேலும் இந்த பழங்கள் செரிமானத்திற்கு சிறந்ததோடு மட்டுமின்றி, இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் கோதுமை பிரட் நவதானியங்களால் ஆன பிரட்டை காலை உணவாக சாப்பிட்டால், அதில் உள்ள நார்ச்சத்து மற்றும் குறைவான கலோரி உள்ள கார்போஹைட்ரேட், சிறந்த காலை உணவாக இருப்பதோடு, உடல் ஆரோக்கியத்துடன் வயிறும் நிறையும், வாழைப்பழம் காலை எழும் போது உடல் ஆற்றலின்றி சோர்ந்து இருக்கும்.

அப்போது உடலுக்கு சிறந்த ஆற்றலை வாழைப்பழங்கள் கொடுக்கும். ஆளி விதை பொதுவாக காலை உணவில் ஆளி விதை சாப்பிடுவதை நினைக்கமாட்டோம். ஆனால் காலையில் ஒரு கையளவு ஆளி விதையை ஃபுரூட் சாலட் உடன் சாப்பிட்டால், உடலுக்கு வேண்டிய ஒமேகா3 ஃபேட்டி ஆசிட்டானது கிடைத்து, உடலானது நாள் முழுவதும் ஆரோக்கியமாக செயல்படும்.

தயிர் நிறைய மக்கள் காலையில் எழுந்ததும் பால் குடிக்கமாட்டார்கள். அத்தகையவர்களுக்காகத் தான் தயிர் உள்ளது. எனவே பாலுக்கு பதிலாக தயிரை சாப்பிட்டால், புரோட்டீன் மற்றும் கால்சியம் கிடைப்பதோடு, உடலுக்கு வேண்டிய நல்ல பாக்டீரியாக்களும் கிடைக்கும். கோதுமை முளை முளைக்கட்டிய கோதுமையில் வைட்டமின் ஈ மற்றும் ஃபோலேட் அதிக அளவில் நிறைந்துள்ளது.

எனவே இதனை சாப்பிட்டால், ஆரோக்கியமான முறையில் வயிறு நிறையும் பப்பாளி பப்பாளி ஒரு சிறந்த காலை உணவாகும். அதிலும் டயட் மேற்கொள்வோருக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இதில் உள்ள லைகோபைன் என்னும் ஆன்டிஆக்ஸிடன்ட், கொழுப்புக்களை கரைத்து விடும்.

ஆனால் இந்த பழத்தை கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது. பாதாம் டயட் மேற்கொள்வோர், காலையில் தினமும் ஒரு கையளவு பாதாம் சாப்பிட்டால், அதில் உள்ள ஒமேகா3 ஃபேட்டி ஆசிட், உடலுக்கு வேண்டிய ஆற்றலைக் கொடுக்கும். மேலும் இதில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளதால், முடியும் நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.

பெர்ரிப் பழங்கள் பெர்ரி சூப்பர் உணவுகளில் ஒன்றாகும். மேலும் இதில் நிறைந்துள்ள ஆன்டிஆக்ஸிடன்ட், புற்றுநோயை தடுப்பதோடு, உடல் முழுவதற்கும் ஆரோக்கியத்தை தருகிறது. எனவே காலை உணவாக பெர்ரிப்பழங்களைக் கொண்டு மில்க் ஷேக் போட்டு குடிக்கலாம்.

வேர்க்கடலை வெண்ணெய் வேர்க்கடலை வெண்ணெயானது மெதுவாக கார்போஹைட்ரேட்டை வெளிவிடுவதால், அது நீண்ட நேரம் பசிக்காமல் பார்த்துக் கொள்ளும். அதுமட்டுமின்றி, இது உடல் எடை குறையவும் உதவிபுரியும். ஆகவே வேர்க்கடலை வெண்ணெயை கோதுமை பிரட் உடன் சேர்த்து சாப்பிடலாம்.

தண்ணீர் காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிப்பது என்பது மிகவும் முக்கியமானது. ஏனெனில் அவை உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றிவிடும் என்பதாலேயே ஆகும். அதிலும் வெதுவெதுப்பான நீரை காலையில் பருகினால், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்கள் எளிதில் கரையும்.

ஆப்பிள் ஆப்பிளில் போதுமான அளவில் இரும்புச்சத்து மற்றும் உடலுக்கு ஆற்றலை அளிக்கும் இயற்கையான சர்க்கரையானது நிறைந்துள்ளது. எனவே இத்தகைய ஆப்பிளை காலையில் ஒன்றோ அல்லது செரிலுடன் சேர்த்தோ சாப்பிட்டால், மிகவும் நல்லது. 

நடப்பது நல்ல உடற்பயிற்சி


நடப்பது நல்ல உடற்பயிற்சியாகும். ஏனெனில் நடக்கும் போது இரத்த ஓட்டம் சீராக உடலில் எல்லா பாகங்களுக்கும் கிடைக்கிறது. இதனால் திசுக்களுக்குத் தேவையான சக்தி (கலோரிகள்) கிடைப்பதால் நமது உடல் நலம் நன்றாக இருக்கும்.

நாம் ஒரே இடத்தில் வெகுநேரம் உட்கார்ந்து கொண்டோ, நின்று கொண்டோ வேலை செய்பவராக இருந்தால், நமது கால்களில் உள்ள இரத்தக் குழாய்களுக்கு அங்குள்ள இரத்தத்தை திரும்பவும் இதயத்துக்கு அனுப்ப போதுமான அளவு அழுத்தம் கிடைப்பதில்லை.

இதனால் இரத்த ஓட்டம் உடலின் எல்லா பாகங்களுக்கும் சீராக இருப்பதில்லை. நடக்கும் போது நமது கால்களில் உள்ள தசைகள் இயங்கி, அருகிலுள்ள இரத்தக் குழாய்களை அழுத்தி இரத்தத்தை இதயத்துக்கு அனுப்பத் தேவையான சக்தியை அளிக்கின்றன.

ஆகவே தினமும் 2 அல்லது 3 கி.மீட்டர் தூரம் நடப்பது மிகவும் சிறந்த உடற்பயிற்சி ஆகும். ஒரு மைல் தூரம் ஒடும்போது நாம் அதே அளவு தூரம் நடப்பதைக் காட்டிலும் அதிகமான கலோ¡¢களை எ¡¢க்கிறோம். இதனால் நமது உடல் எடை விரைவாகக் குறைகிறது என்று பலர் கூறுகிறார்கள்.

ஆனால் இந்த கருத்து தவறானது.நாம் ஒடினாலும், நடந்தாலும், நாம் செல்லும் தூரம் ஒன்றாக இருக்கும் பட்சத்தில் நாம் ஒரே அளவு சக்தியைத் தான் செலவு செய்கிறோம். இங்கு வேகம் ஒரு பொருட்டல்ல. ஆனால் 30 நிமிடங்கள் நாம் ஓடும் போது, அதே 30 நிமிடங்கள் நடப்பவரைக் காட்டிலும் அதிக தூரம் கடக்கிறோம்.

தூரம் அதிகமாவதால் நாம் செலவு செய்யும் சக்தியும், எரிக்கும் கலோரிகளும் அதிகமாகின்றன. எனவே அவரவர் வயது மற்றும் உடல் திறனுக் கேற்றவாறு நமது உடற்பயிற்சியை அமைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். 

தொப்பை குறைய உடற்பயிற்சி1

பெண்களை பொறுத்தவரை 30 வயதுக்கு மேல் ஒவ்வொரு பிரச்சனையாக தலை காட்டும். சிலருக்கு உடல் எடை கூடும். குறிப்பாக வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேர்ந்து பெரிதாகி விடும். வயிற்றைக் குறைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் ஓயாத வேலைகளுக்கு நடுவே உடற்பயிற்சிகள் செய்ய நேரம் இருக்காது.

இப்படிப்பட்டவர்களுக்கு தினமும் 15 நிமிடங்கள் ஒதுக்கினால் போதும். இடை எடையையும் குறைக்க முடியும்.

சைக்கிளிங் (Cycling)....

தரையில் நேராகப் படுக்கவும். இரண்டு கால்களையும் உள்நோக்கி இழுத்துக் கொள்ளவும். இப்போது வலது காலை மட்டும் சைக்கிள் ஓட்டுவது போலப் பத்து முறை சுழற்றவும். பிறகு இதே போன்று கால்களை மாற்றிச் செய்யவும். இது மேல் வயிறு மற்றும் அடி வயிற்றுக்கு அழுத்தம் கொடுத்து வயிற்றுப்பகுதித் தசைகளுக்கு வலிமை சேர்க்கும்.

பலன்.... ஆறுமாதம் இப்படித் தொடர்ந்து செய்தால் உடல் எடை குறையும்.

ஆல்டர்நேட் டோ டச்(altermate toetouch).....

தரையில் படுக்கவும். இடது கால் தரையில் இருக்க வலது காலை எவ்வளவு முயுமோ அந்த அளவுக்கு உயர்த்த வேண்டும். அப்போது இடது கையால் வலது காலைத் தொட முயற்சி செய்யுங்கள். இந்த முயற்சி குறைந்து மூன்று நான்கு வினாடிகளுக்கு நீடிக்க வேண்டும். இப்போது கால் கைகளை மாற்றி இதே போல மீண்டும் செய்ய வேண்டும். இது போன்று மாற்றி மாற்றி பத்து முறை செய்ய வேண்டும்.

பலன்.... தொப்பை குறைவதுடன் முதுகு எலுப்பும் வலிமை பெறும். 

ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி பலன்கள்


இந்த அவசர உலகத்தில் வேலை பார்க்க மட்டும் தான் பலருக்கும் நேரம் உள்ளது. ஆனால் உடலை பராமரிக்க நேரம் கிடைப்பதில்லை. மேலும் பார்க்கும் வேலைகளிலும் உடல் உழைப்பு இருப்பதில்லை. இதனால் பாதிப்படைய போவது உடல் தான்.

ஆகவே உடற்பயிற்சி செய்ய நேரம் ஒதுக்குவது மிகவும் அவசியமான ஒன்று. ஒழுங்கான உணவு மற்றும் உடற்பயிற்சியின் கலவை தான் நல்ல கட்டமைப்போடு இருக்கும் உடல். நாம் என்ன உணவு சாப்பிடுகிறோம் என்பதில் கவனமாக இருக்கும் போது உடற்பயிற்சியை மறந்தே விடுவோம். உணவிற்கு தரும் முக்கியத்துவத்தை போல் உடற்பயிற்சிக்கும் தர வேண்டும்.

உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பல வகையான தேவைபாடுகளுக்கு பல வகையான உடற்பயிற்சி உள்ளன. சில உடற்பயிற்சி ஆரோக்கியமான உடல் நலத்துக்கும், சில உடற்பயிற்சி நோயை குணப்படுத்தவும் உதவும். யோகா போன்ற சில உடற்பயிற்சிகள் மன நலனுக்காகவும் பயன்படுகிறது. இப்போது அத்தகைய உடற் பயிற்சியினால் உடலுக்கு ஏற்படும் நன்மைகளை பார்க்கலாமா!

மன ஆரோக்கியம் : தினசரி 30-45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தால், உடல் மற்றும் மூளை புத்துணர்வுடனும், ஆரோக்கியமாகவும் இருக்கும். மேலும் மன நிலையையும் நன்றாக வைக்க உதவும்.

மேலும் புதிய நியூரான்களை உருவாக்கவும் உடற்பயிற்சி உதவுகிறது. இதனால் அல்சைமர் அல்லது பார்கின்சன் போன்ற மனநோய்களிலிருந்து விடுபடலாம். குறிப்பாக, வாழ்க்கையின் பின்னாட்களில் மனநோய் ஏற்பட்டாலும், அதை தடுக்கும் ஆற்றல் உடற்பயிற்சிக்கு உண்டு.

உடலுறவில் குதூகலம்  : தினசரி உடற்பயிற்சி செய்தால், உடலின் வலிமையையும் ஆற்றலும் அதிகரிக்கும். அதனால் துணைவியின் முன், ஆண்மையுடன் காட்சி அளிப்பீர்கள். மேலும் உடலுறவும் இன்பம் மிக்கதாக அமையும். சீரான முறையில் உடற்பயிற்சி செய்தால் பெண்களை கவர்வது மட்டுமல்லாமல், ஆண்மை குறைவு போன்றவற்றையும் தடுக்கலாம்.

பதற்றம்  : உடற்பயிற்சி செய்தால் பதற்றத்தின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். மனம் அமைதியாய் இருக்கும். இதனால் தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன் கவலைகளும் நீங்கும்.

இதயம் சீராக  : உடற்பயிற்சி செய்தால், பல விதமான நோய்களில் இருந்து இதயம் பாதுகாப்பாக இருக்கும். பரம்பரையாக இதய நோய் இருந்தால், உடற்பயிற்சி செய்வதால் நீண்ட காலத்திற்கு ஆரோக்கியமான வாழ்வை வாழலாம். அதனால் உடற்பயிற்சி செய்து, இதய நோய்களை விட்டு விலகி இருக்கவும்.

உடல் எடை  : ஆரோக்கியமான உடல் எடையோடு இருப்பது தான் அனைவரின் கனவு. இதை அடைவதற்கு உடற்பயிற்சி மிகவும் உறுதுணையாக இருக்கிறது. தேவையான உடற்பயிற்சியுடன் சரியான உணவை உட்கொண்டால், உடல் கட்டமைப்போடு அழகாக காட்சியளிக்கும்.

நீரிழிவு  : உடல் எடையை குறைக்க மட்டும் உடற்பயிற்சி உதவுவதில்லை, அதிக எடை உள்ள வர்களுக்கு ஏற்படும் சர்க்கரை நோயை தடுக்கவும் உதவியாக இருக்கும். அதிலும் தினசரி உடற்பயிற்சி செய்தால், ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.

ரத்த அழுத்தம்  : உயர் இரத்த அழுத்தத்தை `அமைதியான கொலைகாரன்' என்றும் அழைப்பர். உயர் ரத்த அழுத்தம் வராமால் தடுக்க சீரான முறையில் உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்சி செய்வதன் மூலம் ரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். மேலும் தசைகளுக்கு அதிக ஆக்சிஜன் கிடைக்கும். இதனால் ரத்தக் குழாய்கள் ஓய்வெடுக்க உதவுவதால் இரத்த அழுத்தம் வருவதையும் தடுக்கும்.

உடல் உறுதி  : அவ்வப்போது உடற்பயிற்சி செய்வதால் அதிகப்படியான வியர்வையானது, நம்மை சோர்வடைய செய்யும். ஆனால் தொடர்ச்சியாக செய்தோமானால் உடல் உறுதி அதிகரித்து, அயர்ச்சியை குறைக்கும். நோய் தடுப்பாற்றல் தொடச்சியாக உடற்பயிற்சி செய்தால், நோய் தடுப்பாற்றல் அமைப்பு அதிகரிக்கும். இதனால் சளி, காய்ச்சல் போன்ற பல வகையான நோய்களில் இருந்தும் விடுபடலாம்.

ஆரோக்கியம்  : உடற்பயிற்சி, உடலை ஆரோக்கியத்தோடு வைத்திருக்கும். அதிலும் உடல் தடித்தல், சர்க்கரை நோய், இதய நோய், ரத்தக் கொதிப்பு மற்றும் வாதம் போன்ற பிரச்சனையில் இருந்து நம்மை பாதுகாக்கும். 

உடல் எடை குறைய ஜுஸ்கள்

உலகில் ஒருவருக்கு ஏற்படும் பிரச்சினைகளிலேயே மிகவும் தொல்லை தரும் பிரச்சினை என்றால் அது உடல் பருமன் தான். உடல் எடை அதிகம் இருந்தால், எந்த ஒரு வேலை யையும் சரியாகவும், நிம்ம தியாகவும் செய்ய முடியாது. எதை செய்தாலும் சிறிது நேரத்திலேயே மூச்சு வாங்கி, உடல் சோர்ந்துவிடும்.

எனவே பலர் இந்த உடல் எடையை சீக்கிரம் குறைக்க வேண்டுமென்று, தினமும் ஜிம் செல்வது, டயட் மேற்கொள்வது என்று இருக்கின்றனர். அதுமட்டுமின்றி, தற்போது உடல் எடையை குறைக்க பல்வேறு வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் ஜுஸ்கள் மூலம் எடையைக் குறைப்பது.

அது எப்படி ஜுஸ் குடிப்பதன் மூலம் குறைக்க முடியும் என்று கேட்பீர்கள். உண்மையிலேயே ஜுஸ்களை குடித்தால், ஜுஸ்கள் அடிக்கடி பசி ஏற்படுவதைக் குறைத்து, நீண்ட நேரம் வயிற்றினை நிறைத்து வைத்திருக்கும். இதனால் கண்ட கண்ட உணவுப் பொருட்களை சாப்பிடமாட்டோம்.

குறிப்பாக உடல் எடை குறைய வேண்டு மானால், முதலில் அனைவரும் உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் செயலின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். இதனால் நிச்சயம் விரைவில் உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காண முடியும். அதிலும் ஒரு வாரத்தில் உடல் எடையில் ஒரு குறிப்பிட்ட அளவில் மாற்றத்தைக் காணலாம். சரி, இப்போது உடல் எடையை குறைக்க உதவும் ஜுஸ்கள் சிலவற்றைப் பார்ப்போமா!!!

தர்பூசணி ஜுஸ் :

உடல் எடை குறைப்பில் தர்பூசணி ஜுஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. அதிலும் இதனை தினமும் உணவு உண்பதற்கு முன் ஒரு டம்ளர் குடித்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

அன்னாசி ஜுஸ் :

அன்னாசியை மட்டும் அரைத்தால், அது கெட்டியான ஜுஸ் போன்று இருக்கும். ஆகவே அதில் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து, பசியாக இருக்கும் நேரத்தில் குடித்தால், பசியானது உடனே அடங்கும்.

அவகேடோ ஜுஸ் :

நிறைய பேர் உடல் எடையை குறைக்க நினைக்கும் போது அவகேடோ சாப்பிடக்கூடாது என்று தவறான கருத்தைக் கொண்டுள்ளார்கள். ஆனால் உண்மையில் இது மிகவும் நல்லது. அதிலும் அவகேடோவை அரைத்து ஜுஸ் போட்டு, தேன் சேர்த்து குடித்து வந்தால், தொப்பை குறைந்து விடும்.

மேலும் இதில் நல்ல கொழுப்புக்கள் இருப்பதால், இது உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் சீராக இயங்க செய்வதோடு ரத்த சுத்திகரிப்பையும் சிறப்பாக மேற்கொள்கிறது. உடலுக்கு கூடுதல் சக்தியையும் வழங்குகிறது.

தக்காளி ஜுஸ் :

ஏழே நாட்களில் எடையில் நல்ல மாற்றம் வேண்டுமெனில், 3 தக்காளியை வேக வைத்து, அதனை அரைத்து, அதில் வெல்லம் சேர்த்து, தினமும் மூன்று வேளை குடித்து வர வேண்டும்.

எலுமிச்சை ஜுஸ் :

பொதுவாக எலுமிச்சை உடல் எடைக் குறைப்பில் முக்கிய பங்கினை வகிக்கிறது. அதிலும் ஏழே நாட்களில் எடையில் மாற்றம் தெரிய, எலுமிச்சை ஜுஸில் 1 சிட்டிகை உப்பு மற்றும் தேன் சேர்த்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலில் தங்கியுள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்துவிடும்.

கிரேப் புரூட் ஜுஸ் :

கிரேப் புரூட்டில் வைட்டமின்கள் மற்றும் நல்ல கொழுப்புக்கள் இருப்பதால், இதனைக் கொண்டு ஜுஸ் போட்டு குடித்து வந்தால், உடல் எடை குறைவதோடு, சருமமும் நன்கு பொலிவோடு இருக்கும்.

ஆரஞ்சு ஜுஸ் :

ஆரஞ்சு பழ ஜுஸை குடித்தாலும், எடையில் மாற்றம் தெரியும். அதிலும் ஆரஞ்சுப் பழ ஜுஸில் சிறிது தேன் சேர்த்து குடிக்க வேண்டும். குறிப்பாக வெதுவெதுப்பான தண்ணீரில் ஜுஸ் போட்டு குடிக்க வேண்டும்.

திராட்சை ஜுஸ் :

தினமும் காலையில் உணவு உண்பதற்கு முன்னர், ஒரு டம்ளர் திராட்சை ஜுஸ் குடித்து வந்தால், திராட்சை உடலில் தங்கியுள்ள நச்சுக்களை வெளி யேற்றி, விரைவில் உடல் எடையைக் குறைக்கும்.

கொய்யாப்பழ ஜுஸ் :

கொய்யாவில் வைட்டமின் `சி' அதிகம் உள்ளதால், இதனை ஜுஸ் போட்டு வாரத்திற்கு இரண்டு நாட்கள் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அது உடலில் உள்ள கொழுப்புக்களை கரைத்து விடும்.

பெர்ரிப் பழ ஜுஸ் :

பெர்ரிப் பழங்களைக் கொண்டு ஜுஸ் போட்டு குடித்து வந்தாலும், உடல் எடை குறையும். அதிலும் உணவு உண்பதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன், இந்த ஜுஸை குடிக்க வேண்டும். இதனால் அதிகளவு உணவு உண்பதைத் தவிர்க்கலாம். 
 

உடல் எடையை குறைக்கும் பயிற்சிகள்

உடல் எடையை குறைப்பதற்கு எவ்வளவு தான் முயற்சித்தாலும் சிலருக்கு எடை மட்டும் குறையாது. அதிலும் சிலர் எடை குறைக்க வேண்டுமென்று ஜிம் செல்வார்கள். ஆனால் அதனை எடை குறைக்க வேண்டுமென்ற ஆர்வத்தில் ஒரு வாரம் மட்டும் தான் செல்வோம். அதன் பின் அதுவும் இல்லை.

சிலரோ தினமும் காலையில் எழுந்ததும் வாக்கிங், ஜாக்கிங் போன்றவற்றையாவது தொடர்ந்து செய்யலாம் என்று முடிவெடுப்பார்கள். அதுவும் தோல்வியிலேயே முடியும். உடற்பயிற்சி கூடங்களுக்கு சென்று தான் உடற்பயிற்சி செய்ய வேண்டுமென்பது இல்லை. கீழே கொடுக்கப்பட்டுள்ள சில எளிய வழிமுறைகளை பின்பற்றி உடற்பயிற்சி செய்து வந்தால் உங்கள் உடல் எடை படிப்படியாக குறைவதை காணலாம்.

- அனைத்து வீடுகளிலும், அலுவலகத்திலும் மாடிகள் இருக்கும். அப்போது மேலே செல்வதற்கு, லிப்ட்டுகளை பயன்படுத்தாமல், மாடிப்படிக்கட்டுகளின் மூலம் செல்லலாம். இதுவும் உடல் எடையைக் குறைப்பதற்கான ஒரு வழியான உடற்பயிற்சி தான்.

- தொப்பையைக் குறைப்பதற்கு ஒரு சிறந்த உடற்பயிற்சி என்றால், முதலில் தரையில் படுத்துக் கொண்டு, கைகளை தலைக்கு பின்னால் பிடித்துக் கொண்டு, மெதுவாக முன்னால் எழ வேண்டும். அப்போது கால்களையும் முன்னோக்கி தூக்க வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து செய்தால், வயிற்றில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரையும், உடல் எடையும் படிப்படியாக குறையும்.

- தரையில் குப்புற படுத்துக் கொண்டு, கைகள் இரண்டையும் தரையில் பதித்து, கால் கட்டை விரல்கள் இரண்டையும் தரையில் ஊன்றி போலன்ஸ் செய்து உடலை மேலே தூக்கிக் கொண்டு, பின் மெதுவாக முன்புறமாக மூக்கு தரையில் தொட்டு படி குனிந்து, பின் மீண்டும் உடலே மேலே தூக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், கைகள் மற்றும் மார்புகள் நன்கு வலிமை பெறும்..

- ஜாக்கிங் என்று சொன்னதும் வெளியே தான் செல்ல வேண்டும் அல்லது உடற்பயிற்சி இயந்திரங்கள் மூலம் தான் செய்ய வேண்டும் என்பதில்லை. வீட்டில் டிவி பார்த்துக் கொண்டே, ஒரே இடத்தில் நின்று கொண்டே ஜாக்கிங் செய்யலாம்.

- இதுவும் ஒரு சிறுவயது விளையாட்டு தான். இதற்கு வெறும் கயிறு மட்டும் போதுமானது. ஆகவே வீட்டில் ஸ்கிப்பிங் கயிறு இருந்தால், அதனை நேரம் கிடைக்கும் போது, தோட்டம் அல்லது மாடியில் விளையாடலாம்.

- டேபிள் அல்லது கட்டிலில் கைகளை ஊற்றி, முன்னும் பின்னும் எழ வேண்டும். மற்றொன்று, கால்களை டேபிளின் மேல் வைத்துக் கொண்டு, கைகளை தரையில் வைத்துக் கொண்டு, மேலும் கீழம் எழ வேண்டும். இவ்வாறு சிறு பயிற்சிகளை செய்து வந்தால் உடல் எடை படிப்படியாக குறைவதை காணலாம். 

தொப்பையை குறைக்க வழிகள்

வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவது தான். இத்தகைய வாழ்க்கை முறையை யாரும் கட்டாயப்படுத்தி வாழ வேண்டும் என்று சொல்வதில்லை. நாமே தான் அத்தகைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை வெளியுலகத்திற்காக தேர்ந்தெடுத்து வாழ்ந்து வருகிறோம்.

மேலும் பலர் ஆரோக்கியமற்றது என்று தெரிந்தும் இன்றும் அதனைப் பின்பற்றுகின்றனர். இவ்வாறு தேர்ந்தெடுத்து பின்பற்றிவிட்டு, பின்னர் குத்துதே குடையுதே என்று பெரிதும் அவஸ்தைப்படுவோர் அதிகம். ஆனால் இத்தகைய தொப்பையை குறைப்பது என்பது மிகவும் எளிது தான்.

அதற்கு முதலில் செய்ய வேண்டியது எல்லாம் ஜங்க் உணவுகளை தவிர்த்து, தினமும் போதிய அளவில் உடற்பயிற்சி செய்வது தான். இதனால் அதிகப்படியான உடல் எடை குறைவதோடு, வயிற்றைச் சுற்றியிருக்கும் தொப்பையை எளிதில் குறைக்கலாம்.

ஏனெனில் உடற்பயிற்சியானது ஒரு குறிப்பிட்ட பாகத்திற்கு மட்டும் என்பதில்லை. பொதுவாக உடற்பயிற்சி செய்தால், உடல் முழுவதுமே அப்பயிற்சியில் ஈடுபடுவதால், நிச்சயம் உடல் எடையுடன், தொப்பை என்று சொல்லப்படும் பெல்லி குறையும். அதற்கு தினமும் உடற்பயிற்சியுடன், ஒருசில தொப்பையையும் மேற்கொள்ள வேண்டும்.

அத்தகைய டயட்டை கீழேக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து, உடற்பயிற்சியுடன் சேர்த்து, இதையும் பின்பற்றினால், நிச்சயம் உடல் எடையுடன், வயிற்றினைச் சுற்றியுள்ள தொப்பையையும் குறைக்க முடியும். சரி, அதைப் பார்ப்போமா!!!

1. தண்ணீர்: தினமும் குறைந்தது 78 டம்ளர் தண்ணீர் குடித்தால், உடல் வறட்சியில்லாமல் இருப்பதோடு, உடலில் தங்கியிருக்கும் நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும். மேலும் அவ்வப்போது சீரான இடைவெளியில் தண்ணீர் குடித்தால், உடலின் மெட்டபாலிசமானது அதிகரிக்கும். இதனால் வயிற்றைச் சுற்றி காணப்படும் பெல்லியும் குறைந்துவிடும்.

2. உப்பை:தவிர்க்கவும் உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் உப்பை அதிகம் சேர்த்தால், உடலில் தண்ணீரானது வெளியேறாமல், அதிகமாக தங்கிவிடும். எனவே உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பதை அறவே தவிர்க்க வேண்டும். வேண்டுமெனில் அதற்கு பதிலாக உணவில் சுவையைக் கூட்டுவதற்கு மூலிகைகள் மற்றும் மசாலாக்கள் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

தேன்: வயிற்றைச் சுற்றி தொப்பையை ஏற்படுவதற்கு, சர்க்கரையும் ஒரு காரணம். எனவே உண்ணும் உணவுப் பொருளில் சர்க்கரைக்கு பதிலாக தேனை சேர்த்துக் கொண்டால், தொப்பையை குறைவதோடு, உடல் எடையும் குறையும்.

3. பட்டை: தினமும் காலையில் காபி அல்லது டீ குடிக்கும் போது, அதில் சிறிது பட்டை தூளை சேர்த்து கலந்து குடித்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்கலாம். மேலும் உடல் எடையையும் ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம்.

4. நட்ஸ்: உடல் எடையை குறைக்க வேண்டுமெனில் உடனே கொழுப்புள்ள உணவுப் பொருட்கள் அனைத்தையும் நிறுத்திவிடுவோம். உண்மையில் அது தவறான கருத்து. ஏனெனில் உடலுக்கு ஆரோக்கியமான கொழுப்புக்கள் கிடைக்க வேண்டியது மிகவும் இன்றியமையாதது. அத்தகைய கொழுப்புக்கள் நட்ஸில் அதிகம் உள்ளது. எனவே ஸ்நாக்ஸ் நேரத்தில் வால்நட், பாதாம், வேர்க்கடலை போன்றவற்றை சாப்பிடுவது மிகவும் நல்லது.

5. அவகேடோ: அவகேடோவிலும் உடலுக்கு வேண்டிய கொழுப்பானது அதிகம் நிறைந்துள்ளது. மேலும் இதனை சாப்பிட்டால், அதில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள், வயிற்றை நிறைத்து, அடிக்கடி பசி ஏற்படுவதை தடுக்கும்.

6. சிட்ரஸ்: பழங்கள் பழங்களில் சிட்ரஸ் பழங்களை அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள வைட்டமின் சி, உடலில் தங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புக்களை கரைத்து வெளியேற்றிவிடும். இதனால் அழகான உடலை பெற முடியும்.

7. தயிர்: தினமும் உணவில் தயிரை சேர்த்து வந்தால், அதில் உள்ள குறைவான கலோரி மற்றும் ஊட்டசசத்துக்களால், எடை குறைவதோடு, தொப்பையும் குறைய ஆரம்பிக்கும்.

8. க்ரீன் டீ: அனைவருக்குமே க்ரீன் டீ குடித்தால், உடல் எடை குறையும் என்பது தெரியும். மேலும் பலரும் இந்த க்ரீன் டீயின் பலனைப் பெற்றுள்ளனர். எனவே தினமும் ஒரு டம்ளர் க்ரீன் டீ குடித்து வாருங்கள்.

9. சால்மன் மீன்: சால்மன் மீனில் ஒமேகா3 ஃபேட்டி ஆசிட் அதிகம் நிறைந்துள்ளது. இது உடலின் செயல்பாட்டிற்கு மிகவும் இன்றியமையாத ஒரு கொழுப்பாகும். ஆகவே இந்த மீனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், நாள் முழுவதும் வயிறு நிறைந்திருப்பதோடு, தொப்பை வராமலும் தடுக்கும்.

10. பெர்ரிப் பழங்கள்: பெர்ரிப் பழங்கள் கொழுப்பைக் குறைக்கும் ஒரு சிறந்த உணவுப் பொருள். ஏனெனில் அதில் வைட்டமின் சி என்னும் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளதால், பெல்லியால் அவஸ்தைப்படுபவர்கள், பெர்ரிப் பழங்களை அதிகம் சாப்பிட்டால், நல்ல பலனை விரைவில் பெறலாம்.

11. ப்ராக்கோலி: ப்ராக்கோலியிலும், மன அழுத்தத்தை அதிகரிக்கும் கார்டிசோலின் அளவைக் கட்டுப்படுத்தும் வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், இதனை சாப்பிட்டால், உடலில் உள்ள கொழுப்புக்களை ஆற்றலாக மாற்றும் பொருளானது உள்ளதால், பெல்லி பிரச்சனை உள்ளவர்கள் ப்ராக்கோலியை அதிகம் சாப்பிடுவது நல்லது.

12. எலுமிச்சை சாறு: வயிற்றைச் சுற்றியிருக்கும் தொப்பையை குறைக்க ஒரே சிறந்த வழியென்றால், தினமும் காலையில் எலுமிச்சை ஜுஸ் போட்டு குடிப்பது தான். அதிலும் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி, அதில் சிறிது உப்பு மற்றும் தேன் சேர்த்து குடித்தால், நிச்சயம் தொப்பை குறையும். அதிலும் இந்த செயலை தொடர்ந்து 1 மாதம் செய்து வந்தால், இதற்கான பலன் உடனே தெரியும்.

13. பூண்டு: எலுமிச்சை சாற்றினை விட இரண்டு மடங்கு அதிகமான சக்தியானது பூண்டில் உள்ளது. எனவே காலையில் 1 பல் பூண்டு சாப்பிட்டால், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்கள் கரைவதோடு, உடலில் இரத்த ஓட்டமும் சீராக இருக்கும்.

14. இஞ்சி: உணவுகளில் இஞ்சியை அதிகம் சேர்த்தால், அது தொப்பையை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் இதில் அதிகப்படியான ஆன்டிஆக்ஸிடன்ட்டுகளானது நிறைந்திருப்பதால், இன்சுலின் சுரப்பை சீராக வைத்து, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்.

மேற்கூறிய அனைத்தையும் நம்பிக்கையுடன் மேற்கொண்டால், நிச்சயம் தொப்பையை மற்றும் உடல் எடை விரைவில் குறையும். ஆனால் நம்பிக்கையின்றி மேற்கொண்டால், அதற்கான பலன் நிச்சயம் கிடைக்காது. 
 

டயட்டில் இல்லாமல் உடல் பருமனை குறைக்க வழிகள்

இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் என்பது பல பேர் சந்திக்கும் பிரச்சினை. அதனை கட்டுப்படுத்த பல கடுமையான டயட்டுக்களில் பலர் ஈடுபடுகின்றனர். ஏனெனில் கடுமையான டயட்டுக்களை பின்பற்றினால், உடல் எடையானது வேகமாக குறையும் என்ற எண்ணம் தான் காரணம்.

அதற்கு செய்ய வேண்டியதெல்லாம் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்வது தான். சரி, இப்போது உடல் எடையை குறைக்க கடுமையான டயட்டை பின்பற்றுவதை விட, கீழ் கூறிய எளிய வலியில்லா வழி முறைகளை பின்பற்றுங்கள். காலை உணவை தவிர்த்தால் கலோரிகளை எரிக்கலாம் என்று பலர் தவறாக நினைக்கின்றனர்.

ஆனால் அவ்வாறு தவிர்க்கும் போது ஏற்படும் பசியானது, மற்ற வேளைகளில் அதிகமாக உண்ணத் தூண்டும். காலை உணவை தவிர்ப்பவர்களை விட அதனை உண்ணுபவர்களுக்கே பி.எம்.ஐ குறைவாக இருக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது.

மேலும் பள்ளியிலோ அல்லது அலுவலகத்திலோ அவர்களால் தான் நன்றாக வேலை செய்ய முடியும். ஆகவே ஒரு கிண்ணம் நிறைய ஓட்ஸை நிறைத்து, அதில் பழங்கள் மற்றும் குறைவான கொழுப்பினை கொண்ட பால் பொருட்களை சேர்த்து காலையில் உண்டால் ஆரோக்கியமான நாள் தொடங்கும். சாப்பிடுவதற்கு 20 நிமிடம் என்று ஒரு நேரத்தை ஒதுக்கி மெதுவாக உண்ணுங்கள்.

இது டயட் மூலம் இல்லாமல் உடல் எடையை குறைக்க முதன்மையான வழியாகும். ஒவ்வொரு வாய் உணவையும் நிதானமாக மென்று உண்ணுங்கள். தினமும் இரவு ஒரு மணிநேரம் கூடுதலாக தூங்கினால், ஒரு வருடத்தில் 7 கிலோ வரை உடல் எடை குறையும் என்று மிஷிகன் பல்கலைகழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறியுள்ளார்.

இவரின் ஆராய்ச்சி படி, தூங்கும் போது உடல் எந்த வேளையில் ஈடுபடாமல் இருப்பதால், சுலபமாக 6 சதவீதம் வரை கலோரிகளை எரிக்கலாம். ஒவ்வொரு நாள் இரவும் ஒரே ஒரு காய்கறியை மட்டும் உண்ணுவதற்கு பதில் மூன்று காய்கறிகளை கலந்து உண்ணுங்கள். அதிக வகை இருந்தால் அதிகமாக உண்ணத் தூண்டும்.

அதனால் அதிகமான பழங்களையும், காய்கறிகளையும் உண்டு உடல் எடையை குறைக்கலாம். ஒவ்வொரு உணவிற்கு முன்பும் சூப் குடியுங்கள். இது பசியை ஆற்றி குறைவாக உண்ண வைக்கும். கெட்டியான சூப்பை தவிர்க்கவும். ஏனெனில் அதில் அதிக கொழுப்பும், கலோரிகளும் அடங்கியிருக்கும்.

உங்களுக்கு பிடித்த சிறிய அளவை கொண்ட பழைய ஆடைகளை கண் பார்வையில் படும்படி மாட்டி வைத்து, அதனை தினமும் பாருங்கள். இவ்வாறு சிறிய அளவுள்ள ஆடையை மனதில் வைத்து பாடுபட்டால், அதை அணியும் அளவிற்கு எடையை குறைக்கலாம். பிட்சா சாப்பிடும் போது மாமிசத்திற்கு பதில் காய்கறிகளை தேர்வு செய்யுங்கள்.

இதனாலும் கூட 100 கலோரிகளை எரிக்க முடியும். சோடா போன்ற சர்க்கரை கலந்த பானங்களை பருகுவதற்கு பதிலாக, தண்ணீர் அல்லது கலோரிகளற்ற பழச்சாறுகளை பருகுங்கள். இதனால் ஒரு 10 டீஸ்பூன் அளவிலான சர்க்கரையை தவிர்க்கலாம். குட்டையான அகலமான டம்ளரை பயன்படுத்துவதற்கு பதிலாக, நீளமான மெல்லிய டம்ளரை பயன்படுத்துங்கள்.

இது டயட் இருக்காமல், உங்கள் கலோரிகளை குறைக்க துணை புரியும். இதனை பின்பற்றினால் ஜுஸ், சோடா, ஒயின் அல்லது மற்ற பானங்கள் பருகும் அளவை 25%-30% வரை குறைக்கலாம். மதுபானத்தில் கார்போஹைட்ரேட் மற்றும் புரதத்தை விட, கலோரிகள் தான் அதிகமாக உள்ளது.

அது ஒருவரது சுய கட்டுப்பாட்டை இழக்க வைப்பதால் சிப்ஸ், நட்ஸ் மற்றும் இதர நொறுக்குத் தீனியை அதிக அளவில் உட்கொள்ள வைக்கும். தினமும் 1-2 டம்ளர் க்ரீன் டீ பருகுவதால் கூட உடல் எடை குறையும். யோகா செய்யும் பெண்கள், மற்றவர்களை விட குறைந்த எடையுடன் இருப்பார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது.

உடல் எடை குறைவிற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று புரியவில்லையா? சீரான முறையில் யோகா செய்பவர்களுக்கு சாப்பிடுவதில் ஒரு மன கட்டுப்பாடு ஏற்படும். உதாரணத்திற்கு, அதிக உணவு இருக்கும் ஒரு உணவகத்திற்கு சென்றாலும் கூட, அளவாக தான் உண்ணுவார்கள்.

ஏனெனில் யோகாவால் கிடைக்கும் அமைதி, உணவு உண்ணுவதில் கட்டுப்பாட்டை ஏற்படுத்தும். வாரம் ஐந்து முறையாவது வீட்டில் சமைத்து உண்ணுங்கள். நல்லபடியாக உடல் எடை குறைப்பவர்களின் இரகசியத்தில் இதுவும் ஒன்று என்று ஒரு ஆய்வு கூறுகிறது. இதை பற்றி யோசிப்பதை விட சமைப்பதே சுலபம்.

சிலர் இயற்கையாகவே ஒரு வாய் உணவிற்கும் அடுத்த வாய் உணவிற்கும் சிறிய இடைவேளை விடாமல் சாப்பிடுவார்கள். இந்த இடைவேளையில் பொறுமையாக இருங்கள், வேகமாக அடுத்த வாய் உணவை திணிக்காதீர்கள். பேசி கொண்டே பொறுமையாக தட்டை காலி செய்யுங்கள்.

இது வயிற்றை அடைக்காமல் பசியை போக்கும். பலர் இதை தவறவிடுவார்கள். நொறுக்குத் தீனி உண்ண தூண்டும் போது, சர்க்கரை இல்லாத வீரியம் அதிகமுள்ள சூயிங் கம்மை மெல்லுங்கள். வேலை முடிந்த நேரம், பார்ட்டிக்கு செல்லும் நேரம், தொலைகாட்சி பார்க்கும் நேரம் அல்லது இணையதளத்தில் உலாவும் நேரம் போன்றவைகள் எல்லாம் கணக்கில்லாமல் நொறுக்குத் தீனியை உண்ணத் தூண்டும் நேரமாகும்.

அதிலும் பிடித்த சுவையுள்ள சூயிங் கம்மை உண்ணுவதால் மற்ற நொறுக்குத் தீனிகளை மறப்பீர்கள். உணவு தட்டை 1-2 இன்ச்க்கு பதிலாக 10 இன்ச்சாக மாற்றுங்கள். தானாகவே குறைத்து உண்ண ஆரம்பித்து விடுவீர்கள். தட்டின் அளவு கூட கூட உண்ணும் உணவின் அளவும் அதிகரிக்கும் என்று கார்னெல் ப்ரையன் வான்சிக் கூறியுள்ளார்.

வேறு ஒன்றுமே செய்ய தோன்றவில்லையா? பேசாமல் நீங்கள் உண்ணும் அளவை 10%-20% வரை குறையுங்கள், உடல் எடையும் குறையும். வீட்டிலும் சரி, உணவகத்திலும் சரி நம் தேவைக்கு அதிகமாகவே பரிமாறப்படுகிறது. ஆகவே உண்ணும் உணவின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க அளந்து உண்ணுங்கள்.

உணவை நீண்ட நேரம் சமைத்தால், அதிலுள்ள ஊட்டச்சத்து அனைத்தும் வெளியேறிவிடும். போதுமான ஊட்டச்சத்து இல்லாத போது, உண்ட திருப்தி உங்களுக்கு ஏற்படாது. அதனால் மீண்டும் உண்ணத் தூண்டும். ஆகவே முடிந்த வரை பச்சை காய்கறிகள் மற்றும் சாலட்களை உண்ணுங்கள்.

அவித்த வேக வைத்த காய்கறிகள் மற்றும் மாமிசங்களை உட்கொள்ளுங்கள். குறிப்பாக மைக்ரோ ஓவனில் சமைப்பதை தவிர்க்கவும். உணவை உண்ணுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு பழங்களை உண்ணுங்கள். இதனால் பழங்கள் வேகமாக செரிமானம் ஆகும்.

வெறும் வயிற்றில் பழங்களை உண்டால், உடலின் நச்சுத்தன்மை நீங்கி, அதிக ஆற்றல் கிடைத்து உடல் எடை குறையும். கொழுப்புச்சத்து உள்ள மற்ற சாஸ்களை விட, தக்காளி சாஸில் கலோரிகளின் அளவு குறைவாக உள்ளது. இருப்பினும் அதனை அளவாக பயன்படுத்துங்கள்.

அதிக அளவில் சைவ உணவை உட்கொண்டால், அது உடல் எடை குறைய உதவி புரியும். அசைவ உணவை உண்ணுபவர்களை விட, சைவ உணவை உண்ணுபவர்கள் தான் வேகமாக ஒல்லியாவார்கள். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், பயறு வகைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. அதற்கு காரணம் அதில் அடங்கியுள்ள நார்ச்சத்து.

தினமும் 100 கலோரிகளை எரித்தால், எந்தவித டயட் முறையை பின்பற்றாமல் ஒரு வருடத்தில் 5 கிலோ வரை குறைக்கலாம். இந்த நடவடிக்கைகளில் ஏதாவது ஒன்றை பின்பற்றுங்கள்:

20 நிமிடங்களுக்கு 1 மைல் தூர நடை, 20 நிமிடங்களுக்கு தோட்டத்தில் களை எடுத்தல் அல்லது செடிகள் நடுதல், 20 நிமிடங்களுக்கு புல் தரையை ஒழுங்குபடுத்துதல், 20 நிமிடங்களுக்கு வீட்டை சுத்தப்படுத்துதல் அல்லது 10 நிமிடங்களுக்கு ஓடுதல். இரவு உணவை 8 மணிக்கு முன்பே உண்ணுங்கள்.

அதனால் உணவு நேரத்திற்கு முன்பு நொறுக்குத் தீனியை நொறுக்கமாட்டீர்கள். இதனை பின்பற்ற கஷ்டமாக இருந்தால், இரவு உணவை முடித்ததும் மூலிகை தேநீர் பருகுங்கள் அல்லது பற்களை துலக்குங்கள். இது கண்டதை உண்ண தூண்டாது.

தினமும் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதை நேர்மையாக எழுத ஆரம்பியுங்கள். இது தினமும் எவ்வளவு உண்ணுகிறீர்கள் என்பதை தெளிவாக எடுத்துரைக்கும். நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான காரியங்களில் இதுவும் ஒன்று. இதை பலர் செய்வதற்கு அலுத்து கொள்வதும் உண்டு.

அதற்கு காரணம் இதனை அவர்கள் ஒரு கடினமான வேலையாக பார்ப்பதால் தான். ஆனால் இதற்கு சில நிமிடங்களே ஆகும். சோடா குடிக்கும் பழக்கத்தை விட்டு விட்டீர்களா? அதிகமாக உண்ணும் பழக்கத்தை கைவிட்டு விட்டீர்களா? உங்களை நீங்களே பாராட்டி கொள்ளுங்கள். இதனால் உடல் எடையை குறைக்கும் பணியில் வெற்றிப் பெற போவது உறுதி.
 

பெண்களுக்கு ஜிம் பயிற்சி

ஜிம்களுக்கு சென்று உடற்பயிற்சி செய்வது ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருக்கும் நற்பயன்கள் தருவதாகும். ஆனால், இருபாலருக்கும் ஏற்ற சில உடற்பயிற்சிகள் உள்ளன. பெண்கள் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்வதால் அவர்களுடைய உடல் எடை வெகுவாக குறைந்து விடும்.

ஏரோபிக்ஸ், பளு தூக்குதல், கார்டியோ மற்றும் உடலை நீட்டி வளைத்து செய்யும் ஸ்ட்ரெச்சிங் போன்றவை பெண்களுக்கு மிகவும் ஏற்ற உடற்பயிற்சிகளாகும். இந்த உடற்பயிற்சிகள் பெண்களுக்கு வலிமையையும், வளைந்து கொடுக்கும் தன்மையையும் கொடுக்கின்றன.

மேலும், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் இவை உதவுகின்றன. இந்நாட்களில் மிகவும் முக்கியமாக செய்ய வேண்டிய விஷயங்களாக ஜிம் உடற்பயிற்சிகள் உள்ளன. எளிதாக செய்யக்கூடிய பயிற்சிகள் பலவும் இருப்பதால் பெண்கள் அதிக அளவில் உடலை வருத்தவும் தேவையில்லை.

முந்தைய தலைமுறைகளில் பெண்கள் அனுபவித்த பல உடல் ரீதியான வலிகளை போக்க இந்த உடற்பயிற்சிகள் உதவுகின்றன. உடல் வலிகள் போனாலும், மன அழுத்தத்திலிருந்து பெண்கள் இன்னும் மீளவில்லை. உடல் மற்றும் மனதனளவிலான ஆரோக்கியத்தைப் பராமரிக்க விரும்புபவர்கள் ஜிம்களில் உடற்பயிற்சி செய்ய வேண்டும். 
 

இடையின் அளவை குறைக்க உடற்பயிற்சி

முதலில் விரிப்பில் குப்புற படுக்கவும். பின்னர் காலின் முன் பாதத்தை தரையில் ஊன்றவும், கைகளை முட்டி வரை மடக்கி(படத்தில் உள்ளபடி)  தரையில் வைக்கவும். இப்போது உங்கள் உடல் எடை முழுவதுதையும் கை முட்டி, கால் முன்பாதம் தாங்கியிருக்க வேண்டும்.

தலையை தரையை பார்த்தபடி வைத்திருக்கவும். பின்னர் மெதுவாக உங்கள் உடலை மேலே தூக்கி பின் கீழே வரவும். இவ்வாறு இடைவிடாமல் 10 விநாடிகள் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது உடலை வளைக்க கூடாது. உடல் நேராக (படத்தில் உள்ளபடி) இருக்க வேண்டும். பின் சிறிது ஓய்வு எடுத்த பின்னர் மறுபடியும் செய்ய வேண்டும்.

இவ்வாறு தினமும் 5 நிமிடம் செய்தால் போதுமானது. ஒரு வாரத்தில் உங்கள் இடையின் அளவு 2 அங்குலம் குறைந்திருப்பதை காணலாம். இந்த உடற்பயிற்சி வயிறு மற்றும் பின் தசையை, உறுதிப்படுத்துகிறது. இந்த பயிற்சியை செய்யும் போது பின் தசைகள், கால்களின் தசைகளை கஷ்டப்படுத்தி செய்ய வேண்டும்.
 

தொப்பையை குறைக்க இயற்கை மருத்துவம்


தொப்பையை குறைக்க இயற்கையாக கிடைக்கும் பழங்கள், காய்கரிகள் மற்றும் கீரைகள் கொண்டு சுலபமாக செய்யலாம்.


நெல்லிக்காயை கொட்டை நீக்கி சுத்தம் செய்து, சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில்
குடித்து வந்தால் கொழுப்பு குறையும்.



அருகம்புல் சாரெடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர தொப்பை குறையும்.



கேரட்டுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் எடை குறையும்.



கரிசலாங்கண்ணி இலையை, பாசி பருப்புடன் சேர்த்து சமைத்து தினமும் சாப்பிட உடல் எடை குறையும்.



சோம்பை சுத்தம் செய்து தண்ணீர் விட்டு காய்ச்சி அடிக்கடி குடித்து வந்தால் உடல் எடை குறையும்.



மேலும் வெள்ளரி, நெல்லி, கோஸ், கொத்தமல்லி, முருங்கை, திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, பப்பாளி, அன்னாசி, எலுமிச்சை, கொய்யா,
புதினா, வெங்காயம், தர்பூசினி, பேரிக்காய், கறிவேப்பிலை, வாழைத்தண்டு இவைகளை சாறு எடுத்து குடிக்க உடல் எடை
குறையும்.


இவைகளை பின்பற்றி உங்களது தொப்பையை குறைத்திடுங்கள்.
 

உடல் எடையை குறைக்க ப்ளாக் டீ


பொதுவாக டயட்டில் இருப்போர் ப்ளாக் டீ தான் அதிகம் பருகுவார்கள், உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது ப்ளாக்
டீ.



* ப்ளாக் டீயில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து குடித்து வந்தால் உடலின் எனர்ஜி அதிகரிப்பதுடன், ஸ்டாமினா அதிகரிக்கும். மேலும்
அது உடலில் தங்கியுள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, உடல் எடை குறைய உதவியாக இருக்கும்.



* இதயத்திற்குள் இரத்த ஓட்டம் சீராக இருத்தல், கொழுப்புப் பொருட்களை இதயத்தில் அண்ட விடாமல் தடுத்தல், பல இதய
நோய்களைத் தவிர்த்தல், இதயத்தில் உள்ள தசைகளை ஆரோக்கியமாக வைத்திருத்தல் உள்ளிட்ட பல நன்மைகளுக்கு ப்ளாக் டீ
உதவுகிறது.



* ப்ளாக் டீயிலுள்ள பாலிஃபீனால்கள் புற்றுநோய் செல்களுக்கு எதிராக போராடுகிறது. ப்ளாக் டீயில் உள்ள TF-2 என்ற பொருள்
புற்றுநோய் செல்களை அழிப்பதுடன், பிற சாதாரண செல்கள் தாக்கப்படாமல் இருக்கவும் உதவுகிறது.



* ப்ளாக் டீயில் உள்ள டானின் என்ற வேதிப்பொருட்கள் நோய்கள் உருவாக காரணமான பலவிதமான வைரஸ் மற்றும்
பாக்டீரியாக்களை நம் உடலில் அண்டவிடாமல் தடுப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிரிக்கிறது.



* மூளையில் இரத்த ஓட்டத்தை அதிகமாக்குவதில் ப்ளாக் டீயில் உள்ள குறைந்த அளவிலான காப்ஃபைன் உதவுகிறது. தினமும் ப்ளாக்
டீயை தொடர்ந்து பருகுவதன் மூலம், நரம்பு மண்டலங்கள் வலுவாகும், ஞாபக சக்தி அதிகரிக்கும்.


* ப்ளாக் டீயைக் குடிப்பதால், நம் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புச் சத்துக்கள் குறைந்து விடுகிறது, உடல் எடையை
குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.